Thursday, 6 March 2014

ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது
பெண் மூலம் நிர்மூலம் --- ஏன் இப்படி?


நண்பர்களே அக்காலத்தில் மக்கள் ஆற்றங்கரை ஓரங்களில் கூட்டம் கூட்டமாய் ஒற்றுமையாய் வாழ்ந்தார்கள். அவர்களின் ஒற்றுமை கெட்டுவிடாதவாறு இருக்க அந்த கூட்டத்தினரிடம் சில விதிமுறைகள் விதித்து அதை யாரும் மீறி விடாதவாறு பார்த்து கொண்டார்கள். சொந்தம், பந்தம், உறவு,சமுதாயம் போன்ற முடிச்சுகளை போட்டு தங்கள் கூட்டத்தை இன்னும் பலபடுத்தி கொண்டார்கள்.அங்கு ஆண்கள் பொருள் தேடி வெளியே சென்றார்கள்.பெண்கள் வீட்டை கவனித்து கொண்டார்கள்.அனைவரும் கூட்டு குடும்பமாகவே வாழ்ந்தனர். ஒரே குடும்பத்தில் அப்பொழுதெல்லாம் 12,13 குழந்தைகள் கூட பிறந்தன.அந்த குடுமபத்தின் தலைவனும் தலைவியும் அக்குழந்தைகளை திறம்பட வழி நடத்தி சென்றார்கள். சரி இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் மேலும் படியுங்கள்.
ஆயில்யம் நட்சத்திரத்தின் குணநலன்களை பார்ப்போம்.ஆயில்யம் புதனுடைய நட்சத்திரம் நான் ஏற்கனவே புதனனின் தன்மைகளை எழுதி உள்ளேன். இவர்களுக்கு பிடுயுடரி செயல்பாடு தீவிரமாக இருக்கும்.எதையும் ஆராய்ந்து தெளிய வேண்டும் என்பர்.தீர்க்க தரிசனமும், சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல் படலும், புரிதல் தெளிவாக இருபதால் தெளிவும் அதிகமாக இருக்கும்.பொருத்தமான காரணங்கள் இல்லாமல் எதையும் ஏற்று கொள்ள மாட்டார்கள். புத்தி தெளிவாக இருப்பதால் சிந்தனை அதிகம் இருக்கும்.சிந்தனைக்கு செயல் வடிவமும் கொடுப்பர். செயலிலும் தீவிரமும் இருக்கும்.தன பணியில் தீவிரமாக இருப்பார் சுய நலம் மிகுந்து இருக்கும்.எதை செய்தாவது தான் நினைத்ததை சாதிப்பர். தன தனிப்பட்ட நுண்ணறிவின் மூலம் தன்னை அடையாளம் காண்பித்து தன்னை நிரூபிப்பர் மேலும் .சந்திரனின் வழிகாட்டலும் (கடக ராசி) இருக்கும்.மனதளவில் திடமாகவும் பகல் காணுபவராகவும் இருப்பார். சுருக்கமாக ஜோதிட மொழியில் சொன்னால் சர ராசியில் ஜல தத்துவம். புதனின் ஆதிக்கமும் கூட.
முன்னர் அறிமுக உரையில் கூறியது போல ஒரு கூட்டு குடும்பத்தில் அக்காலத்தில் இம்மாதிரி கூரிய அறிவுடைய பெண்களை சமாளிப்பது கடினமாக இருந்தது.அவளுடைய அறிவு விஷங்களில்.., மேலும் குடும்ப தலைவின்(மாமியார்) கட்டுப்பாடும் மூட சமுக கோட்பாடுகளில் ஒத்துபோகாத குணமும் ஆயில்ய நட்சத்திர பெண்ணுக்கு இருந்தது.இப்பொழுது புரிகிறதா ஆயில்யம் மாமியாருக்கு ஏன் ஆகாது என்று?

மூலம்: ஆஹா , கேதுவின் முழு ஆட்சி பெற்ற நட்சத்திரம் ஞானத்தின் தெளிவில் இருப்பர். எதையும் ஒரு எதிர்பார்ப்புடனே காரியத்தை கொண்டு போவார்கள்.குருவின் ராசியான தனுசுவின் குணங்களும் குருவின் தாக்கமும் இருக்கும்.அறிவும் ஞானமும் ஒரு சேர இருக்கும்.தனக்கு நிகர் தானே என்று நினைப்பர். தன தனிப்பட்ட கருத்துகளால் தனித்து காண்பர். அனைத்து விஷயங்களிலும் தீர்கமான அறிவும் விஷய ஞானமும் தன்னகத்தே கொண்டு இருப்பர்.சற்று கபட தன்மையுடனும் அதை வெளியே தெரியாதவாறும் நடந்து கொள்வர்.உபயத்தில் நெருப்பு தத்துவம் அதுவும் பெண்ணிற்கு ....இதுவும் அக்கால கொள்கைக்கு மாறுபட்டு இருக்கும் என்பதால் அந்த பெண் வாழ்க்கை பட்ட கூட்டு குடும்பத்தில் இந்த குணங்கள் சரியாக .வராது என்பதால் பெண் மூலம் நிர்மூலம் என்று பயமுறுத்தி மூல நட்சத்திர பெண்ணை வேண்டாம் என்றார்கள்.
இதே போல் விசாகம்,கேட்டை க்கும் தனியாக உண்டு.ஆனால் இக்காலத்தில் தெளிவான, அறிவாளியான மன திடமான பெண்களால் பல குடும்பங்கள் நிமர்ந்ததை நான் என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். ஜோதிடர்களாகிய நாம் இதை மக்களுக்கு கொண்டு சேர்த்து கால மாற்றங்களை மக்களுக்கு புரிய வைத்து கூரிய பெண்மையை போற்ற வேண்டும் என்பதே என் அவா.
இன்னும் வரும்........ அஸ்ட்ரோ பாபு.

No comments:

Post a Comment