Monday, 19 January 2015

காலங்களும்,மாற்றங்களும், வழிபாடுகளும்
நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை நம் முன்னோர்கள் இயற்கையில் ஏற்படுகிற கால மாற்ற்களையும், அதன் விளைவான தட்ப வெப்ப மாறுதல்களையும் எவ்வாறு கையாண்டு இயற்கையை தமக்கு சாதகமாக்கி மனித வாழ்க்கையை மேம்படுத்தி வாழ்ந்தார்கள் என்பதை பற்றியது.
சூரிய வட்ட பாதையில்.பூமி தன்னைத்தானே சுற்றி கொண்டு சூரியனையும்சுற்றுவதும்,அந்த வட்ட பாதை ஒரு நீள் வட்டத்தில் இருக்கிறது என்பதையும்அந்த நீள் வளைவு பாதை ஒவ்வொரு 30 டிகிரி கோணமும் ஒரு வளைவாக வளைகிறதுஎன்பதையும் மொத்தம் 360 டிகிரி யாக மொத்த நீள்வட்ட பாதையும் இருக்கிறது.என்பதும் நாம் அறிந்ததே இதில் 30 டிகிரி பாதையை பூமி கடக்க 30 நாட்கள் எடுத்து கொள்கிறது.அதாவதுஒரு நாளுக்கு பூமி தன்னை தானே சுற்றி கொண்டு நீள் வட்ட பாதையில் 1 டிகிரி
கடக்கிறது என்பதை ஏன் முந்தைய கட்டுரைகளில் மிக தெளிவாக எழுதி உள்ளேன்.பூமி கிழக்கு மேற்காக தன்னைத்தானே சுற்றி கொண்டு அதன் சுற்று பாதையின் 0டிகிரியான வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பயணத்தை துவக்கி சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றி வருகையில் ஒவ்வொரு வளைவு மூலையிலும் பூமியின்சுழற்சியும், பூமி சுற்று பாதையில் இருக்கிற சூரியனின் விலக்கு சக்தி மற்றும் காந்த சக்திகளின் கலவைகள் ஒவ்வொரு விதமான சக்திகளை
வெளிபடுத்துகிறது.அதாவது 0 டிகிரி யான மேஷத்தில் துவங்குகிற இடம் சித்திரை 1 இல், ரிஷபம் கடந்து மிதுனத்தில் ஆடியில்ஒரு வளைவை தாண்டுகிறபொழுது ஒரு சக்தியையும்,கடகம்,சிம்மம் கடந்து புரட்டாசியில் கன்னியில் நுழைந்து அவ்வளைவை
தாண்டுகிரபோது ஒரு பரிமாணத்தையும் துலாம்,விருச்சிகம் கடந்து
மார்கழியில்,தனுசுவில் வேறு ஒரு சக்தி டிவத்தையும்,மகரம்,கும்பம் கடந்து பங்குனியில்,மீனத்தில்,நுழைகிறபோது வேறு ஒரு சக்தியையும்,இந்த பூமி சூரிய பாதையில் உண்டாக்கி உள்வாங்குகிறது.
அப்படி பார்க்கையில் ஆடி-மிதுனம்,புரட்டாசி-கன்னி,மார்கழி-தனுசு,பங்குனி-மீனம் என்ற மாத கணக்கின் பூமி ராசிகளை கடக்கும் காலம், தட்ப வெப்ப துவக்க காலங்களாகவும் இது
பிரிகிறது, அதாவது, இளவேனிற்காலம் துவக்கம் ,(ஆடி)
,மழைக்காலம் துவக்கம் (புரட்டாசி),குளிர்(மார்கழி),வெய்யில் கால துவக்கம் (பங்குனி), இம்மாறுதல்கள் இப்பூமியில் உள்ள உயிரினங்களில் எந்தவிதமான மன,உடல்,தாக்கத்தை
ஏற்படுத்துகிறதோ அதை உணர்ந்து அதிலிருந்து மக்களை காக்க ஒவ்வொரு விதமான நுட்பங்ககளை நம் முன்னோர்கள் கையாண்டு.அத்தாக்கத்தை மனித இனத்திற்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்கள். அந்த சாதக ரகசியத்தை கடவுள் வழிபாடுகளாக மாற்றி மக்களுக்கு கொடுத்தார்கள்.இந்த நான்கு பருவ நிலைகளில் இரண்டு பருவம் சூரியனின் உத்திராயண காலத்திலும்,இரண்டு பருவம் சூரியனின் தட்சயான காலத்திலும் இயற்க்கை நமக்கு வழங்குகிறது.
ஆடி,பங்குனி (மிதுனம்) ,அம்மன், கிராம தேவதைகள் வழிபாடு,புரட்டாசி,மார்கழி (கன்னி,தனுசு) பெருமாள் வழிபாடு. என மக்களை ஆன்மீக சிந்தனைக்குள் கொண்டு சென்று மன உடல் நிலை மாற்றங்களை மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி,அந்த மாதங்களில் எவ்வித மாறுபட்ட விசயங்களும் நடக்காதவாறு பார்த்து கொண்டார்கள்.வெயிலின் தாக்கத்திலிருந்து உடம்பும் மனசும் மாறுகிற காலம் ஆடி,காற்றடிக்கிற காலம்,கிழக்கு திசையின் காந்த சக்தி தாக்குகிற காலம்,விவசாயிகள் விதையிடுகிற காலம். பூமி நன்றாக காய்ந்து மண் விரிந்து நீருக்காக ஏங்குகிற காலம். உடம்பு மனசு வெயிலில் சிரமபட்டு ஒரு அலுப்பை மனத்திற்கும் ,உடம்பிற்கும் கொடுக்கும்.ஆதலால் தான் எவ்வித புது முயற்சிகளும் எடுத்தால் தீவிர மனநிலை இல்லாத பொழுது அதில் தீவிரம் மற்றும் தீர்க்கம் இருக்காது என்பதால் தான் புது வித முயற்சிகள் எடுக்காமல் அயர்ந்து இருக்கிற மனதை உற்சாக படுத்த தூண்டு சக்தியான மாரியம்மன் வழிபாடு, சூட்டில் ஏற்படும் நோய்களை தணிக்க வேப்பிலை,இளநீர்,மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்தியும், வாத்தியங்களில் உற்சாகம் ஏற்படுகிற சப்தங்களையும் ஏற்படுத்தி ஊக்க சக்தியான மாரியம்மனை வழிபட செய்து அடுத்த பருவத்திற்கு தயாரானார்கள்
அதேபோல் புரட்டாசி,மழைகால துவக்கம் நீரில் பூமி நனைந்து குளிர்ந்து விதைகள் முளைத்து வருகிற காலம்.மனிதனுள்ளும் அம்மாற்றம் ஏற்படும்.ஊழிக்கால காற்று மனித மனத்திலும் உடம்பின் உள்ளும் இன பெருக்கத்திற்கான மாற்றம் நிகழும். ஆண்களுக்கு சுக்கிலம் வலிமை பெரும் காலம்.ஆண்களின் இனபெருக்க சக்தி இக்காலத்தில் வீரியத்துடன் இருக்கும். சுக்கிர சக்தியான பெருமாளை வழிபடல்,பிரசாதமான புளி, வெல்லம் சார்ந்த உணவு காமத்தை தூண்ட சந்தனம்,சம்பங்கி பூ,பச்சை கற்பூரம் போன்றவை இன பெருக்க செயலான காமத்தை செம்மை படுத்தி நல்ல வாரிசுகளை பெற ( மேலும் விவரத்திற்கு புரட்டாசியில் ஏன் பெருமாள் வழிபாடு என்ற ஏன் கட்டுரை படிக்கவும்) என ஏற்படுத்தினார்கள்
மார்கழியில் நடுங்குளிர் காலம்,பயிர்கள் வளர்ந்து,தன்பயனை தருகிற முக வாயில் காலம், மனிதருள் பெண் சக்தியும்,சுரோணிதம்,தூண்டி காமம் வலிமையையும் தீவிரமும் பெற்றிருக்கிற காலம்,சுரோணிதம் (பெண்மை) வலிமை பெற்றிருக்கிற காலம். ஆதலால்தான் இங்கு வலிமையை தூண்டுகிற உளுந்து,பச்சை அரிசி,நவ தானியங்கள், பயன்படுத்தி செய்கிற களி, இதில் கிடைக்க கூடிய ப்ரோட்டின் சக்தி தசை வலிமையை தரகூடிய மிக சிறந்த விஷயம்.
பங்குனி வெப்ப கால துவக்கம், குளிரில் அடங்கி கிடந்த மனமும் உடலும் உற்சாகத்தில் பீறிடும் காலம். தையில் அறுவடை முடித்து மாசியில் இரண்டாம் பருவ விதைப்பை முடித்து பங்குனியில் ஊரை சுத்தம் செய்து கிராம காவல் தெய்வ வழிபாடுகள், சக்தி இயக்கமான அம்மன், முருகன் போன்ற தெய்வ வழிபாடுகள் மூலமாகவும்,பானகரம்,சக்கரை பொங்கல்,வெள்ளம்,பஞ்சாமிர்தம் போன்ற உணவுகளின் மூலமாகவும் அடுத்து வருகிற கடின வெயிலை எதிர்கொள்ள மனதையும் உடம்பையும் எதிர் கொள்ள தயாராக்கி கொண்டார்கள். இதன் தொடர்ச்சி திருப்பாவை நோன்பு கட்டுரையில் வரும் .... இன்னும் வரும்.... அஸ்ட்ரோ பாபு

