Thursday 24 January 2019

ஸ்ருஷ்டி தத்துவம்       பாகம் - 2

நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை ஸ்ருஷ்டி தத்துவம் என்னும் தொடர் கட்டுரையின் பாகம் - 2 ஆன மனித கட்டமைப்பை பற்றியது. பாகம் 1  இல் பஞ்ச பூத   தத்துவம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டு அது எவ்வாறு மனித வாழ்வாதார விஷயங்களில் பயன்படுத்தி கொள்ளப்பட்டது என்பதனை எழுதி இருந்தேன்.

அவ்வாறு உற்று நோக்குகைகளில் மனித உயிர்களில் இரண்டு வித தன்மைகள் இருப்பதையும் கண்டு உணர்ந்து, அந்த இரண்டு வித தன்மைகளிலும் இந்த பஞ்ச பூத தன்மைகள் எங்கனம் செயல்படுகிறது என்பதனையும் நம் முன்னோர்கள் உணர்ந்து உள்வாங்கி சொல்லி சென்றிருக்கின்றனர்.அந்த இரண்டு தன்மைகள் ஆவன. இருப்பு, இயக்கம் என்பனவாம்.
இருப்பு இல்லையெனில் இயக்கம் இல்லை, அதேபோல் வெறும் இருப்பும் அல்லது வெறும் இயக்கமும் பயன் இல்லை. ஏதோ ஒன்று செயல்பட வேண்டும் எனில் செயல்பட போகும் ஏதோ ஒன்று இருக்க வேண்டும்தானே அதேபோல் ஏதோ ஒன்று இருப்பதை இயக்கம்தான் செய்லபட வைக்க உதவும் சக்தியும் வேண்டும்தானே இதை அப்படியே மனிதனுள் கண்டு கொண்டால் செயல்பட இருக்கும் இருப்பு,  உடம்பு.
அந்த உடம்பு செயல்பட இயக்கம் என்ற ஒன்று தேவைதானே. இருப்பு என்பது உடல் அந்த உடல் செயல்பட உதவும் உந்துதல் இயக்கம்.
ஆக இந்த மனித  உடலில் பஞ்ச பூத தத்துவங்கள் எங்கனம் செயல்படும், உடலில் இருக்கும் இயக்கத்தில் இந்த பஞ்ச  பூத தத்துவங்கள் எங்ஙனம் செயல்படும் என்பதை அடிப்படையாக கொண்டே அம்மனிதனின் செயல்பாடுகளும்,  அந்த செயல்பாட்டை ஒற்றியே அவனுடைய குணாதிசயங்களும் அந்த குணாதிசியங்களை ஏற்றே அம்மனிதனின் வாழ்வியல் விஷயங்கள் அமைக்கப் பட்டிருக்கும்.இந்த விஷயங்கள்தான் ஜோதிடம். இந்த அமைப்புகள் இங்கனம் செயல்படுகையில் அதன் பயனான  வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற பல்வேறு விதமான கணக்குகள் ஜோதிட பலன். இந்த இருப்பையும்,இயக்கத்தையும் கண்டு கொள்ள நம் முன்னோர்கள் பலவிதமான கணக்குகளை தங்கள் புரிந்து கொண்ட விதத்தில் வெளிப்படுத்தியவைதான் பல்வேறு ஜோதிட முறைகள்.
இந்த தத்துவம் தன பிரபஞ்சத்தின் அனைத்து விஷயங்களிலும் பிரதிபலிக்கும்.எது ஒன்று வேண்டுமென்றாலும் அல்லது இருந்தாலும்  அது உருவாக்கவேப்பட வேண்டும் இல்லையா. அந்த உருவாக்களுக்கு இதே இருப்பும்,இயக்கமும் வேண்டும். இவ்வாறே இந்த தொடர்நிலைகளில் தான் இந்த பிரபஞ்ச்ம இயங்கி கொண்டே இருக்கிறது.இந்த உருவாக்கள் தத்துவார்த்தங்கள்  நின்று போனாலோ அல்லது அறுந்தாலோ பிரபஞ்ச்ம நின்று  விடும்.
மேலும் நாம் என்று சிந்திக்கும் நிலையில் மனிதனின் இருப்பாகிய உடல் உருவாக்கப்பட தானே வேண்டும். அவ்வாறு உருவாகிற பொழுது, உருவாக்குகிற இருப்பும் இயக்கமும் தன விஷயங்களை அடிப்படையாக கொண்டேதான் இருப்பு,இயக்கத்தை உருவாக்குகின்றன.
மூலமான ஒன்று இயக்கத்தால் தூண்டி இயங்க  பெற்று ஒன்றை உருவாக்குகிறது.அவ்வாறு உருவாக்கிய ஒன்றில் இருப்பும்,இயக்கமும் தன்னகத்தே பெற்று இன்னொன்றை உருவாக்க.... என்ற தொடர் சங்கிலிதான் இந்த பிரபஞ்ச இயக்க நிலை.

