Saturday, 8 August 2015

கிரக காரகங்கள் - பாகம் 10
சூரியன் -ஆன்மாக்காரகன், தந்தை காரகன் ஏன்?
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை கிரக காரகங்களின் தொடர் கட்டுரை வரிசையில் பாகம் 10 ஆன சூரியன் ஆன்மாக்காரகன், தந்தைக்கு காரகன் என்பது பற்றியது.
நவ கிரகங்களின் நாயகன் என்று வர்ணிக்கப்படும் சூரியன்தான் தலைமைக்கோள் எனலாம். நாம் வசிக்கும் பூமி உட்பட, இருக்கிற 9 கோள்கள் நெப்ட்யூன்,புளுட்டோ உட்பட, இரண்டு காந்தபுள்ளிகள்(ராகு,கேது) அனைத்தும் சூரியனை மையமாக வைத்துதான் ஒரு கட்டுபாடான சுற்றுமையத்தில் தன்னை நிலை நிறுத்தி இயங்கி கொண்டிருக்கின்றன.என்பதை நாம் அனைவரும் அறிவோம் சூரியனின் சக்தி மையத்தில் தான் அனைத்து கோள்களும் இணைக்கவும் பட்டிருக்கிறது.
சூரியனின் ஹீலியம்,ஹைட்ரஜன்,நைட்ரஜன்,சக்தி பிளம்புகள் ஒவ்வொரு கிரகத்தின் சுற்று வேகத்திலும் ,அவ்வேகத்தினால் ஏற்படுகிற மின் மற்றும் காந்த புலத்தின் தன்மையையும் தீர்மானிக்கிறது. என்பது வானவியல் உண்மை.அப்படியெனில் ஒவ்வொரு கிரகத்தின் சொந்த தன்மைகளையும் , சூரியன்தானே தீர்மானிக்கும்.
சூரியன் ஒரு சூட்சும கிரகம்,ஆணின் சுக்கிலம், பெண்ணின் சுரோணிதமும் இணைகிற இடத்தில் கரு உற்பத்தியில் தன்னை புகுத்தி கொள்ளும் எப்படி என்று பார்ப்போம்.
நான் எழுதிய அத்தனை காரகத்துவ கிரகங்களில் கிரக இயக்கம் நம் உடலில் எவ்வாறு இயங்குகிறது என்பதை விரிவாக பார்த்தோம் அல்லவா? இவை அனைத்தும் நம் உடலில் இயங்க ஒரு ஆதார சக்தி தேவை.அந்த ஆதார சக்தி இல்லையெனில் இயக்கம் என்பதே இல்லை.ஆம்,அந்த ஆதார சக்திதான் வெப்பம். ஆம், உடலின் வெப்பம்.
இதுதான் உடலை இயக்குகிற ஆதார சக்தி.நம் உடலில் அனைத்து உறுப்புகள் இயங்குகிற தன்மையில் இருந்தாலும் 90 டிகிரிக்கு குறைவான வெப்பம் நம் உடலில் இருக்கும் பட்சத்தில் உடலின் செயல்பாடுகளில் குறைபாடுகள் இருக்கும். உடலில் இந்த வெப்ப நிலை 90 டிகிரிக்குள் உடலில் தன்னிச்சையாக தன்னை நிலைநிறுத்தி கொள்ளும்.