திருப்பாவை நோன்பு
நண்பர்களுக்கு வணக்கம்,இந்த கட்டுரை மார்கழியில் மங்கையரால் போற்றப்படும்
திருப்பாவை நோன்பை பற்றியது.எதற்காக மார்கழியில் மட்டும் திரு பாவை
நோன்பு,அதுவும் மங்கையரால், ரங்க மன்னார் என்ற பெருமாளுக்கு ஏன்? சிவனுக்கு
ஆகாதா? திருபாவை நோன்பு என்பது கன்னி பெண்கள் மாதம் 30 நாட்களும் விரதம்
இருந்து பெருமாளுடைய பெருமைகளை,புகழை ,காதலை பாசுரங்களாக பாடியதாக சொல்ல
பட்டிருக்க்றது
சரி அது ஏன் மார்கழி,சித்திரையில் ஆகாதா? ஆடியில் செய்தால் என்ன? மாசியை
ஒதுக்கியது ஏன்? நம் முன்னோர்கள் எதையும் காரண காரியத்தோடு தானே செய்து
இருப்பார்கள் அது என்ன காரண காரியம் என்ற ஏன் ஆராய்சியில் நான் உணர்ந்த
விஷயங்களை என் நண்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
இதற்கான முத்தாய்ப்பு விஷயங்கள் தான் முந்தைய கட்டுரை யான மாதங்களும்,மாற்றங்களும்,வழிபடல்களும்

மார்கழியில் பெண்மை (சுரோணித தன்மை) முழு வீரியத்தில் இருக்கிற காலம்.புரட்டாசியில் ஆண்மை(சுக்ல தன்மை) முழு விரியத்தில் இருக்கிற காலம்.இதற்க்கு எதிர் திசையில் மார்கழியில் பெண்மை வீரியம் பெரும்.நம் முன்னோர்கள் நம் பண்பாடு,கலாசாரம்,நாகரீகத்தின் அடித்தளம் ஆகியவற்றை இயக்க தன்மையான சக்திவடிவதில் இருக்கிற பெண்ணில் வைத்து பெண்மையை போற்றி நம் பெருமையை காத்தனர்.அப்படிப்பட்ட பெண்மை இயற்கையின் சுழற்சியில் வலிமை பெற்று வீர்யம் அடைந்து நம் முன்னோர்கள் வகுத்த தன்மைகளுக்குள் இல்லாமல் மாறுபட்ட தன்மைக்குள் இயற்கையின் தூண்டுதலால் சென்று விட கூடாது என்ற நோக்கில் வலிமை பெற்றிருக்கிற வீரியத்தை பிரம்ம முகூர்த்த குளியல்,விரதம், சுக்கிர தன்மையான பெருமாள் போன்ற கணவனை அடைய வேண்டும் என்று கன்னி பெண்களை தவம் கொள்ள செய்து, திருமணமான பெண்களுக்கு கணவனையே கடவுளாக கொண்டு கணவனிடத்தில் தினமும் காலில் விழுந்து வணங்கி கடவுளாக வரித்து வலிமையை பெற்று இருக்கிற காமத்தை முறை படுத்தி பெண்களின் மண வாழ்க்கையை மேன்பட செய்தனர்.கன்னி பெண்களின் வீரியத்தை பிரம்ம முகூர்த்தமான அதிகாலையில் குளித்து ஈர உடையுடன்,பெருமாளை நினைத்து அவர் புகழ்,பெருமை,காதல் போன்ற விசயங்களை பாடல்களாக பாடி வீரியத்தை கடவுளின் பால் திருப்பியதுதான் திரு பாவை நோன்பு.கன்னி பெண்களுக்கு அடுத்து வருகிற தை மாதம் திருமண காலம் நல்ல ஆண்மகனை கணவனாக அடைந்து அப்பெண் மண வாழ்க்கையை வளமுடன் வாழ வேண்டியே இந்த நோன்பு ஆண்டாளை கன்னி பெண்ணாக கொண்டு பாவை நோன்பு எடுத்து ஒவ்வரு நாளைக்கும் ஒவ்வொரு பாசுரங்களாக 31 பாசுரங்கள் பாடி பெருமாளை கணவனாக அடைந்ததாக சொல்ல படுகிறது. மேலும் இத்தன்மை நம் முன்னோர்களின் கலாச்சார வாழ்வியல் முறையில் ஒன்றான திருப்பாவை நோன்பை பெண்கள் கடைப்பிடித்து பெருமாளை மனமுருகி பிராத்தித்து ,ஆராதித்து வளம் பெறவே ஏற்படுத்தினர். நாமும் நம் முன்னோர் வழி நடப்போம் வளம் பெறுவோம் மிக பெரிய விஷயத்தை கத்தி மேல் நடப்பது போல் எழுதி இருக்கிறேன். இன்னும் வரும்....அஸ்ட்ரோ பாபு

Thursday, 8 January 2015

சனி பெயர்ச்சி (சிறப்பு கட்டுரை)

