Tuesday 25 November 2014

கோவிலுக்கு செல்வது எப்படி?

 நண்பர்களுக்கு வணக்கம், கோவிலுக்கு சென்றால் மன நிம்மதி கிடைக்கிறது, வேண்டுதல் நிறைவேருகிறது , என்னவோ நல்லது நடக்கும் பா. என்று இல்லாமல் கோவில்களில் நிர்மாணித்து இருக்கிற சக்திகளை உணர்ந்து அறிந்திடவே இந்த கட்டுரை. கோவில்களுக்கு செல்லும்போது மறக்காமல் சோம்பல் இல்லாமல் அந்த கோவிலின் குளத்தில் கால் கழுவி செல்லுங்கள் ஏனென்றால் பிரபஞ்சத்தில் இருக்கிற கிரகங்களின் கதிர்களை உள்வாங்கி தக்க வைத்து கொள்கிற தன்மை தண்ணீருக்கு உண்டு அதே போல் கடத்துகிற தன்மையும் தண்ணீருக்கு உண்டு. அந்த கோவிலில் எச் சக்தி தீர்மானித்து இருகிறார்களோ அச் சக்தியை குளத்தில் உள்ள நீர் கிரகித்து தக்க வைத்து இருக்கும்.மேலும் மூளைக்கு செல்லும் நரம்புகளின் நுனிகள் கால் பாதங்களின் முன் பகுதி, பின் பகுதி, பின் காலில் இருக்கிற மெல்லிய எலும்புகள் நம்முடைய முதுகு எலும்போடு தொடர்பு உடையதால் சில் என்ற இந்த சக்தி நிறைந்த நீர் நரம்புகளை தூண்டி எலும்புகளை வலுபெற செய்து நீங்கள் கோவிலுள் பெற போகும் சக்திக்கு நம்மை ஆய்தத படுத்தும். அப்புறம் நுழைவாயிலில் இருக்கிற படிகளில் கால்பாதம் அழுந்த மிதித்து ஏற வேண்டும். இது இக்காலத்திற்கு சொன்னால் சிறந்த அக்குபஞ்சர் அழுத்தம். நம்முடைய கால்ப்லாடார், பெரிகாடியம்,மூலையில் உள்ள பதிவு இடங்களை சமன் படுத்தும். கோவிலின் பிரகாரத்தை சுற்றி நடக்க நம்முடைய ரத்த அழுத்தம் சீராகும். ரத்த ஓட்டம் சீராகும்போது மூளையின் பரபரப்பு தன்மையும் அடங்கி மூலையில் சுரக்கும் சுரபிகளின் செய்யலபாடும் சமன் படும். இதனால் உடலில் பரபரப்பு தன்மை அடங்கி அமைதி ஏற்படும் . கோவிலின் உள்ளே செல்லும்போது உடம்பும் மனதும் ஒருமித்து இருக்கும். அபபொழுது அக் கோவிலில் தீர்மானம் செய்ய பட்டு போற்றி வருகிற சக்தி நம்முள் இறங்கும். நான் ஏற்கனவே கட்டுரை களில் கூறி உள்ளபடி நம்முடைய எண்ணங்களும் செய்யல பாடுகளும் பிரபஞ்சத்தில் இருக்கிற கிரகங்களின் உடைய சக்தியின் ப்ரோக்ராம்மை யை சிறிது மாற்றும்.நமக்கு எந்த கிரகத்தின் பாதிப்பு உள்ளதோ அதை சீர் செய்யும். கோவில் இருக்கிற சக்தி என்பது பிரபஞ்சத்தில் இருந்து பூமியில் விழுகிற கிரகங்களின் கதிர் வீச்சு அதை உள்வாங்கி தான் ஒரு ஸ்தூபி போல கற்பகிரகத்தில் நிறுத்தி இருப்பார்கள்.( இது fastfood.கோவில்களுக்கு பொருந்தாது ஏனென்றால் fastfood கோவில்கள் என்னை பொறுத்த வரை தனி மனித அல்லது ஒரு கூட்டத்தின் பெருமையை பறை சாற்றுகிற விசயமாக மாறிப்போனது காலபோக்கில் ) கற்ப கிரகத்தில் இருக்கிற சக்தியை தூண்டுகிற விதமாகத்தான் கோவில்களில் பொருள்கள் பயன்படுத்தப்படும் பூ,சந்தனம், விபூதி(விபூதியை பற்றி ஏற்கனவே எழுதி உள்ளேன் )குங்குமம் போன்றவை. கர்பகிரகத்தின் உள்ளே ஏற்றப்படும் தீபம் கூட அச் சக்திக்கு தேவை படுகிற அளவு வெப்பத்திற்கு தகுந்தாற்போல் 1,3,5,7,9, த்ரி தீபங்கள் ஏற்றப்படும். அங்கு வழங்க படுகிற பிரசாதம் கூட அச் சக்தியை நம் உடலுக்கு கொண்டு செல்லுகிற விஷயமாகத்தான் வைத்து இருப்பார்கள். மேலும் எந்த கோவிலிக்கு சென்றாலும் உட் பிரகரததிலோ அல்லது கோவில் வாளகததி னுல்லோ குறைந்தது ஒரு மணி நேரம் இருக்க வேண்டும். இதற்காகத்தான் விளக்கு பூஜை, ச்ங்கு பூஜை, அபிசேகம்,சொர்ண அபிசேகம், ஆராதனை , என்று மக்களை கோவிலுள் இருக்க வைத்து, அச் சக்தியை பெற வைத்தார்கள் நம் முன்னோர்கள். இன்னும் வரும். அன்புடன் அஸ்ட்ரோ பாபு.