வெளிப்புற வெப்ப சூழ்நிலை, உள்புற வெப்ப சூழ்நிலை,இரண்டையும் சரி செய்து வெளி வெப்பநிலைக்கு ஏற்றவாறு நம் உடலின் உள் வெப்பநிலையை தன்னிச்சையாக வெளிசுழலுக்கு மாற்றி நிலை நிறுத்தி கொள்ளும் தன்மையை (THERMOS REGULATION OF THE BODY ) சூரியன் செய்கிறது. இந்த தன்மை நம் மூதாதையர்கலின் மூலம், நமக்கு தந்தையின் சுக்கிலம் மூலமாக கிடைக்கிறது.எந்த இருப்பிட சுழல்,அவர்கள் உணவு முறை, அவர்கள் வாழ்ந்த தன்மை, அத்தன்மைக்கு எவ்வாறு அவர்கள் தாக்கு பிடித்தனர். போன்றவைகளை சுக்கிலம் தன் பங்காக கரு சிருஷ்டியில் செய்யும்.சுருக்கமான உதாரணமாக குளிர் பிரதேசக்காரர்கள் வெப்ப பகுதிக்கு வருகிற பொழுது அவர்களால் தாக்கு பிடிக்க முடிவதில்லை தானே.எந்த பொருளினால் ஒரு பொருள் செய்யபட்டிருகிறதோ அந்த மூல பொருளின் தன்மைதானே உண்டாக்கப்பட்ட பொருளுக்கு கிடைக்கும்.நம் மூதாதையர்கள் இயற்க்கை தன்மைக்கு எவ்வாறு தாங்கி வாழ்ந்தார்களோ அதற்கு அவர்கள் அனுசரித்த பழக்க வழக்கங்கள், உணவு முறைகள்,வாழ்க்கைமுறை அனைத்தும் தொடர்ந்து இந்த வெப்பத்தின் மூலம்தான் நம்முல் சுக்கிலத்தின் மூலம் நமக்கு கிடைக்கிறது.அதுதான் நமக்குள்ளும் இந்த வெப்ப சரிபாட்டை காத்து வைத்து கொள்கிறது. சரி இது எப்படி?
மேற்கூறிய உடல் வெப்ப நிலை தன்னிருத்தல் தான் நம் உடலின் அனைத்து இயக்கங்களின் மூலம் இந்த வெப்பம் நம்முள் குறைகிற பொழுது உடல் உறுப்புகளின் இயக்கத்தன்மை குறைந்து நோய் கிருமிகள் தன் பணியை துவங்க ஆரம்பிக்கும். இந்த வெப்பம்தான் கரு வளர்ச்சி,அதன் வெளிப்புற சூழ்நிலையை தாங்குகிற தன்மை,உறுப்புகளின் வளர்ச்சி,அவற்றின் சீரான இயக்கம் இவற்றை தீர்மானிக்கும்.இந்த வெப்பம்தான் இயங்குகிற இயக்கத்தில்,தன் தந்தையின் சில குணநலன்களை தன் உடலியக்கத்தில் கொண்டிருக்கும்.உதாரணமாக நம் தந்தையின் சில தன்னிலைகளை (மானரிசம்) நம்மையையும் அறியாமல் நம் கொண்டிருப்பதை நாம் உணரலாம்.இந்த வெப்ப இயக்கம் நம்முள் சுக்கிலத்தின் மூலமாக தந்தையிடமிருந்து வருவதால் சூரியன் தந்தைக்காரகன் ஆனான்.
சுக்கிலமும்,சுரோணிதமும் கலந்து, விந்தணு கருமுட்டையை வெடிக்க செய்து இரண்டும் கலக்கும் கலவையில் உயிர்பெறுகிற பொழுது நம் கர்ம வினைகளின் அடிப்படையில் உயிர் சக்தி உயிர்பித்தலின் தொடக்கமும், இந்த வெப்பமும் ஒரு சேர ஒரே தருணத்தில் கரு உற்பத்தியில் பங்கெடுக்கிறது.பெண்ணின் கருவறையில் வெப்பமும் உயிர் சக்தியும் இணைந்து ஓர் உடலை உற்பத்தி செய்கிறது.அந்த உடல் உற்பத்திக்கு மூலமான தாய் மற்றும் தந்தையின் முலாதாரங்களை அடிப்படையாக கொண்டு தன்னை வளர்த்தி கொள்கிறது. இந்த உயிர் சக்திதான் ஆன்மா, இந்த ஆன்மா செயல்படுதல், குழந்தை தாயின் தொப்புள் கொடி அறுந்து இந்த பிரபஞ்ச தன்மையில் தன்னை இணைக்கிற முதல் சுவாசத்தில் துவங்கும். அந்த செயல்கள் தாய் தந்தையரின் எண்ண படிவங்களின் (கர்மா)(என் கர்மா கட்டுரையை படியுங்கள் கர்மா புரியும்) மூலமாக தன் வினையை இப்பூமியில் செயல்படுத்தும் . அப்படி அந்த உயிர் சக்தி உடல் பெறுகிற தன்மையை இந்த வெப்பம் உருவாக்கி தருதளினால்தான் சூரியன் ஆன்மாக்காரகனாகவும் ஆனான்.
