நண்பர்களுக்கு வணக்கம் வேலை பளு காரணமாக 7 நாட்களாக எழுத முடிய வில்லை,ராசியில் ஏன் முதல் நட்சத்திரமாக அஸ்வினியை கொண்டார்கள்.அஸ்வினி,மகம்,மூலம்,இம்மூன்று எவ்வகையில் கேதுவுடன் தொடர்பு? என்ற வினாவை ஜோதிட குழுக்களில் பதிந்திருந்தேன். இக்கேள்வி நெடுநாளாய் எனக்குள் ஓடிக்கொண்டேயிருந்தது.ஜோதிட குழுக்களிலும் இக்கேள்விக்கு சரியான விளக்கங்கள் கிடைக்கததால் கேள்வி இன்னும் அழமாய் என்னை வெட்டியது.கடந்த 15 நாட்களாக எனக்கு கிடைத்த நேரத்தை இக்கேள்விக்கு பயன்படுத்தி வானவியலாளர்கள்,ஜோதிட ஆராய்ச்சியாளர்கள், ஆன்மீக பாதையில் இருப்பவர்களின்,உதவியோடு எனக்கு கிடைத்த பதிலை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
நம் சூரிய குடும்பத்தை பொறுத்தவரை சூரியனும் அதை சுற்றுகிற கிரகங்களின் சுற்று பாதையும் அதற்க்கு மேல் இருக்கிற பால்வெளி மண்டலமும் GALAXY என்ற அடுக்காய் இருக்கின்றன. சூரிய குடும்பத்தில் நாம் பூமியில் இருக்கின்ற படியால் பூமியின் பாதையை வைத்து மற்ற கிரகங்களின் ஓட்டத்தையும் அது எவ்வாறு பூமியில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதையும் கணக்கிட்டார்கள். பூமியின் சுற்று பாதை ஒரு நீள் வட்ட பாதை என்பதும் பூமி தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்பது நாம் அறிந்ததே இந்த பூமியின் நீள் வட்ட பாதையில் இருக்கிற வளைவுகளை பிரித்தால் ஒவ்வொரு வளைவும் 30 டிகிரி கோணத்தில் வளைகின்றன.
இடமிருந்து வலமாகஒரு சீரான அமைப்பில் கிரகங்கள் சுற்றி வருகின்றன. இந்த சற்று பாதையின் மேற் பகுதி வடக்காகவும் கீழ் பகுதி தெற்காகவும் பிரித்து திசைகளாக கணக்கிட்டார்கள். இந்த திசைகள் இணைகிற மூளைகளை திக்குகளாக கொண்டார்கள்.
திசைகள் நான்கு திக்குகள் நான்கு அல்லவா? பூமியின் வட திசையின் மூலைலிருந்து கிழக்காக துவங்குகிற முனையை 0 வாக கணக்கு எடுத்து பூமியின் நீள் வட்ட பாதையை அது வளைகிற 30 டிகிரி கோணத்தில் பிரித்தால் 12 வளைவுகள் வரும் இந்த 12 வளைவுகளையும் ராசி மண்டலங்களாக பிரித்தார்கள். 12 X 30 = 360 டிகிரி.இந்த ராசி மண்டலங்களை பூமியிலிருந்து கணிக்கிட சூரிய சுற்று பாதையின் மேல் அடுக்காக இருக்கிற நட்சத்திர கூட்டங்களை அடையாளமாக எடுத்து கொண்டு அந்த நட்சத்திர கூட்டத்தில் இருக்கிற பெரிய நட்சத்திரங்களை கணக்கு எடுத்து கொண்டார்கள்.ஒவ்வொரு 30 டிகிர்யிலும் மூன்று பெரிய நட்சத்திரங்களை கணக்கில் கொண்டு ராசி மண்டலங்களை தீர்க்கமாக கணித்தார்கள். கிரகங்கள் தான் தன் சுற்று பாதையில் சுற்றுகின்றன. ஆனால் நட்சத்திரம் ஒரே இடத்தில் நின்று கொண்டு இருக்கின்றன. மேலும் நட்சத்திர கூடங்களின் சக்திகள் தான் கிரகங்களை ஆள்கின்றன.