நண்பர்களுக்கு வணக்கம்,
இன்று சனி பெயர்ச்சியின் பலன்கள் பரபரத்து கொண்டிருக்கிற இந்த வேளையில் என் சிந்தனையில் தோன்றிய சனி பெயர்ச்சி விசயங்களை இக் கட்டுரையின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சனி பெயர்ச்சி என்றதும் ஏதோ நரகாசுரன் நம் வீட்டிற்க்கே வந்தது போல் ஒரு அலறல் நம் மக்களிடம். இந்த சனி பற்றிய மக்கள் பயத்தை சனி பெயர்ச்சி பலன்கள் வேறு பணமாக்கி கொண்டிருக்கிறது புத்தக வடிவில்.
சனி பெயர்சிஎன்பது பிரபஞ்சத்தில் இயற்கையாக நடக்கிற சனி கிரகத்தின் நகர்வுதானே. சனி என்கின்ற கிரகத்தின் நகர்வு எப்படி ஒரு நரகாசுரன், பத்மாசுரன் அளவுக்கு ஒரு பயத்தை மக்கள் மத்தியில் உண்டு பண்ணிற்று என்பது என் மிக பெரிய ஐயப்பாடு. கிரக நகர்வுகள் என்பது தினந்தோறும் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது. சந்திரன்,சூரியன்,செவ்வாய் ,புதன் உட்பட அனைத்து கிரகங்களும் தன பாதையில் அவற்றின் வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றன. 71/2 ,அஷ்டம,அர்தாஷ்ட, கண்டம் என்ற இடங்கள் எல்லா கிரகங்களுக்கும் தானே இருக்கிறது.சனி என்ற ஒரு கிரகத்தை மனித குலத்திற்கே எதிரானவன் என்ற தன்மையை யார் உண்டு பண்ணியது?.
சனி என்பது நம்முள் மூளையில் சுரந்து முதுகு தண்டின் வழியே உள்ளிறங்கி தண்டு வடத்தை இயக்குகிற ஒரு சக்தி வாய்ந்த திரவத்தின் இயங்கு நிலை (விரிவாக வேண்டுமெனில் என் சனி கட்டுரை என் டைம் லைனில் படியுங்கள்) அவரவர் பிறப்பு நிலையில் சனி இருக்கிற தன்மைக்கு ஏற்றவாறு இப்பொழுது சனி நகர்வு (சனி பெயர்ச்சி) தன வேலையை நம்முள் செய்யும் அவ்வளவே.
இதே போல் தினமும் சந்திரனும்,சூரியனும் உட்பட 9 கிரகங்களும் தன நகர்வில் ஒரு மாற்றத்தை நம் மனதில்,உடலில், எண்ணங்களில் செய்து கொண்டேதான் இருக்கின்றன.
மேலும் சனி ஒன்றும் பகை காரகன் அல்ல.சனி திசையில் வாழ்க்கையின் உச்சத்துக்கு சென்ற எத்தனையோ தொழிலதிபர்களை எனக்கு தெரியும்.அதேபோல் சனிதிசையில் ஆன்மீக சிந்தனையில் மேல் இடத்திற்கு போன சிந்தனையாளர்களையும் நான் அறிவேன்.சனி நட்சத்திரங்களான பூசம்,மிக பெரிய அர்பணிப்பு, குணமும் தெய்வீக சிந்தனையும்,சகிப்பு தன்மையும் கொண்டது.அடுத்து அனுஷம்,தீவிரமான செயல்திறன் கொண்டது, கொண்ட கொள்கையில் வெற்றி வாகை சூடுகிற தன்மையும், அடுத்து உத்திரட்டாதி தெய்வீக சிந்தனையும்.சனாதன தர்மத்தை கடைபிடிப்பதுமான, மேலும் ஆன்மீக வடிவம். உழைப்புக்கு ஆதாரம், சிந்தனைகளை செயல்வடிவம் கொடுத்தல், போன்ற உயரிய விசயங்களை உள்ளடக்கிய உன்னதமான கிரகத்தின் தன்மைகள் எப்படி மக்கள் பயப்படும்படி போனது.
சரி மேற்கூறிய தன்மைகள் கிரக நகர்வில் நம் ஜனன கால தன்மையின் அடிப்படையில் மாறுபாடுகளை உண்டு பண்ணும். என்பதும் உண்மையே இருந்தாலும் அது இயற்கைதானே.சனி மெதுவாக நகர்கிற கிரகம், ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் சஞ்சரிக்கிற கிரகம். அதன் தன்மை நம்முள் விதைத்திருக்கிற (ஜனன காலம்) சனி தன்மைக்கு ஏற்றவாறு செயல்படுத்தும். அவ்வளவே.இதை புரிந்து கொண்டால் சனி என்பவர் மிக பெரிய வாழ்வியல் அனுபவங்களை நமக்கு வழங்குவார். மேலும் ஜனனத்தில் சனியின் தன்மைகளான இருப்பிடம்,எடுத்திருக்கிற ஆதிபத்தியம்,ஏறிய நட்சத்திரம்,நடப்பு திசா புத்தி போன்றவை அடிப்படையில் தானே கணக்கிட வேண்டும்.அதை தவிர்த்து இந்த ஊடகங்களும், சில ஆன்மிக பத்திரிக்கைகளும் சனியை பற்றிய ஒரு வித பயத்தை மக்களிடையே உண்டு பண்ணுகிறது.
7 1/2 சனியா முடிந்தாய்,அஷ்டம சனியா அழிந்தாய், அர்தாஷ்ட சனியா விளங்காது,சப்தம சனியா கணவன், மனைவி உறவு அவுட்.என்ற எண்ணங்களை மக்கள் மாற்றி கொள்ளவும்,சனியின் தன்மைகளை புரிந்து கொள்ளவும் தான் இக்கட்டுரை. தேய்பிறை அஷ்டமியில் கால பைரவ வழிபாடும்,தியானமும்,நல்ல உணவு முறையும் சனியின் தன்மையின் வீரியத்தை குறைத்து நம்முள் நம்பிக்கையையும் செயல் தீவிரத்தையும் வளர்க்கும்.(என் சனியின் பரிகார வழிபாடு கட்டுரையை படிக்கவும்)
மிக துரித கதியில் இயங்குகிற அதாவது 2 1/2 நாள் ஒரு ராசியில் சஞ்சரிக்கிற சந்திரன் கூட வாழ்க்கையை புரட்டி போடக்கூடிய நிகழ்வுகளை நிகழ்த்த கூடிய வல்லமை படைத்த கிரகம். நம் வாழ்வில் நடந்த, நடக்கின்ற, நடக்ககூடிய அனைத்தும் ஏற்கனவே நம் பிறப்பில் தீர்மானிக்க பட்ட ஒன்றே. அதன் சூத்திர வடிவம் தான் ஜாதகம்.நடப்பவை அனைத்தும் நம் பிறப்பில் நமக்கு வழங்க பட்ட ஒன்றே.இப்பிறப்பில் என்னென்ன வெல்லாம் நமக்கு தேவையோ அவற்றை நமக்கு வழங்கியே நாம் இங்கே அனுப்பி வைக்க பட்டிருக்கிறோம் அவற்றை முழுமையாக அனுபவிப்போம் சனியை வரவேற்போம் அனுபவிப்போம் அனுபவம் பெறுவோம்.இன்னும் வரும்,........ அஸ்ட்ரோ பாபு.

