Wednesday, 13 May 2015

ஜோதிடமும் ஆன்மீகமும்
ஜோதிடம் என்பது பிரபஞ்சத்தில் சூரியனும் அதை சுற்றி வருகிற ஏழு கிரகங்களும், பூமி,சந்திரன் சுற்று பாதைகளின் வெட்டு புள்ளிகளின் (ராகு,கேது) இயக்கமும், சூரிய குடும்பத்தில் இருக்கும் கிரகங்களும், பூமியில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பூமியில் இருக்கும் உயிரனங்களின் கட்டமைப்பில் தன் நிலையை மேற்கூறிய விசயங்கள் எவ்வாறு நிர்மாணிக்கின்றன என்பதே அன்றி வேறில்லை.அண்ட பிரபஞ்சத்தின் நடனம் ஜோதிடம் அதன் புரிதல் ஆன்மீகம்.
சூரியனை மையமாக கொண்டு சுற்றி வருகிற கிரகங்களின் சக்திகளான, சுற்றுப்பாதை,சுற்றுகிற வேகம்,ஒவ்வொரு கிரகத்தின் தன்மை,இழுவிசை,விலக்கு விசை இவ்விரு விசைகளின் வெளிப்பாடான காந்த சக்தி,ஈர்ப்பு சக்தி,ஆகியவைகள் இணைந்து வெளிபடுத்தும்,பொது தன்மைகள் தான் பூமியில் ஜனிக்கும் உயிரனங்களின் உருவாக்கத்திற்கும் கட்டமைப்புக்கும் மூலம்,மேற்கண்ட சக்திகளின் மூலமாக பூமியில் கிடைக்கிற தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் அந்த தட்ப வெப்ப நிலைகள் வேலை செய்கிற கருவிகளான பஞ்ச பூதங்களான நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் இவைகளின் பயன்பாடு உயிரனங்களில் குறிப்பாக மனித இனத்தில் செயல்படும் விதம் ஜோதிடம்.
ஜோதிடம் என்பது எங்கே இருக்கிறது எங்கிருந்து வேலை செய்கிறது? மேலே கூறிய விஷயங்கள் ஜோதிடம் என்றால் அதன் இயங்கும் இடம் ஆன நாம் தானே ஜோதிடம் வேலை செய்கிற இடம். ஓர் உயிர் ஜனிக்கும் பொது எந்த கிரக சுழல்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவோ அந்த சக்திகளின் அடிப்படையில்தான் ஜனனத்தின் கட்டமைப்பு இருக்கும்.அந்த கட்டமைப்பின் படிதான் மனிதன் உருவாகிறான்.அப்படி உருவான மனிதனின் செயல்பாடுதான் ஜோதிடம்.இந்த செயல்பாடு எவ்வாறு இருக்கும். அந்த செயல்பாடு அம்மனிதனுக்கு நன்மை பயக்குமா? ,அம்மனிதனின் செயல்பாடு சேர்ந்து வாழ்கிற தன்மையான குடும்பம்,உயிர் காக்கிற வழிகளான தொழில்,பிரபஞ்ச படைப்பின் ஆதாரமான இனபெருக்கம் (சந்ததி),அம்மனிதன் தோன்றிய மூலமான தாய்,தந்தை போன்ற வற்றை அறிவது ஜோதிட பலன் இதற்கு நம் முன்னோர் பல்வேறு கணக்கியல் விசயங்களை வைத்து கணக்கிட்டு உள்ளனர்.
நம் வாழ்கிற பூமியில் நம் மிக அருகில் இருக்கிற பூமியை சுற்றி வருகிற சந்திரன் நேரடியான தாக்கத்தை பூமியில் ஏற்படுத்துகிறது.சந்திரனை வைத்துதான் இரவு,பகல்,காலம் போன்றவற்றை கணக்கிட்டு உள்ளனர். அக்கணக்கின் அங்கமான திதி,நாள்,நட்சத்திரம்,அமாவாசை,பௌர்ணமி போன்ற விசயங்கள் எவ்விதமான மாற்றங்களை ,இப்பூமியில் ஏற்படுத்துகின்றன.அம்மாற்றங்கள் மனிதனுக்குள் எவ்வாறு செயல்படுகிறது என்பதும் ஜோதிடம் தானே