சூரியன் கூட ஒரு நட்சத்திரம் என்பதை வானவியலாளர்கள் நிருபித்து கூறுகின்றனர். அப்படி பார்க்கின் ராசி மண்டலங்களுக்கு அடையாளமாக கொண்ட நட்சத்திரங்களின் சக்தியையும் கிரகங்கள் உள்கொண்டிருகின்றன.ஏனென்றால் நட்சத்திரம் என்பது ஒரு ARIEL VIEW அங்கிருந்துதான் சக்தி மையம் இயங்குவதை கண்டுபிடித்து ஒவ்வொரு நட்சத்திரத்தின் சக்தி எந்த கிரகத்தின் உள்சக்தியாக இருக்கிறது என்பதை வைத்தும் அந்த கிரகத்தை அந்த சக்தியை பிரதிபலிக்கிற நட்சத்திரத்துக்கும் கொண்டார்கள். இதில் மிக பெரிய சக்திமையம் சூரியனை மையமாக கொண்டு ஒடி கொண்டி இருக்கிறது ஒரு மின் விசிறியை போல அதே மூன்று இறைக்கை சக்தியுடன். அதாவது 0 டிகிரிளிருந்து 120 டிகிரீ வரை
ஒரு சக்தி ஓட்டமும், இதே சக்தி ஓட்டம் அடுத்த 120 கு பிரதிபளிக்கிறது ,மீண்டும் அடுத்த 120கு பிரதிபளிக்கிறது. ஒரு KALEIDOSCOPE போல ஒவ்வொரு 120 டிகிரியும் அந்த கிரகத்தின் சுற்று பாதையும் மைய புள்ளியின் விசைக்கும் நடசத்திர சக்திக்கும் சுற்று பாதையின் வேகத்தில் உருவான காந்த சக்திக்கும் ஆன கலவையாக இருக்கிறது. அதனால் 3 120 டிகிரியும் வெவ்வேறான குண நலன்களை பிரதிபலிகிறது. சரி முதல் 120 டிகிரியில் ஆரம்பிக்கிற முதல் சக்தியில் இருக்கிற முதல் நட்சத்திரத்தை அஸ்வினி என பெயரிட்டு பரணி,கிருத்திகை,ரோகினி,மிருகசீரிடம்,திருவாதிரை,புனர்பூசம்,பூசம் ஆயில்யம், என கொண்டு இந்த நட்சத்திரங்களின் சக்தி ஓட்டம் எந்த கிரகத்தின் கிரகப்பில் இருக்கிறதோ அந்த கிரகத்திற்கு சேர்த்தார்கள், இந்த முதல் 120 டிகிரியில் 9 கிரகங்களும் அடங்கி விடும்.அடுத்த 120 டிகிரி முதல் 120 இன் பிரதிபலிப்பாகும் மகம் ஆரம்பித்து,கேட்டை யில் முடியம் அடுத்த 120 டிக்ரீ மூலத்தில் ஆரம்பித்து ரேவதியில் முடியும்.இதுதான் 1,5,9.என்கின்ற மிக பெரிய சக்தி ஓட்டம். த்ரிகோணம் என்று ஜோதிட மொழியில் கூறுகின்றனர், இதை பாற்றி பற்றி பின்னர் விரிவாக எழுதுகின்றேன்.அஸ்வினி நட்சத்திரத்தின் பிரதிபலிப்பு சந்திர சூரிய வட்ட பாதையின் வெட்டு புள்ளியின் சக்தியை கொள்வதால் அஸ்வினியை கேதுவுக்கு சொன்னார்கள்.இதேபோல மற்ற நட்சத்திரங்களை போட்டு பார்த்தால்,9 கிரகங்களும் 27 நட்சத்திரங்களும் திரையில் விழும் படம் போல விழும். மிகுந்த சிரமத்தின் பேரில் சேகரித்த தகவல்களை மிக சுருக்கக்மாக சொல்லவே இவ்வளவு இடம் தேவை பட்டது. தங்கள் கருத்துக்களை பதியுங்கள் அய்யாக்களே.உங்கள் கருத்துக்கள் என் போன்ற மாணவனுக்கு என்னும் தெளிவை கொடுக்கும் நன்றி. BY ASTRO BABU
No comments:
Post a Comment