மேலும் இந்த வெப்பம் நம் உடலில் சீராக இருக்க உஅதுவது நம் உடலின் இரண்டு பாகங்கள், ஒன்று நுரையீரல், மற்றும் இருதயம், நுரையீரலின் தன்மை சீராக இருப்பின்,நம்முள் பிராண வாயு அதிகமாக சென்று இருதயத்தை நன்றாக இயக்கி இரத்தத்தின் மூலம் பிராண வாயுவை நம் உடல் முழுவதும் கொண்டு செல்வதால் நரம்பு மண்டலங்கள் துரிதமாக இயங்கி மூளையின் செல்களையும் சிறப்பாக தூண்டி,மூளை மற்றும் உடலின் செயல்களை சிறப்பாக வைத்து கொள்வதால்,எந்த தன்மையிலும் சூரியன் பலமாக உள்ளவர்கள் தலைமை பொறுப்பையும் தைரிய உணர்வையையும் தன்னகத்தே கொண்டிருப்பார்கள், நம் உடலின் வெப்ப நிலை சூரியனின் தன்மைக்கு மாறுவதால், திதி,பகல்,இரவு,நட்சத்திரம்,நாள் போன்றவைகளின் அடிப்படையில் நம் செயல்கள் தீர்மானிக்கப்படும்.
நான் எழுதிய காரகத்துவ கட்டுரைகள் அனைத்தும் என் சொந்த உணர்தல்கள் மற்றும் தனிப்பட்ட ஆராய்ச்சிகளே, நெடுநாளாய் நான் எண்ணியிருந்த இந்த கட்டுரை தொடரை இத்துடன் முடிக்கிறேன்.இதற்கு உக்கமளித்து என்னை எழுத தூண்டிய அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
என் அடுத்த தொடர் கடவுள் அமைப்புகளின் அறிவியல் சூட்சுமங்களை பற்றியது. அதையும் ஒரு தொடர் கட்டுரையாகவே எழுதுகிறேன். உங்களின் ஒத்துழைப்போடு . இன்னும் வரும்..... அஸ்ட்ரோ பாபு.

செய்தி வழங்கல்

Astro Babu 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.
கிரக காரகங்கள் -பாகம் - 9
ராகு - தந்தை வழி பாட்டனார், மோட்சகாரகன் ஏன்?
நண்பர்களுக்கு வணக்கம்,
வேலை பளு அதிகம் காரணமாக தொடர்ந்து எழுத முடியவில்லை,இந்த கட்டுரை கிரக காரகங்களில் ராகுவுக்கு, தந்தை வழி பாட்டனார் மற்றும் மோட்சக்காரகன் ஏன்? என்பதை பற்றியது .
நான் ஏற்கனவே என் கட்டுரைகளில் ராகுவை பற்றி விரிவாக எழுதியுள்ளேன் செவ்வாய் தீவிரம், ராகு அதி தீவிரம், எந்த இடத்தில் எந்த சுழலில் ராகு அமர்கிறதோ அதன் தன்மையில் ராகு அதி தீவிரமாக இருக்கும்.. என்ன, சூரிய குடும்பத்தில் சந்திரனுக்கும், பூமிக்கும்ராகு இயக்கம் மாற்று பாதியில் இயங்குவதால் எதிர் தன்மைகளை கையில் எடுத்து கொள்கிறது. ஆனால் ராகுவின் மற்றொரு பக்கமும் இருக்கிறது. அதுதான் சூட்சுமத்தில் செயல்படுகிறது. நம் உடல் இரண்டு விதமான இயக்ககங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஒன்று ஸ்தூலம் மற்றொன்று சூட்சுமம் என்பர் சித்தத்துவத்தில், ராகு ஸ்தூல விஷயமான புற விசயங்களில் எதிர்மறை தன்மைகளை காட்டினாலும், சூட்சும விஷயங்களில் உன்னத தன்மைகளை வெளிபடுத்தும்.இந்த உன்னத தன்மைகளை பற்றித்தான் அனைத்து ஜோதிட மேடைகளில் தொடர்ந்து பேசி வருகிறேன்.சரி ராகுவின் காரகம் என்ன செய்கிறது என்பதை பார்ப்போம்.