காலங்களும்,மாற்றங்களும், வழிபாடுகளும்

நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை நம் முன்னோர்கள் இயற்கையில் ஏற்படுகிற கால மாற்ற்களையும், அதன் விளைவான தட்ப வெப்ப மாறுதல்களையும் எவ்வாறு கையாண்டு இயற்கையை தமக்கு சாதகமாக்கி மனித வாழ்க்கையை மேம்படுத்தி வாழ்ந்தார்கள் என்பதை பற்றியது.
சூரிய வட்ட பாதையில்.பூமி தன்னைத்தானே சுற்றி கொண்டு சூரியனையும்சுற்றுவதும்,அந்த வட்ட பாதை ஒரு நீள் வட்டத்தில் இருக்கிறது என்பதையும்அந்த நீள் வளைவு பாதை ஒவ்வொரு 30 டிகிரி கோணமும் ஒரு வளைவாக வளைகிறதுஎன்பதையும் மொத்தம் 360 டிகிரி யாக மொத்த நீள்வட்ட பாதையும் இருக்கிறது.என்பதும் நாம் அறிந்ததே இதில் 30 டிகிரி பாதையை பூமி கடக்க 30 நாட்கள் எடுத்து கொள்கிறது.அதாவதுஒரு நாளுக்கு பூமி தன்னை தானே சுற்றி கொண்டு நீள் வட்ட பாதையில் 1 டிகிரி
கடக்கிறது என்பதை ஏன் முந்தைய கட்டுரைகளில் மிக தெளிவாக எழுதி உள்ளேன்.பூமி கிழக்கு மேற்காக தன்னைத்தானே சுற்றி கொண்டு அதன் சுற்று பாதையின் 0டிகிரியான வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பயணத்தை துவக்கி சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றி வருகையில் ஒவ்வொரு வளைவு மூலையிலும் பூமியின்சுழற்சியும், பூமி சுற்று பாதையில் இருக்கிற சூரியனின் விலக்கு சக்தி மற்றும் காந்த சக்திகளின் கலவைகள் ஒவ்வொரு விதமான சக்திகளை
வெளிபடுத்துகிறது.அதாவது 0 டிகிரி யான மேஷத்தில் துவங்குகிற இடம் சித்திரை 1 இல், ரிஷபம் கடந்து மிதுனத்தில் ஆடியில்ஒரு வளைவை தாண்டுகிறபொழுது ஒரு சக்தியையும்,கடகம்,சிம்மம் கடந்து புரட்டாசியில் கன்னியில் நுழைந்து அவ்வளைவை
தாண்டுகிரபோது ஒரு பரிமாணத்தையும் துலாம்,விருச்சிகம் கடந்து
மார்கழியில்,தனுசுவில் வேறு ஒரு சக்தி டிவத்தையும்,மகரம்,கும்பம் கடந்து பங்குனியில்,மீனத்தில்,நுழைகிறபோது வேறு ஒரு சக்தியையும்,இந்த பூமி சூரிய பாதையில் உண்டாக்கி உள்வாங்குகிறது.
அப்படி பார்க்கையில் ஆடி-மிதுனம்,புரட்டாசி-கன்னி,மார்கழி-தனுசு,பங்குனி-மீனம் என்ற மாத கணக்கின் பூமி ராசிகளை கடக்கும் காலம், தட்ப வெப்ப துவக்க காலங்களாகவும் இது
பிரிகிறது, அதாவது, இளவேனிற்காலம் துவக்கம் ,(ஆடி)
,மழைக்காலம் துவக்கம் (புரட்டாசி),குளிர்(மார்கழி),வெய்யில் கால துவக்கம் (பங்குனி), இம்மாறுதல்கள் இப்பூமியில் உள்ள உயிரினங்களில் எந்தவிதமான மன,உடல்,தாக்கத்தை
ஏற்படுத்துகிறதோ அதை உணர்ந்து அதிலிருந்து மக்களை காக்க ஒவ்வொரு விதமான நுட்பங்ககளை நம் முன்னோர்கள் கையாண்டு.அத்தாக்கத்தை மனித இனத்திற்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்கள். அந்த சாதக ரகசியத்தை கடவுள் வழிபாடுகளாக மாற்றி மக்களுக்கு கொடுத்தார்கள்.இந்த நான்கு பருவ நிலைகளில் இரண்டு பருவம் சூரியனின் உத்திராயண காலத்திலும்,இரண்டு பருவம் சூரியனின் தட்சயான காலத்திலும் இயற்க்கை நமக்கு வழங்குகிறது.
ஆடி,பங்குனி (மிதுனம்) ,அம்மன், கிராம தேவதைகள் வழிபாடு,புரட்டாசி,மார்கழி (கன்னி,தனுசு) பெருமாள் வழிபாடு. என மக்களை ஆன்மீக சிந்தனைக்குள் கொண்டு சென்று மன உடல் நிலை மாற்றங்களை மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி,அந்த மாதங்களில் எவ்வித மாறுபட்ட விசயங்களும் நடக்காதவாறு பார்த்து கொண்டார்கள்.வெயிலின் தாக்கத்திலிருந்து உடம்பும் மனசும் மாறுகிற காலம் ஆடி,காற்றடிக்கிற காலம்,கிழக்கு திசையின் காந்த சக்தி தாக்குகிற காலம்,விவசாயிகள் விதையிடுகிற காலம். பூமி நன்றாக காய்ந்து மண் விரிந்து நீருக்காக ஏங்குகிற காலம். உடம்பு மனசு வெயிலில் சிரமபட்டு ஒரு அலுப்பை மனத்திற்கும் ,உடம்பிற்கும் கொடுக்கும்.ஆதலால் தான் எவ்வித புது முயற்சிகளும் எடுத்தால் தீவிர மனநிலை இல்லாத பொழுது அதில் தீவிரம் மற்றும் தீர்க்கம் இருக்காது என்பதால் தான் புது வித முயற்சிகள் எடுக்காமல் அயர்ந்து இருக்கிற மனதை உற்சாக படுத்த தூண்டு சக்தியான மாரியம்மன் வழிபாடு, சூட்டில் ஏற்படும் நோய்களை தணிக்க வேப்பிலை,இளநீர்,மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்தியும், வாத்தியங்களில் உற்சாகம் ஏற்படுகிற சப்தங்களையும் ஏற்படுத்தி ஊக்க சக்தியான மாரியம்மனை வழிபட செய்து அடுத்த பருவத்திற்கு தயாரானார்கள்
அதேபோல் புரட்டாசி,மழைகால துவக்கம் நீரில் பூமி நனைந்து குளிர்ந்து விதைகள் முளைத்து வருகிற காலம்.மனிதனுள்ளும் அம்மாற்றம் ஏற்படும்.ஊழிக்கால காற்று மனித மனத்திலும் உடம்பின் உள்ளும் இன பெருக்கத்திற்கான மாற்றம் நிகழும். ஆண்களுக்கு சுக்கிலம் வலிமை பெரும் காலம்.ஆண்களின் இனபெருக்க சக்தி இக்காலத்தில் வீரியத்துடன் இருக்கும். சுக்கிர சக்தியான பெருமாளை வழிபடல்,பிரசாதமான புளி, வெல்லம் சார்ந்த உணவு காமத்தை தூண்ட சந்தனம்,சம்பங்கி பூ,பச்சை கற்பூரம் போன்றவை இன பெருக்க செயலான காமத்தை செம்மை படுத்தி நல்ல வாரிசுகளை பெற ( மேலும் விவரத்திற்கு புரட்டாசியில் ஏன் பெருமாள் வழிபாடு என்ற ஏன் கட்டுரை படிக்கவும்) என ஏற்படுத்தினார்கள்
மார்கழியில் நடுங்குளிர் காலம்,பயிர்கள் வளர்ந்து,தன்பயனை தருகிற முக வாயில் காலம், மனிதருள் பெண் சக்தியும்,சுரோணிதம்,தூண்டி காமம் வலிமையையும் தீவிரமும் பெற்றிருக்கிற காலம்,சுரோணிதம் (பெண்மை) வலிமை பெற்றிருக்கிற காலம். ஆதலால்தான் இங்கு வலிமையை தூண்டுகிற உளுந்து,பச்சை அரிசி,நவ தானியங்கள், பயன்படுத்தி செய்கிற களி, இதில் கிடைக்க கூடிய ப்ரோட்டின் சக்தி தசை வலிமையை தரகூடிய மிக சிறந்த விஷயம்.
பங்குனி வெப்ப கால துவக்கம், குளிரில் அடங்கி கிடந்த மனமும் உடலும் உற்சாகத்தில் பீறிடும் காலம். தையில் அறுவடை முடித்து மாசியில் இரண்டாம் பருவ விதைப்பை முடித்து பங்குனியில் ஊரை சுத்தம் செய்து கிராம காவல் தெய்வ வழிபாடுகள், சக்தி இயக்கமான அம்மன், முருகன் போன்ற தெய்வ வழிபாடுகள் மூலமாகவும்,பானகரம்,சக்கரை பொங்கல்,வெள்ளம்,பஞ்சாமிர்தம் போன்ற உணவுகளின் மூலமாகவும் அடுத்து வருகிற கடின வெயிலை எதிர்கொள்ள மனதையும் உடம்பையும் எதிர் கொள்ள தயாராக்கி கொண்டார்கள். இதன் தொடர்ச்சி திருப்பாவை நோன்பு கட்டுரையில் வரும் .... இன்னும் வரும்.... அஸ்ட்ரோ பாபு

