Monday 18 January 2016

தெய்வங்கள் என் சிந்தனையில் பாகம் 15
ஈசன்
நண்பர்களுக்கு வணக்கம்.
இந்த கட்டுரை தெய்வங்கள் என் சிந்தனையில் ஈசனை பற்றிய தொடரின் தொடர்ச்சி,லிங்கம்,சூலாயுதம்,மூன்றாம் பிறை,பற்றிய நான் உணர்ந்த விஷயங்களை போன பாகங்களில் சொல்லியிருந்தேன் அதன் தொடர்ச்சியான உடுக்கை,கங்கை,நெற்றிக்கண்,பாம்பு பற்றிய விசயங்களை பார்போம்.
உடுக்கை:- பிரபஞ்சச இயக்கத்தில் எவ்வித தூண்டுதலும் இல்லாமல் மூன்று விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன,ஆத்தல்,காத்தல்,அழித்தல்,என்பனவாம் அது.இந்த பிரபஞ்ச இயக்கத்தின் ஒரு வடிவமான நாமும் அதன் உள் தானே இருக்கின்றோம்.நம்முள்ளும் இம்முன்றும் இயங்கும் தானே, இந்த ஆத்தல்,காத்தல்,அழித்தல் என்பதின் ஒலிவடிவம்,அ,உ,ம் என்ற ஓங்கார ஒலி, இந்த மூன்று இயக்கங்களில் குறைபாடுகள் ஏற்படின் அது உள்ளார்த்தமாகவோ அல்லது வெளியார்த்தமாகவோ இருந்தாலும் நம் இயக்கம் மாறுபடும்.துன்பம் என்பது என்ன நாம் நினைப்பதற்கு மாற்றாக இருப்பது அல்லது நடப்பது,இம்மூன்று இயக்க மாறுதல்கள் தான் அந்த மாறுபட்ட தன்மையை நமக்கு தரும். அந்த இயக்க மாற்றத்தை சரி செய்ய இந்த ஒலி சப்தமான ஓங்காரத்தை உள் செலுத்த அந்த இயக்கம் சீர்பெறும் அந்த ஒலி வடிவத்தை வெளிக்கொணரும் கருவிதானே உடுக்கையின் சப்தம் உடுக்கை சப்தம் கேட்க கேட்க நம்முள் ஒரு வீரியம் பிறப்பதை நாம் உணர்ந்திருப்போம் அந்த ஓங்கார ஒலி வடிவத்தை கையில் ஏந்தி இருப்பதுதான் உடுக்கை.
கங்கை:- சிவனின் தலையிலிருந்து பீறிடுகிர நீரை கங்கை என் சொல்கின்றனர்.கங்கை என்பதின் அர்த்தமே பரிசுத்தம். நம்முள் இருக்கும் பரிசுத்தம் விந்து.அந்த விந்துவை உள்கட்டி சக்கரங்கள் துணையோடு மேல் ஏற்ற முக்தி. விந்து கட்டுதல் பற்றிய விவரங்களையும் அதன் ஆற்றல்களையும் ஐயப்பன் கட்டுரையில் விவரமாக எழுதியுள்ளேன்.மேலும் நாம் உட்கொள்ளும் உணவின் இறுதி வடிவமே விந்துதான் கர்மா பயணிக்கும் படகு.இந்த விந்தின் வழியேதான் கர்மா உயிர் பெற்று கொண்டே இருக்கிறது, விந்தை வெளியேற்றாமல் நிறுத்தி கர்மாவை கடக்க விடாமல் செய்து விந்தை சக்கரங்களின் வழியாக மேலேற்றுகிறபோது நம்முள் ஆற்றலின் பிரவாகம் வெளிப்படும் அஷ்டமா சித்திகள் கைகூடும். இந்த விந்தின் வீரியம் நம் சூட்சும இயக்கத்தின் மைய பகுதியான மனோன்மணியை தொட்டு அதன் கதவுகளை திறந்து ஆறாவது சக்கரமான ஆக்ஞ்சா வில் மேலும் ஆற்றல் பெற்று சகஸ்ராவை தொட்டு முட்டி திறந்து வெளியேறுகிற தன்மை முக்தி விந்துவின் மூலமாக கர்மா மறு உயிர் பெறாமல் மறித்து வெளியேறுவது எனக்கூட எளிமையாக சொல்லலாம்.மறுபிறவி அற்ற நிலை. இதைத்தான் சிவன் முடியில் இருந்து வெளியேறும் நீர்வடிவமாக சித்தரித்து இருக்கின்றனர். பிரம்மச்சரியத்தின் இறுதி சீரிய நிலை இது.