சரி, பஞ்ச பூதங்கள் 5  ம் 2   நிலைகளில் இருப்பு மற்றும் இயக்கத்தன்மையில் இயங்கினாலும் அல்லது உருவாக்கினாலும் அந்த உருவாக்க்களுக்குள்ளும் இரு நிலை இருக்கிறது, ஆம் ஆண மற்றும் பெண் என்ற குண பேதங்களை கொண்ட உருவக மாற்றங்களை கொண்ட இருபடி நிலை இந்த இருபடி நிலைகளான ஆண் மற்றும் பெண்ணினுள்ளும் இருப்பு, இயக்கம் என்ற நிலையே கொண்டே இந்த பிரபஞ்ச சக்தி தன லீலையான உருவாக்கத்தை நகத்தி கொண்டே இருக்கிறது....... இன்னும் வரும். .... ஆஸ்ட்ரோ பாபு.
ஸ்ருஷ்டி தத்துவம்,
பாகம் - 1.

நண்பர்களுக்கு வணக்கம்,
பல மாதங்கள் கழித்து மீண்டும் எழுத துவங்குகிறேன். என்னுள் நெடுநாளாய் ஓடி கொண்டிருந்த இந்த ஸ்ருஷ்டி தத்துவத்தை,அதில் நான் உணர்ந்த விஷயங்களை நண்பர்களாகிய உங்களுடன் இத்தொடரின்  மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.இதில் நான் எழுத போகும் விஷயங்கள் அனைத்தும் என் சொந்த உணர்தல்களே.ஒவ்வொரு விஷயங்களையும் என்னுள் விதைத்து எழுத தூண்டுகிற என் குரு நாகாவே இத்தொடரையும்  எழுத தூண்டுகிறார். அவரை வணங்கி  இத்தொடரை தொடர்கிறேன்.
நான் என் முந்தைய  கட்டுரைகளில் உரைத்துள்ளபடி, இந்த பூமியில் ஜனித்த மனித உயிர்கள் உட்பட அனைத்தின் தலையாய கடமை இனப்பெருக்கம் செய்வது மட்டுமே. உயிர்கள் தன்னை நிலைநிறுத்தி கொள்ள உணவு, இயக்கசுவாசம், இவை இரண்டுமே இனப்பெருக்க என்ற விஷ்யத்திற்குத்தான்.இது,இது மட்டுமே இயற்கை வழங்கிய விஷயம். பரிணாம வளர்சசியில் மனிதன் வளர்ச்சியுற்று ஆறாம் அறிவை பெற்று அதன் மூலம் சிந்தனை என்ற அதிசய  ஆற்றலில் நாகரிக மேம்பாடு அடைந்து. அந்த நாகரிக மேம்பாட்டின் வளர்சசியில் கூட்டம் கூட்டமாக விரிந்து அந்த கூட்டத்தின் நலனுக்கென சில விதிகளை வகுத்து,அவரவர் வாழ்ந்த தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு தத்தம் வாழ்வாதாரங்களை பெருக்கி கொண்டனர்.

அவ்வாறு வாழ்ந்த கூட்டங்களில்  தம் கூட்டத்தின் நலனுக்காக ,தம் வாழ்வாதாரத்திற்காக , தங்கள்  செயல்களை பிரித்து தான் வாழ்ந்து வந்த கூட்டத்தின் உறுப்பினர்களையும்  அந்த செயல்பாட்டிற்காக பிரித்து தங்களை காத்து மற்றும் வாழ்வாதாரத்தை பெருக்கி வாழ்ந்து  வந்தனர். அச்செயல்பாடுகளாவன, கற்பித்தல்,காத்தல்,கொணர்தல் ,அல்லது வழங்குதல்,பராமரித்தல் என கூட்ட  உறுப்பினர்கள் பிரிக்கப்ட்டு ஒவ்வொரு கூட்டமும் தத்தம் பணிகளை செவ்வனே செய்து தங்கள் கூட்ட வாழ்வாதாரத்திற்காக வாழ்ந்து வந்தனர்.