திருப்பாவை நோன்பு

நண்பர்களுக்கு வணக்கம்,இந்த கட்டுரை மார்கழியில் மங்கையரால் போற்றப்படும்
திருப்பாவை நோன்பை பற்றியது.எதற்காக மார்கழியில் மட்டும் திரு பாவை
நோன்பு,அதுவும் மங்கையரால், ரங்க மன்னார் என்ற பெருமாளுக்கு ஏன்? சிவனுக்கு
ஆகாதா? திருபாவை நோன்பு என்பது கன்னி பெண்கள் மாதம் 30 நாட்களும் விரதம்
இருந்து பெருமாளுடைய பெருமைகளை,புகழை ,காதலை பாசுரங்களாக பாடியதாக சொல்ல
பட்டிருக்க்றது
சரி அது ஏன் மார்கழி,சித்திரையில் ஆகாதா? ஆடியில் செய்தால் என்ன? மாசியை
ஒதுக்கியது ஏன்? நம் முன்னோர்கள் எதையும் காரண காரியத்தோடு தானே செய்து
இருப்பார்கள் அது என்ன காரண காரியம் என்ற ஏன் ஆராய்சியில் நான் உணர்ந்த
விஷயங்களை என் நண்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
இதற்கான முத்தாய்ப்பு விஷயங்கள் தான் முந்தைய கட்டுரை யான மாதங்களும்,மாற்றங்களும்,வழிபடல்களும்
மார்கழியில் பெண்மை (சுரோணித தன்மை) முழு வீரியத்தில் இருக்கிற காலம்.புரட்டாசியில் ஆண்மை(சுக்ல தன்மை) முழு விரியத்தில் இருக்கிற காலம்.இதற்க்கு எதிர் திசையில் மார்கழியில் பெண்மை வீரியம் பெரும்.நம் முன்னோர்கள் நம் பண்பாடு,கலாசாரம்,நாகரீகத்தின் அடித்தளம் ஆகியவற்றை இயக்க தன்மையான சக்திவடிவதில் இருக்கிற பெண்ணில் வைத்து பெண்மையை போற்றி நம் பெருமையை காத்தனர்.அப்படிப்பட்ட பெண்மை இயற்கையின் சுழற்சியில் வலிமை பெற்று வீர்யம் அடைந்து நம் முன்னோர்கள் வகுத்த தன்மைகளுக்குள் இல்லாமல் மாறுபட்ட தன்மைக்குள் இயற்கை
யின் தூண்டுதலால் சென்று விட கூடாது என்ற நோக்கில் வலிமை பெற்றிருக்கிற வீரியத்தை பிரம்ம முகூர்த்த குளியல்,விரதம், சுக்கிர தன்மையான பெருமாள் போன்ற கணவனை அடைய வேண்டும் என்று கன்னி பெண்களை தவம் கொள்ள செய்து, திருமணமான பெண்களுக்கு கணவனையே கடவுளாக கொண்டு கணவனிடத்தில் தினமும் காலில் விழுந்து வணங்கி கடவுளாக வரித்து வலிமையை பெற்று இருக்கிற காமத்தை முறை படுத்தி பெண்களின் மண வாழ்க்கையை மேன்பட செய்தனர்.கன்னி பெண்களின் வீரியத்தை பிரம்ம முகூர்த்தமான அதிகாலையில் குளித்து ஈர உடையுடன்,பெருமாளை நினைத்து அவர் புகழ்,பெருமை,காதல் போன்ற விசயங்களை பாடல்களாக பாடி வீரியத்தை கடவுளின் பால் திருப்பியதுதான் திரு பாவை நோன்பு.கன்னி பெண்களுக்கு அடுத்து வருகிற தை மாதம் திருமண காலம் நல்ல ஆண்மகனை கணவனாக அடைந்து அப்பெண் மண வாழ்க்கையை வளமுடன் வாழ வேண்டியே இந்த நோன்பு ஆண்டாளை கன்னி பெண்ணாக கொண்டு பாவை நோன்பு எடுத்து ஒவ்வரு நாளைக்கும் ஒவ்வொரு பாசுரங்களாக 31 பாசுரங்கள் பாடி பெருமாளை கணவனாக அடைந்ததாக சொல்ல படுகிறது. மேலும் இத்தன்மை நம் முன்னோர்களின் கலாச்சார வாழ்வியல் முறையில் ஒன்றான திருப்பாவை நோன்பை பெண்கள் கடைப்பிடித்து பெருமாளை மனமுருகி பிராத்தித்து ,ஆராதித்து வளம் பெறவே ஏற்படுத்தினர். நாமும் நம் முன்னோர் வழி நடப்போம் வளம் பெறுவோம் மிக பெரிய விஷயத்தை கத்தி மேல் நடப்பது போல் எழுதி இருக்கிறேன். இன்னும் வரும்....அஸ்ட்ரோ பாபு