                                               கும்பமேளா 


வணக்கம் நண்பர்களே,அடுத்த பதிவு கும்பமேளா கும்பமேளா நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது,12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது மஹா கும்பமேளா. அலகாபாத் ,நாசிக்,காசி,ஹரிதுவார் நான்கு இடங்களில் நடக்கும் மிக பெரிய ஆன்மிக விழா. குருவின் நீள் வட்ட பாதை யில் ஒரு திருப்பதிர்க்கு முந்தைய ராசியில் குரு பிரவேசிககும்போது போது நடக்கும்.அதாவது ரிஷபம் சிம்மம் விருச்சிகம் , கும்பம் ராசிகளில் குரு இருக்கும்போதும்,சூரியன் மகர ராசில் நுழைகிற மகர சங்கராந்தி அன்று தொடங்கி மகா சிவராத்திரி அன்று நிறைவு பெரும் அதாவது குளிர் காலம் முடிவு பெற்று சூரியனுடைய சக்தி (வெயில்) தொடங்குகிற காலம் ஜோதிடத்தில் குருவின் 9ஆம் பார்வையில் இருக்கிற காலம் . இந்த 2013 ஆம் ஆண்டு கும்பமேளா மஹா கும்பமேளவாக கொண்டாடப்பட்டது. 144 வருடத்துக்கு ஒரு முறை வருகிற கிரக சேர்க்கைகளுடுன் வந்தது.ரிஷபத்தில் குரு சந்திரன் நடுவில் பூமி துலாத்தில் சனி ராகு 5 கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் இருந்த பிப் 10 தேதி 17 லட்சம் பேர் கங்கையில் நீராடினர் கங்கையின் சிறப்பு,தண்ணீர் கெட்டு போகாது பாசம் பிடிக்காது புழு வராது எத்தனை நாள் வைத்து இருந்தாலும், இதில் இருக்கிற வேதியல் பொருள்கள் தண்ணீரையும் அத தண்ணீரில் இருக்கிற பொருளையும் அழிய விடாது. ஈர்ப்பு சக்தி மிக மிக அதிகம், இந்த வருடம் குருவின் கதிர்வீச்சு நேரடியாக அலகபாத்தில் விழுந்தது அதும் பூமியும் ஒரே நேர் கோட்டில் இருந்தபோது 35 நாட்கள் இருந்தது இந்த கிர்ஹா சேர்க்கை. கங்கை தனக்கே உரிய ஈர்ப்பு சக்தி,ஈர்த்த சக்தியை உள்ளே தக்க வைது கொள்வது போன்ற குணத்தினால் குரு சனி.ராகு,சந்திரன் ஆகிய வற்றின் கதிர்களை ஈர்த்து வைத்து கொள்வதால் இந்த கும்பமேளாவில் கங்கையில் நீராடினால் கிரகங்களின் கதிர்வீச்சை நேரடியாக அதிகமாக பெற முடியும் என்ற காரணத்தினால் பிப் 10 அன்றைக்கு ஒருங்கே 17 லட்சம் பேர் நீராடினர். கும்பமேளா என்பது சிவனும் தேவர்களும் அமுதத்தை உண்ணும் போது அலகபாத்தில் சிந்தியதகவும் இந்த கங்கைகரை இல் அந்த அமுதத்தின் சக்தி இருபதாகவும் கூறினார்.எப்படியோ கதைகளை கூறி மக்களை அங்கு வர வைத்து கிரகங்களின் சக்தியை பெற நம் முன்னோர்கள் வழி செய்து இருக்கின்றனர் நானும் சென்று இருந்தேன். நிறைய சாதுக்கள் ,சாமியார்கள்,அகோரிகள்,நாகாக்கள் பைராகிகள் சந்திக்கிற வைப்பு கிடைத்தது. 7 நாட்கள் அங்கு தங்கி இருந்தேன்.நிறைய அனுபவங்கள்,அதிலும் நாகாக்களுடுன் இரண்டு நாள் தங்கி இருக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இன்னும் வரும். அன்புடன் . அஸ்ட்ரோ பாபு.