நம் உடல் செல்களால் ஆனது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இந்த செல் குரோமோசோன்களின் ஒரு சீரான கட்டமைப்பு,இந்த குரோமோசோன்கள் ராகு என்று சொல்லுகிற நம் மூதாதையர்களின் மூலம் தொடர்கிற ஒரு சூட்சும விஷயம் குரோமோசோன்கள் இரண்டு வகைப்படும்,1ம் X குரோமோசோன்கள் ,Y குரோமோசோன்கள் X குரோமோசோன்கள் உடம்பு சார்ந்த விஷயங்களையும் Y குரோமோசோன்கள் மூளை சார்ந்த விஷயங்களை நம்முள் செய்யும். நம் படைப்பில் இருக்கிற செல்களின் அமைப்பே இப்படித்தான், இரு பாம்புகள் பின்னியது போன்ற அமைப்பு இதன் இரண்டு அமைப்பும்,
இந்த குரோமோசோன்கள் செல்லை இயக்கி, அந்த செல்கள் தசைகளை இயக்குகின்றன. அதிலும் x குரோமோசோன்கள் நம் DNA (தொடர் வழி மூல கூற்றில்) வில் தந்தை வழி மூலத்தையும், Y குரோமோசோன்கள் தாய் வழி மூலத்தையும் நம்முள் கொண்டு வருகிறது. இதுதான் சிவம்,சக்தி என்ற இரு சூட்சும விஷயங்கள், சில இடங்களில் ஆன்மீகத்தில் ராகு சிவத்திற்கு, கேது சக்திக்கும் கூட சொல்லபட்டிருக்கிறது தந்தை வழி பாட்டனார் மூலங்கலை x குரோமோசோன்கள்(ராகு) கொண்டுவருவதால்தான் ராகு தந்தை வழி பாட்டனார் உறவுகளுக்கு சொல்லபட்டான்.
சரி இதே ராகு மோட்சக்காரகனுக்கும் சொல்லபட்டிருக்கிறதே எப்படி? இது சூட்சுமத்தில் நடை பெறுகிற விஷயம்.x குரோமோசோன்கள் தசையை இயக்க பயன்படகூடிய ஒரு மூலப்பொருள் அப்படியெனில் தசையை, அதன் வலிமையை ராகுதானே தீர்மானிப்பார்.ஆம் தசை வலிமைதான் ராகு.மனித உடலில் தசை,தசை நார்கள், அவற்றின் செயல்கள், உடலில் உள்ள மின் சக்தி. இந்த மின் சக்தி தூண்டுகிற நரம்பும் தசை நார்களும் தூண்டுகிற இடம் (NERO MUSCULAR JUNCTION) இவைகளை இயக்குகிற சக்தியாக ராகு இருக்கிறது
நான் சனி கர்மாக்காரகன் கட்டுரையில் எழுதியுள்ளபடி பிண்டம் என்று சொல்லுகிற உடல் சார்ந்த விஷயங்களின் ஆதாரமே முதுகு எலும்புதான், இந்த முதுகுஎலும்பில் தான் உடல் இயக்கங்களின் அத்தனை விஷயங்களும் அடைபட்டு கிடக்கின்றன. அண்டத்தில் சொல்லபடுகிற, நம்மை இயக்கு ஆதார சக்கரங்களின் அடைவு இடமும் இந்த முதுகெலும்பு தான். அந்த முதுகெலும்பு இந்த உடம்பில் நிற்பதற்கு அடிப்படை ஆதாரம் தசைதானே, தசை இல்லமால் முதுகெலும்பு எங்கனம் நிற்கும்.தசை வலிமையோடு இருந்தால் தான் முதுகெலும்பை தூண் போல பிடித்து தாங்க முடியும்.
