Thursday, 8 January 2015

சனி பெயர்ச்சி யாகம்.
நண்பர்களுக்கு வணக்கம் இந்த கட்டுரை சனி பெயர்ச்சி கட்டுரையின் தொடர்ச்சி.சனி பெயர்ச்சி என்ன? சனி பெயர்ச்சி என்ன செய்யும்? என்பதை நேற்று பதிந்து இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த சனி பெயர்ச்சி யாகம் நடத்துவது எதற்கு, என்ன பலன் அளிக்கும். என்பதை பற்றிய என் பார்வையை இங்கே பதிகிறேன் இக்கட்டுரை மூலமாக.
சனி பெயர்ச்சி என்பது நம் சூரிய குடும்பத்தில் இருக்கிற சனி கிரகத்தின் நகரவே. அதாவது அக்கிர்கத்தின் பயணம் ஒரு ராசி இலிருந்து அடுத்த ராசிக்கு நகர்வது. இப்படி நகர்கிற நகர்வை இங்கு செய்கிற யாகங்கள் தடுத்து நிறுத்தி விடுமா? அல்லது மேலிருந்து அம்பு மழை பொழிய போகிறது என்ற மக்களின் சனி பற்றிய பயத்தை போக்கி யாகம் செய்தவுடன் பூ மழை பொழியவா போகிறது. பின் எதற்கு இந்த யாகம்?.
புரிய வில்லை எனக்கு ஏதுமறியா மக்களின் அறியாமையை அல்லது பயத்தை வியாபாரமாக்குவதை தவிர வேறொன்றும் இருப்பதாக எனக்கு தெரிய வில்லை.
யாககங்களில் உச்சரிக்கும் மந்திரங்களும் உபயோக படுத்துகிற பொருட்களும் சில மாற்றங்களை நம் உடலில் கொண்டு வரும் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்களே அது பொய்யா? என் வினா எழும். உண்மைதான் மந்திரங்களும்,யாக பொருட்களும் மாற்றத்தை கொடுக்கும்தான். ஆனால் அதை தொடர்ந்து செய்ய வேண்டும் எந்த ஒரு மந்திரமும் 48 திதி தொடர்ந்து உரு ஏற்ற பட வேண்டும் என்பதனையும் நம் முன்னோர்களே தான் கூறி சென்று இருக்கின்றனர். 1,2, மணிநேரம் ஜெபிக்கிற மந்திரங்கள் ஒன்றும் மாற்றங்களை செய்துவிட போவதில்லை.48 திதி என்பதே முதல் 16 திதி நம்முள் இருக்கிற மாறுபட்ட தன்மையை வெளியே எடுக்கும் அடுத்த 16 திதி நமக்கு தேவை படுகிற விசயத்தை உள்ளே தள்ளும். கடைசி 16 திதி உள்ளே தள்ளிய விசயத்தை ஸ்திர படுத்தும் இது உரு ஏற்றுவதற்கான அடிப்படை. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என் நோக்கமே தவிர யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது அல்ல. ஆதலால் பணத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் சனியை பற்றி புரிந்து கொண்டு சனியை முழுமையாய் அனுபவியுங்கள் வாழ்வியல் அனுபவங்களை பெறுங்கள் ....இன்னும் வரும் .....அஸ்ட்ரோ பாபு

No comments:

Post a Comment