வணக்கம் நண்பர்களே, என் அடுத்த பதிஉவ் லக்னமும் ராசியும் சூரியனை மையமாக கொண்டு இருக்கிற நம் பூமி உள்பட இருக்கிற சூரிய குடும்பத்தின் நீள் வட்ட பாதையை டிகிரில் பிரித்தால் மொத்த டிகிரி 360 ( 4 பிரிவுகள் ஒரு பிரிவு 90 டிகிரி ) 90 டிகிரியை இன்னும் துல்லியமாக கணிக்க அதை மூன்று 30 டிகிரியாக பிரிக்க மொத்தம் 12 பிரிவுகள் வரும். இதுதான் 12 ராசி மண்டலம் ஒரு ஒரு பிரிவும் 30 டிகிரி ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி 12 x 30 = 360 டிகிரி. இந்த 12 ராசி மண்டலத்திற்குள் இருக்கும் நட்சத்திரங்களை அடையாளமாக வைத்துதான் அன்றைய வனவியாளர்கள் ஆராய்சியாளர்கள் கிரகங்கள் நகருதலை கண்டறிந்தனர் அடையாளத்திற்கு பெயரும் இட்டனர்.ஒரு ராசில் (30 டிகிரி) 3 நட்சத்திரம் ஒரு ஒரு நட்சதிர்க்கும் மேல்.கீழ்,இடம் ,வலம் என 4 பாதை என்பதைதான் 4 பாதம் என ஜோதிடத்தில் கூறுகின்றனர் நம் முன்னோர்கள் (வானவியாலார்கள்) கண்டுபிடித்தது மொத்தம் 7 கிரகங்கள் 2 நிழல கிரகங்கள் (ராகு, கேது ஜோதிடத்தில் மிக சக்தி வாய்ந்த கிரகங்கள் இவற்றை பற்றி பின்னர் கூறுகிறேன் ) மொத்தம் 9 கிரகங்கள் ஒவ்வவு ரு கிரக பாதையில் இருக்கிற பெரிய மூன்று நட்சத்திரம் அவற்றின் நேர்கொட்ட்டு பிரிவு 4 ( பாதங்கள்) 9x3x4=108 பாதங்கள் என பிரித்தனர் கணக்குகாக அடுத்து பூமி சூரியனை சூற்றி வர 24 மணி நேரம் (12 ராசி மண்டலங்கலயும் (360 டிகிரி) சுற்றி வர) 24/12 = 2 மணி நேரம். இந்த 2 மணி நேரத்தில் சூரிய மண்டலத்தில் பூமி நிற்கிற ராசி மண்டலம் தானாய்யா லக்னமாக ஜோதிடத்தில் கூறு கின்றனர். ஒரு குழந்தை பிறக்கும் போது பூமி எந்த ராசி மண்டலத்தில் இருக்கிறதோ அந்த ராசி தான் ஜனன லக்னம். சூர்யா குடும்பத்தில் சந்திரனை தவிர மற்ற கோள்களுக்கு ஒரு வட்ட பாதை உண்டு. ஆனால் சந்திரன் பூமிய சுற்றி வருகிற ஒரு கிரகம்,சந்திரன் பூமியை சுற்றி கொண்டே ஒரு ராசி மண்டலத்தை கடக்க 60 மணி நேரம் (2 1/2 நாட்கள் ) ஆகும் மேற்கத்திய ஜோதிடத்தில் சூரியனையும் கிழக்கத்திய நாடுகளில் சந்திரனை மையமாக கொண்டு ஜனன ராசியை கணக்கு எடுக்கிறார்கள் ஜோதிடத்தில் சந்திரன் நிற்கிற ராசி மண்டலம் ஜனன ராசி என்றும் சந்திரனை வைத்து நடப்பு பலன்களும் லக்னத்தை வைத்து அப்பிறப்பின் நிரந்தர பலன்களையும் கண்டறிகிறார்கள் ஜோதிடத்தில் இன்னும் வரும் அஸ்ட்ரோ பாபு .