ராகு தன் (தசை) வலிமையால் முதுகெலும்பின் வலிமைக்கு துணை செய்து,முதுகெலும்பில் இயங்குகிற 4 சக்கரங்களையும் சீராக செயல்பட செய்து நம் சூட்சும ஆதார சக்தியான குண்டலினியை சீராக செயல்பட செய்து அந்த ஆதார சக்தி பிண்டம் தாண்டி அண்டமான தலை பகுதியை அடைவதற்கு வழி வகுக்கிறது. அண்டத்தில் ஞானக்காரகனான கேது குண்டலினியை தன் கையில் கொண்டு நம் சூட்சும ஆதார சக்தியான இறை என்ற ஆன்மா மூலத்தோடு கலக்கிற மோட்ச நிலையை தரும்.இந்த மோட்ச நிலைக்கு காரணகர்த்தாவாக ராகு இயங்குவதால் தான், ராகு மோட்சக்காரகன் ஆனான்.
ஜோதிடத்தில்,காலபுருஷ தத்துவத்தின் படி கேது நட்சத்திரங்கள்,ராகு நட்சத்திரங்கள் இருக்கிற அமைப்பு, முறையே 1,5,9, மற்றும் 3,7,11, என்ற அறம், காமம் என்ற நிலையினையும் உணர்த்தும்,காமம் கடந்து அற நிலையை உணரத்த காரணமாக இருப்பவன் ராகு, இதையும் ஆராய்ந்து பாருங்கள் உங்களுக்கே புரியும்
ராகுவும் கேதுவும் உடலும் தலையும் தானே , ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.இரண்டும் சேர்ந்த இயக்கத்தை நம் ஆதார சக்கரங்களிலும், நம் ஆதாரமான DNA இயக்குகிற சக்தியின் செல்களின்
இயக்கம், பின்னிய பாம்புகள் போன்று இருப்பதைத்தான் நம் முன்னோர்கள் கோவில்களில்
நாகர் சிலைகளாக செதுக்கி வைத்துள்ளனர். இன்னும் சூட்சுமங்கள் நிறைந்தவள் என் காதலி ராகு.எழுத நிறைய இடம் தேவை என்றாலும்,காரகத்துவத்துக்கு தேவையான விஷயங்களை சுருங்க கொடுத்து இருக்கின்றேன் என்ற நம்பிக்கையோடு அடுத்த இறுதி கட்டுரையான சூரியன் ஆன்மாக்கார்கன், தந்தைக்காரகன் ஏன்? இல் தொடர்கிறேன் இன்னும் வரும்.......அஸ்ட்ரோ பாபு..

கிரக காரகங்கள் பாகம் - 8
சனி -- கர்மாக்காரகன்,ஆயுள் காரகன் ஏன்?
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை கிரக காரகங்களின் தொடர் கட்டுரைகளில் சனி -கர்மாக்காரகன்,ஆயுள்க்காரகன் ஏன்? என்பதை பற்றியது.இந்த கட்டுரை கொஞ்சம் நீண்டு இருக்கும் பொறுமையாய் படியுங்கள்
ஜோதிடத்தில் இரண்டு கிரகங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கபட்டிருக்கிறது.1).குரு,2). சனி, குரு சுப கிரகம் என்றும் சனி பாப கிரகம் என்றும்.குறிப்பிடுகின்றனர்.குரு அண்டம் சார்ந்தது,சனி பிண்டம் சார்ந்தது.அண்டம் என்பது கழுத்துக்கு மேல்,பிண்டம் கழுத்துக்கு கீழ் கழுத்து கண்டம் என்பர் சித்தத்துவத்தில்.இதை பின்னர் விரிவாக எழுதுகிறேன்
சுக்கிரன்,சந்திரன்,கேது,குரு, அண்டம் சார்ந்தவர்கள், சனி,ராகு,பிண்டம் சார்ந்தவர்கள் சூரியன் சூட்சுமம்.எப்படி?
