Thursday, 8 January 2015

வாஸ்து பாகம் 2

அன்றைய கால மனிதர்களின் வாழ்வியல், வசிப்பிடங்கள்,மனித அறிவு திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட வாஸ்து அமைப்புகள் இன்றைய காலத்திற்கு ஒவ்வாத இடங்களில் பொயக்கிறது. அதனால் மையமே தவறு என்ற முடிவுக்கு இன்றைய தலை முறையினர் வருவதும் தவறு. இன்றைக்கு இருக்கிற அனைத்து தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தினாலும் அறிய முடியா சூட்சும சூத்திரத்தை நம் முன்னோர் தம் தவ வலிமையால் நமக்கு அருளியுள்ளனர்.
சரி பாகம் 1 ன் தொடர்ச்சியை பாப்போம் .
வாஸ்துவில் திசைகள் இணைகிற திக்குகளுக்கு முக்கியதுவம் கொடுத்து அத்திக்குகளில் சக்தி ஓட்டம் மோதும்போது எவ்வித தன்மையை உருவாக்குகிறதோ அதை பயன்படுத்தி அத்திக்குகளில் அறைகளை அமைத்து சிறப்புடன் வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள். அதன் படி.
வடகிழக்கு -- ஜல மூலை-- கிணறு, தண்ணீர் தொட்டி,நீர் தேக்கம்
தென் மேற்கு -- குபேர மூலை -- சேமிப்பு, தானிய கிடங்கு, கஜானா,படுக்கை அறை
தென் கிழக்கு -- அக்னி மூலை ---, சமையல் கூடம்,எரி சக்தி,பொறி
வடமேற்கு --- வாயு மூலை-- வெளி கதவு,புகை போக்கி,கழிவு வெளியேற்றம்,
வட கிழக்கு- ஜல மூலை :- ஜல மூலையில் கிணறு வெட்டி நீரை தேக்கி வட கிழக்கில் வருகிற சக்தியின் ஓட்டத்தில் இருக்கிற மூர்க்கத்தை தணித்து அல்லது, எதிர மறை சக்திகளை களைந்து தூய்மை படுத்தி வசிப்பிடத்தினுள் அனுப்பினர்.நீரின் தன்மையே நல்ல சக்திகளை உள்ளிழுத்து சக்தியை தக்க வைக்கும் மேலும் கடத்தும் தன்மையுடைதே. அதனால் தான் அப்பகுதியில் எத்தடையும் இல்லாமல் திறந்து இருக்க வேண்டும்.
தென் மேற்கு கன்னி மூலை :- இப்பகுதி சற்றே மேடாக அமைக்க வேண்டும். வட கிழக்கில் இருந்து வரும் சக்தி முழு வேகத்துடன் தாக்காமல் மெல்ல மெல்ல மேலேறி தென் மேற்கை அடைந்து அங்கேயே அச்சக்தியை பெற்று தக்க வைக்க தென் மேற்கில் வசிப்பிடத்தின் மேற்கூரையில் மேல் எடையை கூட்டி அவ்வறையில் ஒரு அழுத்தத்தை உருவாக்கி
அச்சக்தியின் முழு தன்மையையும் அங்கு பெற்றனர்.இந்த இடம் சக்தியை சேமித்து வைக்கிற இடமாக கொண்டனர் தானியங்கள் இருக்கிற இடமாகவும் கொண்டனர். இசக்தியில் தானியங்கள் முழு வலுவுடனும் நீண்ட நாள் உயிர் தன்மையுடனும் இருக்கும். நாளடைவில், இந்த பயன்பாடு செல்வத்துக்கும் சுகம் பெறுவதற்கும் ஆன இடமாக கொள்ளபட்டது. அதனால் தான் இப்பொழுது படுக்கை அறையை அங்கே தீர்மானிக்கிறார்கள்.
அக்னி மூலை :- தென் மேற்கில் சேமித்து அல்லது சிறிது தங்கி வருகிற வலுவிழந்த சக்தி ஓட்டத்தை வெப்பத்தின் மூலம் மீண்டும் வலுபெற செய்து, அதாவது அங்கே சமையல், நெல் அவிப்பு கூடம், சூலை போன்றவை அமைத்து சக்தி ஓட்டத்தின் தன்மையை மேம்படுத்தி, பல படுத்தி வட மேற்கில் அனுப்பினர்.
வாயு மூலை:- இவ்வாறு வலுபெறுகிற சக்தி ஓட்டம், வட கிழக்கிலிருந்து, தென் மேற்காக செல்லும் சக்தி பாதை யை கடந்து வட மேற்கிற்கு பயணித்து வெளியேறும்.அவ்வாறு வெளியேறுகிற பொழுது அவ்வசிபிடத்தில் இருக்கிற அனைத்து சூட்சும கழிவுகளையும் வெளியே கொண்டு போகும், இங்கே புகை போக்கி, கழிப்பிடங்களை அமைத்தனர்.
இச்சக்தி ஓட்டங்கள் தடை படாமல் இருக்க வேண்டும். தவிர்க்க இயலாவிடில் கதவுகளோ ஜன்னல்களோ வைத்து திறந்து வைக்க வேண்டும்.
மேற்கூறிய அனைத்தும் சக்தி ஓட்டத்தின் தன்மைகளே இவ்வோட்டதின் தன்மை மனிதனுள் சுவாசமாக உள்சென்றுதான் அவ்வசிபிடத்தில் வாழும் மனிதனை இயக்குகிறது. சுவாசம் சீர்படும் பொழுது மனித உடம்பின் ஸ்தூல.சூட்சும இயக்கங்களும் பலம் பெரும் அதன் பலன்களான செயல்களும் தீர்க்கம் பெறும்.
இச்சக்தி ஓட்டம் அவ்வீட்டில் வசிக்கிற மனிதனை இயக்கம்(ஜலம்) வீரியம்(குபேர), செயல்(அக்னி) போன்ற தன்மைகளை கொடுத்தும்,அதிக படுத்தியும், வாயு மூலையில் மீண்டும் பிரபஞ்ச சக்தியோடு கலக்கிற சூத்திரத்தை தான் வாஸ்து என நம் முன்னோர்கள் நமக்கு அருளியுள்ளனர்.
இச்சூத்திரத்தையெ அக்காலத்தில் கூட்டம், கூட்டமாக வசித்த மக்களின் பகுதிகளுக்கும்,தேசத்திற்கும் விஸ்தரித்தும் சொன்னார்கள்.
வாஸ்து சாஸ்திரத்தை கிரகங்களோடு ஒப்பிட்டு ஒரு படத்தையும் இணைத்துள்ளேன். இதன் விளக்கங்களை அடுத்த பதிவில் பதிகிறேன்
மேற்கூறிய யாவும் அடிப்படை அறிவியல் விஷயங்கள் மட்டுமே. ஒரு பெரிய சாஸ்த்திரத்தில் எனக்கு தெரிந்த அறிவியல் விசயங்களை சுருக்கி கொடுத்திருக்கிறேன். இவற்றை அடிப்படையாக கொண்டு, உங்கள் இல்லங்களை வடிவமையுங்கள். வளம் பெறுங்கள் ....... இன்னும் வரும் ...... அஸ்ட்ரோ பாபு.

No comments:

Post a Comment