வாஸ்து பாகம் 1

நண்பர்களுக்கு வணக்கம்,
நெடுநாள் கழித்து உங்களுடன் இக்கட்டுரை மூலமாக தொடர்பு கொள்வதில் மகிழ்வுறுகிறேன். இக்கட்டுரை இன்றைய காலத்தில் பல்வேறு சிந்தனைகளுக்கும் ,உண்மை,இல்லை, சும்மாப்பா, என்று விவாதிக்கிற வாஸ்துவின் அறிவியல் விசயங்களை பற்றியது.நான் எழுதுகிற எவ்விசயமுமே விதிகள் ஆகா. இவை அனைத்தும் நான் உணர்ந்த அறிவியல் உண்மைகளை அடிப்படையாக கொண்டதே.அதை உங்களிடம் இம்முகனூல் மூலமாக பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுத்த என் குரு நாகாவிற்க்கு நன்றி கூறி தொடர்கிறேன்.
இப்பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து விசயங்களும் பஞ்ச பூதங்களான
நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் இவற்றின் அடிப்படையில்தான் இயங்குகின்றன என்பதை என் முந்தைய கட்டுரைகளில் தெளிவு பெற எழுதியுள்ளேன்.நாம் வாழுகிற நிலத்தில் மற்ற நான்கு பூதங்களின் தன்மைகள் எவ்வாறு இருந்தால் அவை சிறப்பாக நம் மனித குலத்திற்கு பயன் பெறும் ,குறிப்பாக நம் வசிப்பிடங்களில் அவற்றை நம் முன்னோர் பயன்படுத்தி சில சூத்திரங்களை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் நம் வசிப்பிடங்கள் இவ்வாறு அமைய பெற்றிருக்க வேண்டும் என கூறி சென்று உள்ளனர்.
இந்த பூமி 23 டிகிரி சாய் கோணத்தில் கிழக்கு மேற்காக தன்னை தானே சுற்றி வருகிறது என்பதை நாம் அறிந்ததே.அவ்வாறு சுற்றுகிற தன்மையின் வேகமும்,வெற்றிடத்தில் வெறுமே கிடக்கிற மற்ற பூதங்களின் அமைப்புகளும் உள்ளடக்கியோ அல்லது அவற்றின் சக்திகளை தூண்டியோ சில வேறு வடிவமான சக்தி வடிவங்களை தோற்று விக்கும்.அவ்வாறு தோற்று விக்கின்ற சக்தி வடிவங்களை நாம் வசிக்கிற இடங்களில் நம் மனித குலம் சீராக,உருவாவதற்கு எவ்வாறு பயன் படுத்தி கொள்வது என்று முன்னோர் வகுத்த சூத்திரம் தான் வாஸ்து.
இச்சக்தி காற்றை ,மற்றும் சூட்சும ஆன்மாவாகிய சூரியனின் துணையுடன்,நம் வசிப்பிடமாகிய வீட்டில் சூரியன் எழுகின்ற கிழக்கு பக்கத்தில் உள்பெறவேண்டும். அதிலிலும் நம் பூமியின் சாய் கோண அச்சின் காந்த புலத்தின் மூலமாக இருக்கிற வடக்கும்,சூரியன் வெளிவருகிற திசையும் இணைகிற வடகிழக்கு பக்கம் எவ்வித இடையூறும் இல்லாமல் உட்புக செய்து அவ்வாறு உட்புகிற காற்றும், சூரியனின் வெளிச்சமும், கலந்த பிரபஞ்ச சக்தியின் பஞ்சபூத கலவைகளும் நேர் திசையில் பயணிக்கும்.அதாவது தென்மேற்கு மூலையில், அம மூலையில் இருக்கிற சுவர்களில் மோதி அச்சக்தி தென் கிழக்காக திரும்பும். இப்பயணத்தில் இச்சக்தி தென் கிழக்கில் மோதி திரும்பும்போது தன வேகம் குறைந்து இருக்கும். குறைந்து இருக்கிற அச்சக்தி ஓட்டத்தை அங்கு சமையல் அறை அமைத்து அதில் கிடைக்கும் வெப்பத்தால் வேப்பமேற்றுகிற போது மேலும் வலுபெற்று எதிர் திசையில் பயணித்து வட மேற்கை நோக்கி வலுவுடன் பயணிக்கும். அவ்வாறே அச்சக்தியை வட மேற்கில் வெளியே அனுமதித்து வெளியேற்ற வேண்டும்.
சுருக்கமாக சொல்லின், மேற்கூறிய சக்தியை வட கிழக்கில் பெற்று தென் மேற்கில் உள்வாங்கி, தென் கிழக்கு நோக்கி திருப்பி,தென் கிழக்கில் வலுபெற செய்து வட மேற்கில் வெளியேற செய்யவேண்டும். இச்சக்தி செல்கின்ற பாதையில் எவ்வித தடைகளும் இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்.ஏனெனில் அச்சக்தி ஓட்டத்தில் தடை ஏற்பட்டால் ஓட்டம் முறிவு ஏற்பட்டு மாற்று விளைவுகளை ஏற்படுத்தும். இசக்தி ஓட்டத்தினை நான் உணர்ந்த விதமாகவே படம் வரைந்து இணைத்துள்ளேன்.மேற்குறிய விசயங்கள் வாஸ்துவின் அடிப்படை அறிவியல் விசயங்கள் மட்டுமே.மக்கள் எளிதாக புரிந்து கொள்ளவேண்டும் நோக்கில் முடிந்தவரை சுருக்கி எளிதாக கொடுத்துள்ளேன்
இச்சக்தி ஓட்டத்தின் பயன்களையும் எவ்விடத்தில் எவ்விதமான சக்தியை தோற்றுவிக்கிறது என்பதனையும் அடுத்த பதிவான வாஸ்து பாகம் 2 இல் வரும்... இன்னும் வரும்........ அஸ்ட்ரோ பாபு
வாஸ்து பாகம் 2