நம் உடம்பின் இயங்கு சூத்திரத்தில் இரண்டு உறுப்புகள் இல்லையெனில் உடம்பு இயங்காது. ஒன்று மூளை
,மற்றொன்று முதுகு தண்டு, மூளை சாப்ட்வேர் என்றால்,முதுகு தண்டு ஹார்ட்வேர்.
உடலின் இயக்கத்தை தயார் செய்வது மூளை செயல்படுத்துவது முதுகு தண்டு, மூளை தயார் செய்கிற திட்டங்களை முதுகு தண்டின் வழியேதான் செயல் படுத்துகிறது எப்படி?
சனி தான் நம் உடலின் செயல்களை தீர்மானம் செய்கிற மிக பெரிய சக்தியாகும். ஆம்,CEREBELLAR SPINAL FLUID (CSF) என்று சொல்லகூடிய வல்லிய சக்தி வாய்ந்த திரவம்.
இந்த திரவம் மூலையில் உற்பத்தியாகி CEREBELLUM வழியாக VENTRICLE 1,2 நுழைந்து நம்முடைய BRAIN CAVITY சீர் படுத்தி VENTRICLE 3,4,MEDULLA வழியாக நரம்பு மண்டலத்தை தூண்டி,FLEXES இயக்கி CANAL OF SPINAL GUARD அடைந்து முதுகு எலும்பின் கடைசி வரை சென்று ஒரு பெரிய ஆதார சக்தியாக விளங்குகிறது.
விளக்கத்திற்காக :-
: CONTROL OF BRAIN CAVITIES, நம் மூளையின் இயங்கு தன்மை
CEREBELLUM : எச்சரிக்கை செய்தல் அதிர்வு உண்டாக்கி அடர்ளின் சுரக்க செய்து நம்மை பாதுகாத்து கொள்ள செய்தல்
VENTRICLE : மூளையின் இரண்டு பகுதியின் பிராதன CPU
MEDULLA : புரிந்து கொள்ளுதல் செயல்களை நரம்புகளுக்கு அனுப்புதல் அதன் செயல்பாடு.
NAN NERVINESS SYSTEM, ELECTRICITY ,தசைகளின் தூண்டுதல் மேற்கூறிய வற்றை அனைத்தையும் இணைத்து இருக்கிற WIRING JUNCTION ஆனா நரம்பு மண்டல. இவைகளுடைய செயல்பாட்டைதான் சனி செய்கிறது. ஆதலால்தான் சனி செயல்களுக்கு (கர்மா) காரகன் ஆனான்
நம் முதுகு தண்டு சின்ன சின்ன இணைப்புகளை உடையது என்ற நமக்கு தெரியும்.. முதுகு தண்டு வடத்தில் நடுவில் ஒரு ஓட்டை இருப்பதையும் நாம் பார்த்திருப்போம் அந்த ஓட்டை வழியே தான் இந்த சக்தி வாய்ந்த திரவம் உள் சென்று முதுகு தண்டு வடத்தை இயக்குகிறது. எதாவது விபத்தில் முதுகு தண்டு வடத்தில் பாதிப்பு ஏற்படும்போது இந்த திரவத்தின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும்போதுதான் அந்த செயல்பாட்டு பகுதி செயல் இழந்து விடுகிறது. மேலும் முதுகு தண்டு வடத்தில் அடிபட்டால் சீர் செய்வதும் மிக கடினம்
இப்பொழுது புரிகிறதா நாம் செய்கிற செயல்களின் ஆதாரம், மற்றும் இயக்க சுழிமுனையே இந்த முதுகு தண்டுதான் . அம்முதுகுதண்டை இயக்கும் இந்த திரவம்தான் செயல்களுக்கு கருவி,அதேபோல் ஒருவரின் ஆயுளையும் தீர்மானிக்கிற தன்மை இந்த திரவத்துக்குத்தான் உண்டு. இத திரவத்தின் வீரியம் எத்தனை காலம் இருக்கிறதோ அத்தனை ஆண்டுகள் ஒருவர் உயிரோடு இருக்க முடியம். இந்த திரவம் நம் உடம்பில்(பிண்டம்) 