நெற்றிக்கண்:- நெற்றிக்கண் என்பது நம் ஏழு ஆதார சக்கரங்களில் அறைவது சக்கரம். இது ஆக்ஞ்சா, இதை தாண்டினால்தான் துரியாதிதம் என்று குறிப்பிடுகிற சகஸ்ரா சக்கரம் ஆக்ஞ்சா சக்கரம் திறந்து வலிவிட்டால்தான் இறுதி வடிவமான முகதிற்கு அதாவது சகஸ்ராவிர்க்கு பயணிக்க முடியம். நான் மேலே குறிப்பிட்டுள்ள மனோன்மணி என்ற இடம் ஒட்டு மொத்த உடலின் இயக்கத்தின் ஆதாரமான மூளையில் இருக்கிற ஹிப்போதலமசின் இயக்க மைய புள்ளி ,அதுதான் இயக்க அச்சு.அதை நிறுத்தி மனமும் இயக்கமும் இறந்த நிலையில் இருப்பின் ஆக்ஞ்சா வின் கதவு திறக்கும். அதை திறந்து அங்கே இருக்கும் ஆற்றல்களை பெற்றுதான் பெரும்பேறான முக்தியை,இருப்பை சிவனை அடைய முடியும்.அந்த திறப்புதான் நெற்றிக்கண்,அகத்தின் திறவு,இயக்கத்தின் நிறுத்தம். சித்திகளின் உறைவிடம்,அளப்பறிய ஆற்றல் நெற்றிக்கண்.
பாம்பு:- நம் உடல் செல்களால் ஆனது எனபது நாம் அனைவரும் அறிந்ததே.அந்த செல்களின் இயக்கம் x குரோமோசோன் y குரோமோசோனின் இயக்கங்கள் தானே இந்த இயக்கமே ஒன்றோடொன்று பிணைந்து பாம்புபோல் தான் இருக்கும்.நம் இயக்கம் இரண்டு விதமான செயல்படும்.ஒன்று ஸ்தூலம், புறம் சார்ந்தது அதாவது உடலின் இயக்கம் சூட்சுமம் அகம் சார்ந்தது உயிர் சார்ந்தது. இதைத்தான் ஜோதிடத்தில் ராகு கேது என்பார்கள்.இந்த இரண்டு இயக்கத்தின் வரைபடம் பாம்பு வடிவம் தான். சூட்சுமத்தில் இந்த இயக்கம் கர்மா என்பார்கள் கர்மாவின் கடைசி பயணம் ஆதார சக்கரத்தில் விசுக்தியில் முடிந்து விடும். விசுக்தி என்பது புறத்தில் உரைப்பின் கழுத்து பகுதியாகும் அதனால்தான் இயக்கத்தின் கர்மாவின் செயல்களை விசுக்தியிலேயே நிறுத்தி ஆற்றலை மேல்மாடியான ஆக்ஞ்சவிற்கு அனுப்பும் சமிக்சைதான் சிவன் கழுத்தில் பாம்பு,
இதை குண்டலினி சக்தியாகவும் சொல்வார்கள்.என்னை பொருத்தவரை குண்டலினி சக்தி என்பதை நான் சக்கரங்களின் இயக்க ஆதார சக்தியாகத்தான் எடுத்து கொள்கிறேன்.இயக்கத்தின் வடிவமே பாம்பு. இயக்கத்தை அணிகலன்களாக கொன்றிருக்கும் தாத்பரியமே சிவன் கழுத்தில் பாம்பு
மேலும் சிவ தாத்பரிய்ங்களான மான் தோல்,புலித்தோல் விரிப்பு என அடுத்த பாகத்தில் தொடர்கிறேன். இன்னும் வரும்....அஸ்ட்ரோ பாபு.
தெய்வங்கள் என் சிந்தனையில், பாகம் - 14
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை தெய்வங்கள் என் சிந்தனையில் ஈசன் பற்றிய தொடரின் இரண்டாம் பாகம்.முந்தைய பாகத்தில் சிலை வடிவமான லிங்கத்தை பற்றிய என் உணர்தலை எழுதியிருந்தேன்.இக்கட்டுரையில் சித்திர வடிவமான சிவ தாத்பரியங்களை பார்க்கலாம்.
சித்திர வடிவமான சிவனின் அடையாளங்கள் ஆவண சூலம்,தலையில் மூன்றாம் பிறை,தலையில் இருந்து வரும் கங்கை,நெற்றிக்கண்,மான் தோல் உடை,புலித்தோல் விரிப்பு,.இவற்றின் விலாசங்களை எனக்கு தெரிந்தவரை,அல்லது நான் உணர்ந்தவரை இக்கட்டுரையின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.
