Monday, 19 January 2015

திருப்பாவை நோன்பு
நண்பர்களுக்கு வணக்கம்,இந்த கட்டுரை மார்கழியில் மங்கையரால் போற்றப்படும்
திருப்பாவை நோன்பை பற்றியது.எதற்காக மார்கழியில் மட்டும் திரு பாவை
நோன்பு,அதுவும் மங்கையரால், ரங்க மன்னார் என்ற பெருமாளுக்கு ஏன்? சிவனுக்கு
ஆகாதா? திருபாவை நோன்பு என்பது கன்னி பெண்கள் மாதம் 30 நாட்களும் விரதம்
இருந்து பெருமாளுடைய பெருமைகளை,புகழை ,காதலை பாசுரங்களாக பாடியதாக சொல்ல
பட்டிருக்க்றது
சரி அது ஏன் மார்கழி,சித்திரையில் ஆகாதா? ஆடியில் செய்தால் என்ன? மாசியை
ஒதுக்கியது ஏன்? நம் முன்னோர்கள் எதையும் காரண காரியத்தோடு தானே செய்து
இருப்பார்கள் அது என்ன காரண காரியம் என்ற ஏன் ஆராய்சியில் நான் உணர்ந்த
விஷயங்களை என் நண்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
இதற்கான முத்தாய்ப்பு விஷயங்கள் தான் முந்தைய கட்டுரை யான மாதங்களும்,மாற்றங்களும்,வழிபடல்களும்

மார்கழியில் பெண்மை (சுரோணித தன்மை) முழு வீரியத்தில் இருக்கிற காலம்.புரட்டாசியில் ஆண்மை(சுக்ல தன்மை) முழு விரியத்தில் இருக்கிற காலம்.இதற்க்கு எதிர் திசையில் மார்கழியில் பெண்மை வீரியம் பெரும்.நம் முன்னோர்கள் நம் பண்பாடு,கலாசாரம்,நாகரீகத்தின் அடித்தளம் ஆகியவற்றை இயக்க தன்மையான சக்திவடிவதில் இருக்கிற பெண்ணில் வைத்து பெண்மையை போற்றி நம் பெருமையை காத்தனர்.அப்படிப்பட்ட பெண்மை இயற்கையின் சுழற்சியில் வலிமை பெற்று வீர்யம் அடைந்து நம் முன்னோர்கள் வகுத்த தன்மைகளுக்குள் இல்லாமல் மாறுபட்ட தன்மைக்குள் இயற்கையின் தூண்டுதலால் சென்று விட கூடாது என்ற நோக்கில் வலிமை பெற்றிருக்கிற வீரியத்தை பிரம்ம முகூர்த்த குளியல்,விரதம், சுக்கிர தன்மையான பெருமாள் போன்ற கணவனை அடைய வேண்டும் என்று கன்னி பெண்களை தவம் கொள்ள செய்து, திருமணமான பெண்களுக்கு கணவனையே கடவுளாக கொண்டு கணவனிடத்தில் தினமும் காலில் விழுந்து வணங்கி கடவுளாக வரித்து வலிமையை பெற்று இருக்கிற காமத்தை முறை படுத்தி பெண்களின் மண வாழ்க்கையை மேன்பட செய்தனர்.கன்னி பெண்களின் வீரியத்தை பிரம்ம முகூர்த்தமான அதிகாலையில் குளித்து ஈர உடையுடன்,பெருமாளை நினைத்து அவர் புகழ்,பெருமை,காதல் போன்ற விசயங்களை பாடல்களாக பாடி வீரியத்தை கடவுளின் பால் திருப்பியதுதான் திரு பாவை நோன்பு.கன்னி பெண்களுக்கு அடுத்து வருகிற தை மாதம் திருமண காலம் நல்ல ஆண்மகனை கணவனாக அடைந்து அப்பெண் மண வாழ்க்கையை வளமுடன் வாழ வேண்டியே இந்த நோன்பு ஆண்டாளை கன்னி பெண்ணாக கொண்டு பாவை நோன்பு எடுத்து ஒவ்வரு நாளைக்கும் ஒவ்வொரு பாசுரங்களாக 31 பாசுரங்கள் பாடி பெருமாளை கணவனாக அடைந்ததாக சொல்ல படுகிறது. மேலும் இத்தன்மை நம் முன்னோர்களின் கலாச்சார வாழ்வியல் முறையில் ஒன்றான திருப்பாவை நோன்பை பெண்கள் கடைப்பிடித்து பெருமாளை மனமுருகி பிராத்தித்து ,ஆராதித்து வளம் பெறவே ஏற்படுத்தினர். நாமும் நம் முன்னோர் வழி நடப்போம் வளம் பெறுவோம் மிக பெரிய விஷயத்தை கத்தி மேல் நடப்பது போல் எழுதி இருக்கிறேன். இன்னும் வரும்....அஸ்ட்ரோ பாபு

1 comment:

  1. பரவாயில்லை நான் என்னமோன்னு பயந்துகொண்டு தான் படித்தேன்

    ReplyDelete