4 மையங்களில் இருந்து வேலை செய்கிறது, மூலாதாரம்,சுவாதிஷ்டானம்,மனிபூரகம்,அநாகதம்,கண்டத்தில் விசுக்தி, அண்டத்தில் ஆக்ஞ்சா,சகஸ்ரா,என 7 இடங்களில் தன் வேலையை செய்கிறது. இந்த 7 இடங்களின் செயல்களை(கர்மா) நிறுத்தி செயலற்ற நிலைமைக்கு நம்மை கொண்டுபோதல்தான் முக்தி என்ற நிலை இதைத்தானே சித்தத்துவத்திலும் ,ஆன்மீகத்திலும் பெரும் பேராக சொல்கின்றனர்.இதனால்தான் சனி கர்மாக்காரகன், ஆயுள்க்காரகன் ஆனான். மேலும் சனியை பற்றி என் டைம் லைனில் எழுதி இருக்கிறேன் மேலும் விவரங்களுக்கு அங்கு சென்று படித்து பாருங்கள் அடுத்து ராகு மோட்சக்காரகன் ஏன்? தொடரும்.இன்னும் வரும்.....அஸ்ட்ரோ பாபு.
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை கிரக காரகங்களின் தொடர் கட்டுரைகளில் பாகம் -7 ஆன கேது ஞானக்காரகன் ஏன்? என்பதை பற்றியது.
சந்திரன் பூமியை சுற்றுகிற பாதை மற்றும் பூமி சூரியனை சுற்றுகிற பாதை இரண்டும் சந்திக்கும் இடங்கள்,ராகு,கேது என்பதை நாம் அறிவோம்.சூரிய வட்டத்தின் வெளி வெட்டு புள்ளி ராகுவும், உள்வட்ட புள்ளி கேதுவும் ஆகும்.இவை இரண்டும் தன பூமியை காக்கிற சக்தி வாய்ந்த கோட்டைகள் எனலாம்.ராகு நமக்கு வெளியே காரியங்களுக்கு பொறுப்பு,கேது நம்முள் நடக்கும் காரியங்களுக்கு பொறுப்பு எனலாம்,எப்படி,
, செவ்வாய் தீவிரம்.ராகு கேது இரண்டுமே அதி தீவிரம், ராகு தசை வலிமை தீவிரம்,கேது நம்மை இயக்குகிற மூளையில் இருக்கிற சில இயக்கங்களின் தீவிரம்.விரிவாக பார்ப்போம்.கேது பலமாக இருப்பவர்கள் மூளை வலிமை மிக்கவர்கள், ஒல்லியான குள்ளமான தோற்றத்தில் இருப்பவர்கள்
கேது நம் மூளையில் இருக்கிற cavities என்று சொல்கிற குருவின் இயக்கத்தின் ஒன்றான ventricle -1,2,3,4, ஆகியவற்றின் முக்கிய இயக்க சக்தி.இந்த நான்கும் ஒரு விஷயத்தை தன்னுள்ளே தேக்கி அல்லது சேமித்து வைத்து கொண்டு,தேவைபடுகிற நேரத்தில் சடுதியில் வெளிக்கொணரும். ஞாபக திறன் என்று சொலுகிற விஷயம் எவ்வளவு விஷயங்கள் என்ன காரணங்கள்,என்ன அடிப்படை,எதற்கு என்ற கேள்விகளுக்காக ஒரு விஷயத்தின் அத்தனை சாரங்களையும் தன்னுள் சேமித்து வைத்து கொண்டு தேவைபடுகிற நேரத்தில் வேகமாக வெளிகொணர்ந்து வெளிபடுத்தும் திறன் கேதுவுடையது. ஒரு விஷயத்தின் அத்தனை நுணுக்கங்களையும் தெரிந்து அறிந்து வைத்து கொண்டு வேண்டிய இடத்தில் வெளிபடுத்தும். இந்த செயலாக்கத்தில் மேலும் மூளை நரம்புகளின் தூண்டுதல் மூலமாக செயலாற்றும் தன்மையையும் கேது செய்யும். சுருங்க கூறின் மூளையின் இயக்கத்தின் தீவிரம் எனலாம். இதனால்தான் கேது ஞானக்காரகன் ஆனான்.