சூலம்:- இது சுவாச தன்மை, சூரியக்கலை-சந்திரக்கலை-சுழிமுனை சுவாசம். நம் சுவாசம் மூன்று நிலைகளில் இயங்கும் வலது நாசியில் சூரியக்கலையும், இடது நாசியில் சந்திரக்கலை இரண்டு மணி நேரத்திற்கு மாறி மாறி ஓடும். இந்த சுவாச மாற்றம் நிகழும் பொழுது வலதிலிருந்து இடத்துக்கு,இடத்திலிருந்து வலதுக்கு மாறும் பொழுது மைய பகுதியில் ஓடும் சுவாசம் சுழிமுனை, இதை பற்றி மிக விவரமாக முந்தைய கட்டுரைகளில் எழுதியுள்ளேன். இந்த சுழிமுனை சுவாசமியக்கமும் இருப்பான சிவனுக்குள் அடக்கமே. இந்த சுழிமுனை சுவாசத்தை தொடர்ந்து ஓட செய்தல், சூரிய இயக்குமும் சந்திர இயக்கமும் இணைந்து செயல்படும் சிவ நிலையை நமக்கு உணர்த்தும்.இந்த சுழிமுனை சுவாச தன்மை மிக பெரிய ஆற்றலை நம்முள் ஏற்படுத்தும்.இது தான் சூலத்தில் இருக்கும் மூன்று அமைப்புகள் இந்த அமைப்புகளை தாங்கி இருக்கும் நீள கம்பி நம் முதுகு தண்டு.முருகன் வைத்திருக்கும் வேலுக்கும் இந்த கம்பிக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.அதில் முருகனே சுழிமுனை சுவாசம் அந்த சுவாசம் முத்துக் தண்டில் ஏறி இரு பிரிவாக பிறந்து மீண்டும் ஒன்றில் இணையும்.சிவன் சூலாயுதம் சுழிமுனை சுவாசம் ஒன்றிணைந்து முதுகு தண்டில் அதவாது ஆறு சக்கரங்களில் செயல் படல். வேல் ஒரு குறிப்பிட்ட பகுதியை தாக்கும், சூலாயுதம் அழிக்கும்.வேல் ஆக்ஞ்சா வை குத்தி திறக்கும். சகஸ்ராவை அடைய,.சூலாயுதம் தன், நான் அகங்காரத்தை அழிக்கும் சுவாசத்தன்மையில்.சிவத்திற்கு வேலுக்கு பதில்தான் நந்தி.
பிறை வடிவம்:- சிவன் தன் தலையில் சூடி இருக்கும் பிறை வடிவ சந்திரன் மனமும் அறிவும் சார்ந்தது. முதலில் அது ஏன் சந்திரன் எனும் போது பிறை வடிவமாக சித்திரித்து இருக்கின்றனர்.முழு வடிவ சந்திரனைத்தானே வடிவமைத்து இருக்க வேண்டும்.அது என்ன பிறை வடிவம் அதுவும் மூன்றாம் பிறை வடிவம். சந்திரன் இரண்டு நிலைகளில் தன்னை வெளிபடுத்துகிறது.ஒன்று அமாவாசை,இன்னொன்று பௌர்ணமி. ஒன்று வளர்ச்சி ,இன்னொன்று தேய்வு,அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை 15 திதி,பௌர்னமையிலிருந்து அமாவாசை வரை 15திதி அமாவாசையில் இருப்பை நோக்கியும்,பௌர்ணமியில் சக்தியை நோக்கியும் சந்திரன் பயணிக்கும்.சக்தி என்பது இயக்கம் என்பதை ஏற்கனவே தெளிவு படுத்தி இருக்கிறேன் வளர்பிறை ஆன பௌர்ணமி நோக்கி பயணிக்கையில் சந்திரன் பூமியில் சக்தி நிலையை உண்டு செய்யம்,அதாவது மனிதர்களாகிய நம்முள் சந்திரனின் காரகமான மனநிலையில் இயக்கத்திற்கான தூண்டுதல்களை உண்டு செய்யும்.இதனால்தான் நற்காரியங்களை நம்முள் இயக்கம் வலு பெற்றிருக்கும் காலமான வளர்பிறையில் செய்ய சொல்வார்கள்.இந்த மன வலிமை குறைந்து அதாவது இயக்கம் அடங்கி இருப்பு வரும் காலம் அமாவசை.அந்த 15 திதிகளில் சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக தன் இயக்கத்தை குறைத்து இருப்புக்குள் அடங்கும். அமாவாசையில் இருப்பின் தன்மை நம்முள் நிலை பெரும். இயக்கத்திற்கு வெளிபாடு என்பது செயல்.ஆனால் இருப்புக்கு செயல் என்ன ஒன்றுமில்லைதானே அதாவது அமைதி.மனம் அமைதியாக இருக்கும் காலங்களில் செயல என்பது அவ்வளவு பலன் அளிக்காது என்பதால்தான் சம்சார வாழ்வின் செயல்களான நற்காரியங்களை வளர்பிறை காலங்களில் செய்ய சொன்னார்கள்.