அன்றைய கால மனிதர்களின் வாழ்வியல், வசிப்பிடங்கள்,மனித அறிவு திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட வாஸ்து அமைப்புகள் இன்றைய காலத்திற்கு ஒவ்வாத இடங்களில் பொயக்கிறது. அதனால் மையமே தவறு என்ற முடிவுக்கு இன்றைய தலை முறையினர் வருவதும் தவறு. இன்றைக்கு இருக்கிற அனைத்து தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தினாலும் அறிய முடியா சூட்சும சூத்திரத்தை நம் முன்னோர் தம் தவ வலிமையால் நமக்கு அருளியுள்ளனர்.
சரி பாகம் 1 ன் தொடர்ச்சியை பாப்போம் .
வாஸ்துவில் திசைகள் இணைகிற திக்குகளுக்கு முக்கியதுவம் கொடுத்து அத்திக்குகளில் சக்தி ஓட்டம் மோதும்போது எவ்வித தன்மையை உருவாக்குகிறதோ அதை பயன்படுத்தி அத்திக்குகளில் அறைகளை அமைத்து சிறப்புடன் வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள். அதன் படி.
வடகிழக்கு -- ஜல மூலை-- கிணறு, தண்ணீர் தொட்டி,நீர் தேக்கம்
தென் மேற்கு -- குபேர மூலை -- சேமிப்பு, தானிய கிடங்கு, கஜானா,படுக்கை அறை
தென் கிழக்கு -- அக்னி மூலை ---, சமையல் கூடம்,எரி சக்தி,பொறி
வடமேற்கு --- வாயு மூலை-- வெளி கதவு,புகை போக்கி,கழிவு வெளியேற்றம்,
வட கிழக்கு- ஜல மூலை :- ஜல மூலையில் கிணறு வெட்டி நீரை தேக்கி வட கிழக்கில் வருகிற சக்தியின் ஓட்டத்தில் இருக்கிற மூர்க்கத்தை தணித்து அல்லது, எதிர மறை சக்திகளை களைந்து தூய்மை படுத்தி வசிப்பிடத்தினுள் அனுப்பினர்.நீரின் தன்மையே நல்ல சக்திகளை உள்ளிழுத்து சக்தியை தக்க வைக்கும் மேலும் கடத்தும் தன்மையுடைதே. அதனால் தான் அப்பகுதியில் எத்தடையும் இல்லாமல் திறந்து இருக்க வேண்டும்.
தென் மேற்கு கன்னி மூலை :- இப்பகுதி சற்றே மேடாக அமைக்க வேண்டும். வட கிழக்கில் இருந்து வரும் சக்தி முழு வேகத்துடன் தாக்காமல் மெல்ல மெல்ல மேலேறி தென் மேற்கை அடைந்து அங்கேயே அச்சக்தியை பெற்று தக்க வைக்க தென் மேற்கில் வசிப்பிடத்தின் மேற்கூரையில் மேல் எடையை கூட்டி அவ்வறையில் ஒரு அழுத்தத்தை உருவாக்கி
அச்சக்தியின் முழு தன்மையையும் அங்கு பெற்றனர்.இந்த இடம் சக்தியை சேமித்து வைக்கிற இடமாக கொண்டனர் தானியங்கள் இருக்கிற இடமாகவும் கொண்டனர். இசக்தியில் தானியங்கள் முழு வலுவுடனும் நீண்ட நாள் உயிர் தன்மையுடனும் இருக்கும். நாளடைவில், இந்த பயன்பாடு செல்வத்துக்கும் சுகம் பெறுவதற்கும் ஆன இடமாக கொள்ளபட்டது. அதனால் தான் இப்பொழுது படுக்கை அறையை அங்கே தீர்மானிக்கிறார்கள்.
அக்னி மூலை :- தென் மேற்கில் சேமித்து அல்லது சிறிது தங்கி வருகிற வலுவிழந்த சக்தி ஓட்டத்தை வெப்பத்தின் மூலம் மீண்டும் வலுபெற செய்து, அதாவது அங்கே சமையல், நெல் அவிப்பு கூடம், சூலை போன்றவை அமைத்து சக்தி ஓட்டத்தின் தன்மையை மேம்படுத்தி, பல படுத்தி வட மேற்கில் அனுப்பினர்.
வாயு மூலை:- இவ்வாறு வலுபெறுகிற சக்தி ஓட்டம், வட கிழக்கிலிருந்து, தென் மேற்காக செல்லும் சக்தி பாதை யை கடந்து வட மேற்கிற்கு பயணித்து வெளியேறும்.அவ்வாறு வெளியேறுகிற பொழுது அவ்வசிபிடத்தில் இருக்கிற அனைத்து சூட்சும கழிவுகளையும் வெளியே கொண்டு போகும், இங்கே புகை போக்கி, கழிப்பிடங்களை அமைத்தனர்.
இச்சக்தி ஓட்டங்கள் தடை படாமல் இருக்க வேண்டும். தவிர்க்க இயலாவிடில் கதவுகளோ ஜன்னல்களோ வைத்து திறந்து வைக்க வேண்டும்.
மேற்கூறிய அனைத்தும் சக்தி ஓட்டத்தின் தன்மைகளே இவ்வோட்டதின் தன்மை மனிதனுள் சுவாசமாக உள்சென்றுதான் அவ்வசிபிடத்தில் வாழும் மனிதனை இயக்குகிறது. சுவாசம் சீர்படும் பொழுது மனித உடம்பின் ஸ்தூல.சூட்சும இயக்கங்களும் பலம் பெரும் அதன் பலன்களான செயல்களும் தீர்க்கம் பெறும்.
இச்சக்தி ஓட்டம் அவ்வீட்டில் வசிக்கிற மனிதனை இயக்கம்(ஜலம்) வீரியம்(குபேர), செயல்(அக்னி) போன்ற தன்மைகளை கொடுத்தும்,அதிக படுத்தியும், வாயு மூலையில் மீண்டும் பிரபஞ்ச சக்தியோடு கலக்கிற சூத்திரத்தை தான் வாஸ்து என நம் முன்னோர்கள் நமக்கு அருளியுள்ளனர்.
இச்சூத்திரத்தையெ அக்காலத்தில் கூட்டம், கூட்டமாக வசித்த மக்களின் பகுதிகளுக்கும்,தேசத்திற்கும் விஸ்தரித்தும் சொன்னார்கள்.
வாஸ்து சாஸ்திரத்தை கிரகங்களோடு ஒப்பிட்டு ஒரு படத்தையும் இணைத்துள்ளேன். இதன் விளக்கங்களை அடுத்த பதிவில் பதிகிறேன்
மேற்கூறிய யாவும் அடிப்படை அறிவியல் விஷயங்கள் மட்டுமே. ஒரு பெரிய சாஸ்த்திரத்தில் எனக்கு தெரிந்த அறிவியல் விசயங்களை சுருக்கி கொடுத்திருக்கிறேன். இவற்றை அடிப்படையாக கொண்டு, உங்கள் இல்லங்களை வடிவமையுங்கள். வளம் பெறுங்கள் ....... இன்னும் வரும் ...... அஸ்ட்ரோ பாபு.

சனி பெயர்ச்சி (சிறப்பு கட்டுரை)

