Thursday, 8 January 2015


வாஸ்து பாகம் 1

நண்பர்களுக்கு வணக்கம்,
நெடுநாள் கழித்து உங்களுடன் இக்கட்டுரை மூலமாக தொடர்பு கொள்வதில் மகிழ்வுறுகிறேன். இக்கட்டுரை இன்றைய காலத்தில் பல்வேறு சிந்தனைகளுக்கும் ,உண்மை,இல்லை, சும்மாப்பா, என்று விவாதிக்கிற வாஸ்துவின் அறிவியல் விசயங்களை பற்றியது.நான் எழுதுகிற எவ்விசயமுமே விதிகள் ஆகா. இவை அனைத்தும் நான் உணர்ந்த அறிவியல் உண்மைகளை அடிப்படையாக கொண்டதே.அதை உங்களிடம் இம்முகனூல் மூலமாக பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுத்த என் குரு நாகாவிற்க்கு நன்றி கூறி தொடர்கிறேன்.
இப்பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து விசயங்களும் பஞ்ச பூதங்களான
நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் இவற்றின் அடிப்படையில்தான் இயங்குகின்றன என்பதை என் முந்தைய கட்டுரைகளில் தெளிவு பெற எழுதியுள்ளேன்.நாம் வாழுகிற நிலத்தில் மற்ற நான்கு பூதங்களின் தன்மைகள் எவ்வாறு இருந்தால் அவை சிறப்பாக நம் மனித குலத்திற்கு பயன் பெறும் ,குறிப்பாக நம் வசிப்பிடங்களில் அவற்றை நம் முன்னோர் பயன்படுத்தி சில சூத்திரங்களை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் நம் வசிப்பிடங்கள் இவ்வாறு அமைய பெற்றிருக்க வேண்டும் என கூறி சென்று உள்ளனர்.
இந்த பூமி 23 டிகிரி சாய் கோணத்தில் கிழக்கு மேற்காக தன்னை தானே சுற்றி வருகிறது என்பதை நாம் அறிந்ததே.அவ்வாறு சுற்றுகிற தன்மையின் வேகமும்,வெற்றிடத்தில் வெறுமே கிடக்கிற மற்ற பூதங்களின் அமைப்புகளும் உள்ளடக்கியோ அல்லது அவற்றின் சக்திகளை தூண்டியோ சில வேறு வடிவமான சக்தி வடிவங்களை தோற்று விக்கும்.அவ்வாறு தோற்று விக்கின்ற சக்தி வடிவங்களை நாம் வசிக்கிற இடங்களில் நம் மனித குலம் சீராக,உருவாவதற்கு எவ்வாறு பயன் படுத்தி கொள்வது என்று முன்னோர் வகுத்த சூத்திரம் தான் வாஸ்து.
இச்சக்தி காற்றை ,மற்றும் சூட்சும ஆன்மாவாகிய சூரியனின் துணையுடன்,நம் வசிப்பிடமாகிய வீட்டில் சூரியன் எழுகின்ற கிழக்கு பக்கத்தில் உள்பெறவேண்டும். அதிலிலும் நம் பூமியின் சாய் கோண அச்சின் காந்த புலத்தின் மூலமாக இருக்கிற வடக்கும்,சூரியன் வெளிவருகிற திசையும் இணைகிற வடகிழக்கு பக்கம் எவ்வித இடையூறும் இல்லாமல் உட்புக செய்து அவ்வாறு உட்புகிற காற்றும், சூரியனின் வெளிச்சமும், கலந்த பிரபஞ்ச சக்தியின் பஞ்சபூத கலவைகளும் நேர் திசையில் பயணிக்கும்.அதாவது தென்மேற்கு மூலையில், அம மூலையில் இருக்கிற சுவர்களில் மோதி அச்சக்தி தென் கிழக்காக திரும்பும். இப்பயணத்தில் இச்சக்தி தென் கிழக்கில் மோதி திரும்பும்போது தன வேகம் குறைந்து இருக்கும். குறைந்து இருக்கிற அச்சக்தி ஓட்டத்தை அங்கு சமையல் அறை அமைத்து அதில் கிடைக்கும் வெப்பத்தால் வேப்பமேற்றுகிற போது மேலும் வலுபெற்று எதிர் திசையில் பயணித்து வட மேற்கை நோக்கி வலுவுடன் பயணிக்கும். அவ்வாறே அச்சக்தியை வட மேற்கில் வெளியே அனுமதித்து வெளியேற்ற வேண்டும்.
சுருக்கமாக சொல்லின், மேற்கூறிய சக்தியை வட கிழக்கில் பெற்று தென் மேற்கில் உள்வாங்கி, தென் கிழக்கு நோக்கி திருப்பி,தென் கிழக்கில் வலுபெற செய்து வட மேற்கில் வெளியேற செய்யவேண்டும். இச்சக்தி செல்கின்ற பாதையில் எவ்வித தடைகளும் இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்.ஏனெனில் அச்சக்தி ஓட்டத்தில் தடை ஏற்பட்டால் ஓட்டம் முறிவு ஏற்பட்டு மாற்று விளைவுகளை ஏற்படுத்தும். இசக்தி ஓட்டத்தினை நான் உணர்ந்த விதமாகவே படம் வரைந்து இணைத்துள்ளேன்.மேற்குறிய விசயங்கள் வாஸ்துவின் அடிப்படை அறிவியல் விசயங்கள் மட்டுமே.மக்கள் எளிதாக புரிந்து கொள்ளவேண்டும் நோக்கில் முடிந்தவரை சுருக்கி எளிதாக கொடுத்துள்ளேன்
இச்சக்தி ஓட்டத்தின் பயன்களையும் எவ்விடத்தில் எவ்விதமான சக்தியை தோற்றுவிக்கிறது என்பதனையும் அடுத்த பதிவான வாஸ்து பாகம் 2 இல் வரும்... இன்னும் வரும்........ அஸ்ட்ரோ பாபு

No comments:

Post a Comment