இந்த திதிகளில் கூட பல விதமான மாற்றங்களை நம் முன்னோர்கள் கண்டு நமக்கு அருளி சென்றிருக்கிறார்கள். ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு மாதிரி செயல் படும் வளர் பிறை திதிகள் ஒரு சக்தியையும் தேய் பிறை திதிகள் ஒரு சக்தியையும் நமக்கு வழங்குகின்றன.திதிகள் வழங்கும் சக்திகளை ஒவ்வொரு கிரக செயல்களோடு ஒப்பிட்டு அந்த செயல்கள் நடைபெறும் திதிகளை அந்தந்த கிரங்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள்.இதன் அடிப்படையில் நோக்கின் வளர் பிறை மூன்றாம் திதி ஆனா திரிதியை திதி நம்முள் அறிவு சார்ந்த விஷயங்களை நம்முள் தூண்டும் அந்த திதியை குருவுக்கு கொடுத்து இருக்கிறார்கள் இதனால்தான். அன்று அறிவும் சந்திரன் குணமான மனமும் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.அறிவும் மனமும் இயக்கமான வளர் பிறையில் இருக்கும் தருணத்தில் மனம் மிக வலிமையோடு இருக்கும் அந்த மன வலிமையை இறைபால் செலுத்தும் பொழுது எங்கும் ஒன்றான இறை தத்துவங்களை உணர முடியும் என்பதே பிறை வடிவ சந்திரனை சிவம் தனனத்தே கொண்டிருத்தல்.மற்ற அடையாளங்கள் அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்.இன்னும் வரும் ....அஸ்ட்ரோ பாபு
தெய்வங்கள் என் சிந்தனையில் பாகம் -13
ஈசன்
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை தெய்வங்கள் என் சிந்தனையில் என்ற தொடர் கட்டுரையின் இறுதி பகுதி,அனேகமாக அனைத்து கடவுள்களையும் எழுதி இருக்கிறேன் என்று நம்புகிறேன். விநாயகர்,முருகன், பெருமாள்,அனுமன்,ஐயப்பன்,அம்மன்கள்,கிராம தேவதைகள் என அனைத்து பிரிவினரையும் பிரித்து எழுதி இருக்கிறேன். அதன் தொடர்ச்சியின் இறுதி ஈசன் பற்றியது.இக்கட்டுரை.
இப்பிரஞ்ச படைப்பின் அடிநாதமே இரண்டுதான்,ஒன்று இருப்பு,மற்றொன்று இயக்கம்,இருப்பு சிவம்,இயக்கம் சக்தி இதைத்தான் சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி iஇல்லை என்றனர். இயக்கம் இல்லா இருப்பு வீண்.- வெறுமை, இருப்பே இல்லா இயக்கம் சாத்தியமே இல்லை.இரண்டும் இருந்தால் தான் முழுமை.இயக்கம் மட்டுமே வேண்டும் என்போர் அல்லது இயக்கம் தான் மேன்மை என்போர் சக்தி வழிபாட்டலர்களாகவும், இருப்பே சிறப்பு என்போர் சிவா வழிப்பாட்டர்களாகவும் இருக்கின்றனர். இயக்கத்தை சார்ந்தோர் சம்சாரிகளாகவும் ,இருப்பை சார்ந்தோர் சந்நியாசிகளாகவும் இருக்கின்றனர்.
இந்த இருப்பு பஞ்ச பூத பிரிவுகளில் தன்னை நிலை நிறுத்தி இருந்து கொண்டு இருக்கிறது.இருப்பும் இயக்கமும் நம்முள் இயங்குவது பிரபஞ்ச வெட்ட வெளியின் எங்கும் நிறைந்திருக்கும் காற்று ஆன சுவாசத்தின் வழியே. இந்த சுவாச இயக்கம் அ,உ,ம் ஆக நமசிவய என நம்முள்ளே நிலை பெற்று இருக்கிறது என்ற அறிமுகத்துடன் சிவனுள் செல்வோம்.
