Tuesday, 4 February 2014

நண்பர்களுக்கு வணக்கம் ராசிகளை எப்படி 12 ஆக பிரித்தார்கள்? 360 பாகைகளை எதற்கு 30 பாகைகளாக பிரிக்க வேண்டும்?

நண்பர்களுக்கு வணக்கம் ,
சூரிய வட்டப்பாதை ஒரு நீள் வட்ட பாதை என்பதும் அதில் அனைத்து கிரகங்களும் தனக்கென ஒரு பாதையில் தன்னைத்தானே சுற்றி கொண்டு சூரியனையும் சுற்றி வருவதும்  நாம் அறிந்ததே. இதில் பூமியின் பாதை சூரியனில் இருந்து நான்காவது அடுக்கு பாதையாகும்.இதில் பூமி 23 டிகிரி சாய் கோணத்தில் தன்னைதானே சுற்றி கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது.இந்த நீள் சுற்று பாதையில் இருக்கிற வளைவுகளை பிரித்தால் 12 வளைவுகள் வரும். ஒவ்வொரு வளைவும் 30 டிகிரி  கோணத்தில் வளைகின்றன.ஆக 12 வளைவுகள் க்ஸ் 30 டிகிரி= 360 இதுதான் ஒரு முழு சுற்று பாதை.
பூமி தன்னைதானே சுற்றுகிற அளவையும் பூமி சூரியனை சுற்றுகிற அளவையும் நம் முன்னோர்கள் நாம் மூச்சுவிடும் கால அளவுகளை வைத்து கணக்கிட்டு உள்ளார்கள்.பூமி சூரியனுக்கு முகமும்,முதுகும் காட்டிட 21,600 சுவாசம் நேரம் ஆகும்.இதை இன்னமும் துல்லியமாக கணிக்கிட  நாடி துடிப்பு  கணக்கு ( இதை பற்றி பின்னர்  எழுதுகிறேன்).
(நன்றி - திரு பொன்னையா சுவாமிகளின் கால் புருஷ தத்துவமும் ராசி கட்டமும்).
இந்த 12 வளைவுகளை சூரிய பாதையில் பூமியை மையமாக வைத்து சூரியனிலிருந்து , சனியின்  சூரிய பாதை வரை  அந்தந்த கிரகங்களின் பாதையில் 30 டிகிரி கோணத்தில் இருக்கிற வளைவுகளை ஒன்று சேர்த்து நேர்கோட்டால் வரைந்தால் ஒரு குறுங்கோணம் வரும்.இதுதான் ராசி என்றனர். 7 கிரகங்களின் சுற்று பாதையும்  சேர்த்து ராசி மண்டலம் என்றனர்.
ஒவ்வொரு கிரகமும் தன்னைதானே சுற்றி, அதுவும் ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றி , சூரியனின் ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு, என இந்த மூன்று சக்தியும் ஒவ்வொரு வளைவுகளில் ஒவ்வொரு விதமான சக்தியை கொண்டதாக இருக்கிறது.ஒவ்வொரு வளைவுகளில் ஒவ்வொரு விதமான வேகம் காந்த சக்தி மாற்றம், காந்த சக்தி,ஈர்ப்பு சக்தி கலவை என்று இந்த ராசிகட்டம் ஒவ்வொரு விதமாய் தன்னை வெளி படுத்து கிறது.
இந்த ராசி மண்டலத்தை பூமி கடக்கிற காலத்தை மேற்சொன்ன அளவுகளை கொண்டுதான், மணி,நாட்கள்,மாதம்,வருடம் என நாட்காட்டி யாக சொன்னார்கள்.
காலே காற்றாய் , காற்றே உயிராய்,
காற்றின் அசைவே உயிரின் துடிப்பாய்
துடிக்கும் நாடி வினாடியாகி 

நாழிகை நாளாய்,திங்கள்,ஆண்டாயீ......திரு. பொன்னையா சுவாமிகளின் பொன்னான வரிகள் இதை தெளிவாக உணர்த்தும் 

No comments:

Post a Comment