Monday 17 April 2017

கூடல்

 பூவும் பூவும் உரசுவது போல் சுகமா! இல்லை,
முகத்தில் உரசும் பனி கூட்டம் போலா? இல்லை,
பாலை வன மணல் சுறாவளியோ? இல்லை,
 எரிமலையின் பாறை குழம்பு போல ரௌத்திரமா?...........

கூடல் என்ன அது - எது போல்
இவ்வுணர்வுக்கு ஒப்பிடல் உண்டா?
கூடல்--ஒரு தேடல்-- சரி-
எதை பற்றிய தேடல்?
ஆண் பெண் உருவங்கடந்த நிலை தேடல்,
 உள்ளங்கடந்த நிலை தேடல்-- இல்லையில்லை
 அது இறைவனுடைய இனபெருக்க சூத்திரம்....
சரியில்லையோ? குழப்புகிறதே!
கேள்வியும் குழப்பம் பதிலும் குழப்பம்.

 கூடல்.......
.
கேள்விகளற்ற பதில்களற்ற ஓர் அனுபவம்
உணர்தல்தானே அனுபவம்......

ஓர் இலக்கணம் இல்லா மொழி..
ஒ! இவ்வளவு பெரியாத கூடல்?
வியப்பனாதா கூடல்?

 இல்லையே!

 எல்லா தினசரி வேலைகளுக்கும் விளக்கம் கூறுவோரே!
 இதுவும் அதுபோல் கடமை இல்லையா?

இல்லையில்லை

உடம்பை உடம்பு அறிதல்..
ஒ! இவ்வளவுதானா!
இந்த வட்டத்திலா அடங்குகிறது
 இல்லையில்லை புரிய வில்லை போ
போய் உணர்ந்து பார். ..........

குழப்பத்தில் தலை சொறிய குனிந்தபோது.
காலுக்கு கீழே--
ஒரு பூவின் மேல் வண்டு
 உணர்த்தியது ஆயிரம்

 பூவும் வண்டும்


ஆஹா அறிந்தேன் கூடலை
சொல் என்றார்.
நானும் உணர் என்றேன்.
சொல்ல முடியா அனுபவம்
இது பேரானந்தம்.
கூடல் என்பது பேரானந்தமா?
விளக்கம் இன்னும் தேவை
 விவரம்தான் அறியவில்லை யாரும்.
சரி பூவும் வண்டும் இருப்பது கூடலா?
எப்படி? செயல் என்ன?
பூ பூத்திருக்க வண்டு வந்ததா?
வண்டு வரும் என்று பூ பூத்ததா?
அழைப்பு எங்கிருந்து?
அழைப்பு என்று இல்லை இங்கே
பின்!

 பூவின் மனம் கொடுப்பதற்கு
வண்டின் வருகை பெறுவதற்கு
இயற்கையின் நியதி.
அப்படியா? புரிய வில்லையே!
கொடுப்பதில் பூவுக்கு இன்பம்
பெறுவதில் வண்டுக்கு இன்பம்
 இயற்கையின் எழுதாத இலக்கணம்
வண்டு வர காத்திருத்தலும்
 பூ எங்கே? என்ற தேடலும் சங்கமம்
.
ஒ? இது ஒரு சுயநலமில்லா செயல்
 பூவின் இதழில் வண்டின் ஸ்பரிசம்.
வண்டின் இதழ்
 பூவின் இதழில்
 தேடலை நோக்கி
 இதழுக்கு கீழே வண்டின் தலை சாய்ப்பு.
பூ விரிந்து கொடுக்க
சூழின் குழிக்குள் வருடல்......
ஆம் வண்டின் ஊறல்.....
பூவில் சிலிர்ப்பு - இதழ்களில் .....
சூழ் குழியின் மேடேறி
 மகரந்த சிக்கலின் நடுவே தேன்.
உறிஞ்சியது வண்டு,
கொடுத்தலில் பூவுக்கு சுகம்
எடுத்ததில் வண்டுக்கு சுகம்.
உச்சி முகர்ந்து,

இதழில் துவங்கி
 கண்கள் கிறங்க
,நாசியில் சிறிது வாசம் உணர்ந்து
கன்னத்தில் கிள்ளி
இதழின் ருசி உணர்ந்து
கழுத்தின் வழுக்கலில் வழுக்கி
மார்பின் திண்ணம் உணர்ந்து
இடுப்பின் வளைவில் மீண்டு
தந்த தொடைகளில் தலைகீழாய் போய்
 பாதங்களில் முடித்து நிமிர்ந்தபோது .................
மகரந்த சிக்கலில் தேன்.

 உணர்ந்ததா பேரானந்தம்......

எங்கே கேள்விகளை காணோம்.
 கேள்விகள் மௌனங்களுக்குள் மறைந்து
 கண்கள் கரைந்து பேரானந்த உணர்வில்
கண்ணீராய் ... ஆழ்ந்த அமைதி.
ஆஹா ஆஹா இன்னும் இன்னும் உளறலாய்......
கூடல் ஒரு பேரானந்த அனுபம்..
ஆம் ........

இன்னும் வரும். அஸ்ட்ரோ பாபு

No comments:

Post a Comment