சிவத்தை பற்றி எழுதவோ உரைத்து கூறவோ இந்த ஜென்மமே பற்றாது சிவம் என்ற இருப்பை நம் முன்னோர்கள் சித்தரித்து வைத்திருக்கிற தாத்பரியங்களை பற்றி நான் உணர்ந்த விஷ்யங்களை நண்பர்களாகிய உங்களுடன் இக்கட்டுரையின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.
இயக்கத்துக்கு ஒரே வடிவம் பெண் வடிவமாக சிலைகளாலும்,சித்திரத்திலும் வடித்து இருக்கின்றனர். ஆனால் இருப்புக்கு மட்டும் இரண்டு வடிவம்,சிலைகளுக்கு லிங்கம் சித்திரத்துக்கு பல் வேறு வடிவம்.ஸ்தம்பம் ஆவுடையார் இணைவு லிங்கம் சிலை வடிவத்திற்கு,சித்திரத்துக்கு கையில் சூலம்,உடுக்கை,தலையில் பிறை,தலையிலிருந்து பிறக்கும் கங்கை,நெற்றிக்கண்,கழுத்தில் பாம்பு,மான் தோல் உடை என அலங்கரித்த வடிவம் என காட்டி இருக்கின்றனர்.மேலும் அவர் வாசம் செய்வது இடுகாடு எனவும் கூறுகின்றனர். நம் முன்னோர்கள் கூறி சென்ற எந்த விஷயமும் அர்த்தம் நிறைந்ததாய் தான் இருக்கும்.
சிலைக்கு லிங்கமும்,சித்திரத்துக்கு அலங்கரித்த வடிவமும் ஏன்?
முதலில் லிங்கம் பற்றி பார்ப்போம்,ஸ்தம்பம் என்கின்ற நீண்ட தூண் இருப்பு அதை சுற்றி வருகிற அல்லது நடக்கிற இயக்கம் ஆவுடையராகி லிங்கம் வடிவம் பெறுகிறார் சிவம். சிலையில் ஸ்தம்பம் ஆன்மா எனவும் சுற்றி வருகிற ஆவுடையார் உயிர் எனவும் கொள்ளலாம் ஸ்தம்பம் சூரியன்,ஆவுடையார் சந்திரன்,சூரியன் இருப்பு,சந்திரன் இயக்கம் இந்த இரண்டும் இல்லையெனில் பூமி மட்டும் இல்லை எந்த கிரகங்களுமே இல்லை.உயிர் வாழ்வாதாரங்களின் அடிப்படை சக்திகள் சூரியன், சந்திரனே.இந்த இணைவை அல்லது இரண்டின் செயல்களை சிலை வடிவமாக கொண்டதுதான் லிங்கம்.
இந்த லிங்க வடிவத்தை எந்த சிந்தனையின் வடிவில் கொண்டாலும் பொருள் படும் அதுதான் ஆதியான,ஒன்றே ஆன இருப்பு. சித்தத்த்துவத்தின் ஆழ்ந்து உள் இருப்பவர்கள் லிங்கத்தை 8,2, தத்துவமாக கூட சொல்வார்கள்.இது பெரிய தாத்பரியம்.
நம் கண்களின் உள் புறத்தோற்றம் லிங்கம்,காலத்தை உணர கூடிய ஒரே விஷயம் நம் உடலில் கண் மட்டுமே.காலம் இல்லையெனில் எதுவமே இல்லை இருப்பு ஒன்று தான் மிஞ்சும்.
இருப்பு இயக்கத்தின் துணையோடு ஸ்ருஷ்டி யை நடத்தி கொண்டே இருக்கிறது.இதுதானே உலகம்.இந்த இருப்பாகிய ஆணும்,இயக்கம் ஆகிய பெண்ணும் இணைந்திருக்கும் வடிவம் லிங்கம் இன்னும் இன்னும் சிவம் பற்றி பறக்கும் சிந்தனைகளின் அத்தனைக்கும் பொருள் உரைத்து கொண்டே போகலாம். நம் முன்னோர்கள் சிவம் பற்றி தாங்கள் உணர்ந்த விஷயங்களை நிறையகொடுத்து சென்றிருக்கின்றனர்.அடுத்து சித்திர வடிவம் பற்றி அடுத்த பாகத்தில் பார்போம். இங்கு நண்பர்களுக்கு ஒரு கேள்வி நிறைய கோவில்களில் ஏன் சிவத்தை லிங்க வடிவமாகவே வடித்திருக்கிறார்கள் உருவமாக ஏன் செதுக்கி வைக்கவில்லை? தெரிந்தவர்கள் பகிருங்களேன்.அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன் இன்னும் வரும்..... அஸ்ட்ரோ பாபு