ஆதிகால மனிதனின் இந்த வாழ்வியல் முறைகளில் அவன் கண்ட,உணர்ந்த  விஷயங்கள் 5 அவை நீர்,நிலம்,நெருப்பு காற்று ஆகாயம் இவை மட்டுமே.  இவற்றின் ஒவ்வொன்றின் செயல்பாடுகளும் வாழ்வாரத்தின் இன்றியமையா ஒன்றாக இருந்த படியால்  அவற்றை அவன் வணங்கும் பூதங்களாக(உருவம் இல்லா எதையும் செய்யும் வல்லமை படைத்த )மாற்றி, அந்த பூதங்களின் பயன் பாட்டினை புரிந்து கொண்டு அந்த பயன்பாடுகளை தன வாழ்வு மேம்பட எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையின் விளைவால் பல சூட்சுமங்களை கண்டறிந்து அந்த சூட்சுமங்களை  சொல்லி சென்றதுதான் வேதங்களாய் இன்றும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்து நின்று கொண்டிருக்கிறது.
இந்த பஞ்ச பூதங்கள் தான் இந்த பூமியில் இருக்கிற அனைத்து விஷயங்களின் மனிதன் உட்பட ஆதாரமாக இருக்கிறது அல்லது கட்டமைப்பாக இருக்கிறது. அவ்வாறு எடுத்து கொள்கைகளில் மனிதனுக்குள்ளும் இந்த பஞ்ச பூத தன்மைகள் இருப்பதை உணர்ந்து அந்த பஞ்ச பூத தன்மைதான் மனிதனின் உடலமைப்புகளாய் இருக்கின்றன  என்பதை அறிந்து, தன வாழ்வாதார செயல்களுக்கு அந்த பூத அமைப்புகள் உடையவர்களை பயன்படுத்தி கொண்டனர்.உதாரணமாக நெருப்பு(காத்தல்),நிலம்(கொணர்தல் அல்லது வழங்குதல்),காற்று(கற்பித்தல்),நீர்(பராமத்தால்) என்பனவாம்.
இந்த பஞ்ச பூத அடிப்படை கட்டமைப்பை கொண்டவர்களை மேற் சொன்ன செயல்பாடுகளுக்கு பிரித்து பயன்படுத்தி தங்கள் கூட்டத்தினை காத்து வாழ்ந்து வந்தார்கள். பின்னர் வந்த சிலரின் தனிப்பட்ட குண பேதங்களால் இவைகள் வர்ணங்களாக மாற்றப்பட்டு பல பிரிவுகளாய் பிரிந்து வேறுவிதமாய் போனது இன்று.
இந்த பஞ்ச பூத உடல் கட்டமைப்புக்களின் செயல்பாடுகளை தொடர்ந்து ஆராய்ந்து அக்கட்டமைப்புகளுக்கு காரணமாய் இருக்கின்ற பஞ்ச பூத தத்துவங்களை உள்வாங்கி எப்படி எவ்வாறு,என்று தேடி எடுத்த விஷயங்கள் தான் பிரபஞ்சம், கிரகங்கள் சூரியன் சந்திரன்,நட்சத்திரங்கள் கிரகங்கள் போன்றவை.இந்த விஷயங்கள் எப்படி பூமியில் இருக்கும் உயிர்களை உருவாக்குகிறது என்பது தான் ஜோதிடம், அவ்வாறு உருவாக்கப்பட்ட உயிர்கள் எவ்வாறு செயல்படும் என்பதுதான் ஜோதிட பலன்.இந்த பஞ்ச பூத தத்துவங்கள் தான்  சிவா எனும் நமசிவாயமாய் ...    இன்னும் தொடரும் .....அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்  இன்னும் வரும். ஆஸ்ட்ரோ பாபு.