ஆன்மீகம்:- மேற் கூறிய விசயங்களின் புரிதல். அப்புரிதலினால் இந்த பிரபஞ்ச விசயங்களை மனிதன் தன வாழுகின்ற தன்மைக்கு பயன்படுத்தி பிரபஞ்ச இயங்கு சக்திகள் பூமியில் எங்கெங்கு கிடைக்கிறதோ அங்கே பொது வழிபாட்டு தளங்கள் (கோவில்) அமைத்து அந்த வழிபாட்டு தளங்கள் எவ்வாறு இருக்க வேண்டும்(ஆகம விதிகள்) என்று தீர்மானித்து, அந்தந்த சக்திகளுக்கு ஒரு உருவ அமைப்பை ஏற்படுத்தி, அந்த உருவ அமைப்புகளுக்கான ஒரு வழிபாட்டு விதிமுறைகளை விதித்து ஜனன கட்டமைப்பில் அச்சக்தி கிடைக்காதவர்களுக்கு வழங்குதல். பிரபஞ்ச கிரக இயக்கங்களை தன்னுள் உணர்தலான யோகம், தவம் போன்ற பயிற்சிகளினால் பிரபஞ்ச இயக்கங்களை கட்டுக்குள் கொண்டு வந்து மனிதனின் அன்றாட வாழ்விற்கும்,அச்சக்திகளின் மூலத்தை (மோட்சம்) அடைதல்,பிரபஞ்ச ஒலி ஒளி (மந்திரம்)மூலமாக இயக்க சக்திகளை சாதகமாக பயன் படுத்தி கொள்ளுதல்.வாழும் முறைகளுக்கு அல்லது கூட்டமாக வாழும் மக்களின் வாழ்வாதாரத்தில் பிரச்சனைகள் ஏற்படா வண்ணம்.அவர்கள் வாழும் தன்மைக்கு ஒழுங்கு முறைகள் ஏற்படுத்தல் (கலாச்சாரம்) ஏற்படுத்திய ஒழுங்கு முறைகளை கடை பிடிக்க செய்தல் (பண்பாடு) போன்றவைதானே ஆன்மீகம்.
கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மனிதனின் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்று எவாறு எல்லாம் வாழ்ந்தால் அக்கூட்டம் சிறப்புறும்.அல்லது இன்னின்ன சட்டத்திட்ட கட்டுபாடு வாழ்முறைகள் கையாண்டால் அவர்கள் வாழ்வு சிறக்கும்,அல்லது பயன் பெறுவார் என்று வாழ்ந்த மக்கள் தங்கள் அனுபவங்களை அந்தந்த காலங்களில் பதிந்து வைத்து சென்றதுதான் வேதம். அதில் அனைத்து சூட்சுமங்களும் அடக்கம்.வானவியல் அவை இயங்கும் விதமான ஜோதிடம்,விதிமுறைகளான மனுசாஸ்த்திரம்,கூட்ட கட்டமைப்பான (வர்ணாஸ்ரமம் ) கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்(அனுஷ்ட்டானம் )அவரவர் தொழில்(கர்ம) இவற்றை உள்ளடக்கியது தானே வேதம்.
ஆன்மிகம் வேதத்தின் ஒரு அங்கமே.
அனால் இவைகள் பூமியில் தோன்றிய மனிதனுக்கு சொல்ல பட்டவைதானே?மனிதனனின் தோற்றமும்,இந்த பூமியும் பிரபஞ்ச சக்திகளின் இயக்கமும், மூலமும் ஜோதிடமே. ஜோதிடம் தான் ஆதி அந்தம் அனைத்தும். ஜோதிடத்தை உணர்வோம் போற்றுவோம் வளம் பெறுவோம். அன்புடன் ....அஸ்ட்ரோ பாபு

No comments:

Post a Comment