நண்பர்களுக்கு வணக்கம்,
இன்று சனி பெயர்ச்சியின் பலன்கள் பரபரத்து கொண்டிருக்கிற இந்த வேளையில் என் சிந்தனையில் தோன்றிய சனி பெயர்ச்சி விசயங்களை இக் கட்டுரையின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சனி பெயர்ச்சி என்றதும் ஏதோ நரகாசுரன் நம் வீட்டிற்க்கே வந்தது போல் ஒரு அலறல் நம் மக்களிடம். இந்த சனி பற்றிய மக்கள் பயத்தை சனி பெயர்ச்சி பலன்கள் வேறு பணமாக்கி கொண்டிருக்கிறது புத்தக வடிவில்.
சனி பெயர்சிஎன்பது பிரபஞ்சத்தில் இயற்கையாக நடக்கிற சனி கிரகத்தின் நகர்வுதானே. சனி என்கின்ற கிரகத்தின் நகர்வு எப்படி ஒரு நரகாசுரன், பத்மாசுரன் அளவுக்கு ஒரு பயத்தை மக்கள் மத்தியில் உண்டு பண்ணிற்று என்பது என் மிக பெரிய ஐயப்பாடு. கிரக நகர்வுகள் என்பது தினந்தோறும் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது. சந்திரன்,சூரியன்,செவ்வாய் ,புதன் உட்பட அனைத்து கிரகங்களும் தன பாதையில் அவற்றின் வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றன. 71/2 ,அஷ்டம,அர்தாஷ்ட, கண்டம் என்ற இடங்கள் எல்லா கிரகங்களுக்கும் தானே இருக்கிறது.சனி என்ற ஒரு கிரகத்தை மனித குலத்திற்கே எதிரானவன் என்ற தன்மையை யார் உண்டு பண்ணியது?.
சனி என்பது நம்முள் மூளையில் சுரந்து முதுகு தண்டின் வழியே உள்ளிறங்கி தண்டு வடத்தை இயக்குகிற ஒரு சக்தி வாய்ந்த திரவத்தின் இயங்கு நிலை (விரிவாக வேண்டுமெனில் என் சனி கட்டுரை என் டைம் லைனில் படியுங்கள்) அவரவர் பிறப்பு நிலையில் சனி இருக்கிற தன்மைக்கு ஏற்றவாறு இப்பொழுது சனி நகர்வு (சனி பெயர்ச்சி) தன வேலையை நம்முள் செய்யும் அவ்வளவே.
இதே போல் தினமும் சந்திரனும்,சூரியனும் உட்பட 9 கிரகங்களும் தன நகர்வில் ஒரு மாற்றத்தை நம் மனதில்,உடலில், எண்ணங்களில் செய்து கொண்டேதான் இருக்கின்றன.
மேலும் சனி ஒன்றும் பகை காரகன் அல்ல.சனி திசையில் வாழ்க்கையின் உச்சத்துக்கு சென்ற எத்தனையோ தொழிலதிபர்களை எனக்கு தெரியும்.அதேபோல் சனிதிசையில் ஆன்மீக சிந்தனையில் மேல் இடத்திற்கு போன சிந்தனையாளர்களையும் நான் அறிவேன்.சனி நட்சத்திரங்களான பூசம்,மிக பெரிய அர்பணிப்பு, குணமும் தெய்வீக சிந்தனையும்,சகிப்பு தன்மையும் கொண்டது.அடுத்து அனுஷம்,தீவிரமான செயல்திறன் கொண்டது, கொண்ட கொள்கையில் வெற்றி வாகை சூடுகிற தன்மையும், அடுத்து உத்திரட்டாதி தெய்வீக சிந்தனையும்.சனாதன தர்மத்தை கடைபிடிப்பதுமான, மேலும் ஆன்மீக வடிவம். உழைப்புக்கு ஆதாரம், சிந்தனைகளை செயல்வடிவம் கொடுத்தல், போன்ற உயரிய விசயங்களை உள்ளடக்கிய உன்னதமான கிரகத்தின் தன்மைகள் எப்படி மக்கள் பயப்படும்படி போனது.
சரி மேற்கூறிய தன்மைகள் கிரக நகர்வில் நம் ஜனன கால தன்மையின் அடிப்படையில் மாறுபாடுகளை உண்டு பண்ணும். என்பதும் உண்மையே இருந்தாலும் அது இயற்கைதானே.சனி மெதுவாக நகர்கிற கிரகம், ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் சஞ்சரிக்கிற கிரகம். அதன் தன்மை நம்முள் விதைத்திருக்கிற (ஜனன காலம்) சனி தன்மைக்கு ஏற்றவாறு செயல்படுத்தும். அவ்வளவே.இதை புரிந்து கொண்டால் சனி என்பவர் மிக பெரிய வாழ்வியல் அனுபவங்களை நமக்கு வழங்குவார். மேலும் ஜனனத்தில் சனியின் தன்மைகளான இருப்பிடம்,எடுத்திருக்கிற ஆதிபத்தியம்,ஏறிய நட்சத்திரம்,நடப்பு திசா புத்தி போன்றவை அடிப்படையில் தானே கணக்கிட வேண்டும்.அதை தவிர்த்து இந்த ஊடகங்களும், சில ஆன்மிக பத்திரிக்கைகளும் சனியை பற்றிய ஒரு வித பயத்தை மக்களிடையே உண்டு பண்ணுகிறது.
7 1/2 சனியா முடிந்தாய்,அஷ்டம சனியா அழிந்தாய், அர்தாஷ்ட சனியா விளங்காது,சப்தம சனியா கணவன், மனைவி உறவு அவுட்.என்ற எண்ணங்களை மக்கள் மாற்றி கொள்ளவும்,சனியின் தன்மைகளை புரிந்து கொள்ளவும் தான் இக்கட்டுரை. தேய்பிறை அஷ்டமியில் கால பைரவ வழிபாடும்,தியானமும்,நல்ல உணவு முறையும் சனியின் தன்மையின் வீரியத்தை குறைத்து நம்முள் நம்பிக்கையையும் செயல் தீவிரத்தையும் வளர்க்கும்.(என் சனியின் பரிகார வழிபாடு கட்டுரையை படிக்கவும்)
மிக துரித கதியில் இயங்குகிற அதாவது 2 1/2 நாள் ஒரு ராசியில் சஞ்சரிக்கிற சந்திரன் கூட வாழ்க்கையை புரட்டி போடக்கூடிய நிகழ்வுகளை நிகழ்த்த கூடிய வல்லமை படைத்த கிரகம். நம் வாழ்வில் நடந்த, நடக்கின்ற, நடக்ககூடிய அனைத்தும் ஏற்கனவே நம் பிறப்பில் தீர்மானிக்க பட்ட ஒன்றே. அதன் சூத்திர வடிவம் தான் ஜாதகம்.நடப்பவை அனைத்தும் நம் பிறப்பில் நமக்கு வழங்க பட்ட ஒன்றே.இப்பிறப்பில் என்னென்ன வெல்லாம் நமக்கு தேவையோ அவற்றை நமக்கு வழங்கியே நாம் இங்கே அனுப்பி வைக்க பட்டிருக்கிறோம் அவற்றை முழுமையாக அனுபவிப்போம் சனியை வரவேற்போம் அனுபவிப்போம் அனுபவம் பெறுவோம்.இன்னும் வரும்,........ அஸ்ட்ரோ பாபு.
சனி பெயர்ச்சி யாகம்.
நண்பர்களுக்கு வணக்கம் இந்த கட்டுரை சனி பெயர்ச்சி கட்டுரையின் தொடர்ச்சி.சனி பெயர்ச்சி என்ன? சனி பெயர்ச்சி என்ன செய்யும்? என்பதை நேற்று பதிந்து இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த சனி பெயர்ச்சி யாகம் நடத்துவது எதற்கு, என்ன பலன் அளிக்கும். என்பதை பற்றிய என் பார்வையை இங்கே பதிகிறேன் இக்கட்டுரை மூலமாக.
சனி பெயர்ச்சி என்பது நம் சூரிய குடும்பத்தில் இருக்கிற சனி கிரகத்தின் நகரவே. அதாவது அக்கிர்கத்தின் பயணம் ஒரு ராசி இலிருந்து அடுத்த ராசிக்கு நகர்வது. இப்படி நகர்கிற நகர்வை இங்கு செய்கிற யாகங்கள் தடுத்து நிறுத்தி விடுமா? அல்லது மேலிருந்து அம்பு மழை பொழிய போகிறது என்ற மக்களின் சனி பற்றிய பயத்தை போக்கி யாகம் செய்தவுடன் பூ மழை பொழியவா போகிறது. பின் எதற்கு இந்த யாகம்?.
புரிய வில்லை எனக்கு ஏதுமறியா மக்களின் அறியாமையை அல்லது பயத்தை வியாபாரமாக்குவதை தவிர வேறொன்றும் இருப்பதாக எனக்கு தெரிய வில்லை.
யாககங்களில் உச்சரிக்கும் மந்திரங்களும் உபயோக படுத்துகிற பொருட்களும் சில மாற்றங்களை நம் உடலில் கொண்டு வரும் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்களே அது பொய்யா? என் வினா எழும். உண்மைதான் மந்திரங்களும்,யாக பொருட்களும் மாற்றத்தை கொடுக்கும்தான். ஆனால் அதை தொடர்ந்து செய்ய வேண்டும் எந்த ஒரு மந்திரமும் 48 திதி தொடர்ந்து உரு ஏற்ற பட வேண்டும் என்பதனையும் நம் முன்னோர்களே தான் கூறி சென்று இருக்கின்றனர். 1,2, மணிநேரம் ஜெபிக்கிற மந்திரங்கள் ஒன்றும் மாற்றங்களை செய்துவிட போவதில்லை.48 திதி என்பதே முதல் 16 திதி நம்முள் இருக்கிற மாறுபட்ட தன்மையை வெளியே எடுக்கும் அடுத்த 16 திதி நமக்கு தேவை படுகிற விசயத்தை உள்ளே தள்ளும். கடைசி 16 திதி உள்ளே தள்ளிய விசயத்தை ஸ்திர படுத்தும் இது உரு ஏற்றுவதற்கான அடிப்படை. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என் நோக்கமே தவிர யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது அல்ல. ஆதலால் பணத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் சனியை பற்றி புரிந்து கொண்டு சனியை முழுமையாய் அனுபவியுங்கள் வாழ்வியல் அனுபவங்களை பெறுங்கள் ....இன்னும் வரும் .....அஸ்ட்ரோ பாபு