ஜோதிடம் அறிமுகம் 

வணக்கம் நண்பர்களே,அஸ்ட்ரோ என்ற உடன் ஒ! ஜோதிடரா என்று எண்ணாமல் நான் கற்ற, உணர்ந்த, புரிந்து கொண்ட விசைங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், ஜோதிடத்தை பற்றிய அறிவியல் பூர்வமான உண்மைகளை நான் ஆராய்ந்து கற்ற வற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தான் இந்த பக்கத்தை முக நூலில் துவங்கி உள்ளேன் ஜோதிடம் இன்பது நம்பிக்கை தானா? நம்பலாமா? அதெல்லாம் பொய்! அட காசு பண்றன்கப்பா, என்று சொல்லி கொடுக்க பட்ட விசயங்களை தவிர்த்து வெறும் மனதால் படிங்கள் ./ ஜோதிடம் என்பது ஒரு வானவியலின் சூத்திரம் நம் இருக்கிற பூமி உள்பட கிரகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற சூரிய குடும்பத்தின் பயண பாதை. இந்த பாதையில் பயணிக்கிற கிரகங்களின் சக்தி எவ்வாறு இந்த சூரிய பாதையில் செயல் படுகிறது இந்த செயல்பாடு நம் வாழுகிற பூமியில் எவ்வாறு உள்ளது என்கின்ற கணக்கு. சூரியனை மையமாக கொண்டு ஒரு நீள் வட்ட பாதையில் மற்ற கோள்கள் தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது நம் படித்த ஒன்று. ஆனால் இந்த மொத்த பாதையும் தினமும் அண்டவெளியில் நகர்ந்து கொண்டிருகிறது. பயணம் எங்கே தொடங்கி எங்கே முடியும் என்றுதான் யாருக்கும் தெரியாது. இதுபோல நூற்று கணக்கான சூரிய குடும்பங்கள் அண்டவெளியில் உள்ளது. நம் பூமியை விட பெரிய பாறைகள், அவற்றின் மோதல்கள் நட்சத்திர கூட்டம்,பால்வெளி மண்டலம் அப்பாப்பா! நாசாவின் வலை தளத்தில் சென்று பாருங்கள் புரியும் இந்த பிரமாண்டம்தான் படைப்பின் விஸ்வரூபம்./ / இந்த பாடத்தில் வருகிற ஒரு சிறு தலைப்புதான் நம் பூமியும் அதில் வாழுகிற உயிர்களும் இப்பூமில் வாழுகிற உயிர்களில் டார்வின் உடைய பரிணாம கொள்கையில் புரிந்து கொள்ளல்,செயல் படுத்துதல்,பகுத்து அறிதல் என்ற மூன்று அறிவுகளினால் மனிதன் மேம்பட்டவனாக இருக்கிறான் அவனுடைய வாழ்க்கையில் இந்த வானவியல் எவ்வாறு செயல்படுகிறது என்பது தான் ஜோதிடம். நம் முன்னோர்கள் இதை அறிந்து படித்து சாமானிய மக்களுக்கு புரிந்தாற்போல் சில் உதாரணங்களை வைத்து சொன்னார்கள்.இதில் சிலர் இவ்விசயங்களை மறைத்து இதை ஒரு ரகசியமாக வைத்து கொண்டு பிழைக்க தொடங்கியதின் விளைவு தான ஜோதிடம் எதோ கண்கட்டி விதை போல மாறி போனது. இன்னும் வரும். ...... அன்புடன் அஸ்ட்ரோ பாபு.