இந்த இயக்கத்தின் தீவிரம் மாறுபட்ட தன்மையில் நம் ஜனனத்தில் அமையும்போது,அந்த தன்மையில் தீவரம் காண்பிக்கும்.
கேதுவின் ஆதிக்கத்தில் இருப்பவர் எபோழுதும் alert அகவே இருப்பர் அதுவும் லக்ன கேந்திரத்தில் கேது இருந்தால் Brain Cavities System வலுவாக இருக்கும். எப்பொழுது எந்த இடத்தில் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்து சூழ்நிலையை தமக்கு சாதகமாக மாற்றி கொள்ள வல்லவர்.அதே போல் மூளையின் நரம்பு மண்டலம் இவர்களுக்கு விரைவாக இயங்கும் எந்த file யும் உடனே ஒலித்து வைக்கவும் வெளி கொணரவும் இந்த கேது சாப்ட்வேர் திறமை மிக்கது .
storage capacity அதிகம் இருக்கும் இவர்களிடம் பழைய புராண இதிகாச விசயங்களை அலசுவதில் வல்லவர்கள்.லக்னத்தில் குருவும் கேதும் இருந்தால் சொல்லவே வேண்டாம் ஒட்டு மொத மூளையும் high speed processor high storage ram system. இதுதான் கேது ஞானக்காரகன் என்பதின் அடிப்படை
உடல் தசை வலிமை குறைவாக இருக்கிற காரணத்தினால் சிறிய விபத்துக்களில் கூட அதிகமான காயங்கள் பெறக்கூடும். கேது ஆதிக்கத்தில் இருந்தால் உடலில் வடுக்களோ,அப்ரேசனோ எலும்பு முறிவோ ஒரு நிரந்தர வடு உடலில் இருக்க கூடும்.
கேது மனம்,ஞானம், அறிவு மூன்றின் ஒவ்வொரு பங்கு கலவை. கேது ஜாதகத்தில் கெட்ட இடங்களில் இருந்தாலோ கெட்ட சேர்க்கை பெற்று இருந்தாலோ மிக மோசமான system corrupt போல செயல் இருக்கும். கெட்ட சகவாசம்,துர்சேர்க்கை கீழ் தரமான பெண் சேர்க்கை என மனமும் புத்தியும் போகும். முடிந்தவரை கேது விஷயங்களை சுருங்க
கொடுத்து இருக்கிறேன். தொடரில் அடுத்து குரு கேது இயக்கங்களின் அடுத்த பரிமாணம் செயல் அதற்க்கு பொறுப்பு எடுப்பவர் சனி. சனி கர்மாக்காரகன் ஏன்? ....இன்னும் வரும்....அஸ்ட்ரோ பாபு
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை கிரக காரகங்களின் தொடர் கட்டுரைகளில் பாகம் 6 ஆன இயற்கை சுபர் என்று சொல்லுகிற குருவிற்கு தனக்காரகன் மற்று புத்திர காரகன் ஏன்? என்பதை பற்றியது.
சூரிய குடும்பத்தில் சூரியனை சுற்றி வருகிற 5 வது கிரகம்,பிரபஞ்ச இயக்கத்தில் தன பங்கினை எப்படி பூமியில் இருக்கிற ஜீவராசிகளிடத்தில் வழங்குகிறது.நான் முந்தைய கட்டுரைகளில் கூறியபடி காற்றின் மூலமாக சுவாசத்தின் வழியே உள்சென்று தன் ஆக்கத்தினையும் இயக்கத்தையும் செயல் படுத்துகிறது.
நம் உடல் மனது இவற்றின் செயல்பாடுகள் அனைத்தையும் வழிநடுத்துகிற, இயக்குகிற ஒரு மாஸ்டர் CPU வாக இருப்பது நம் மூளை பகுதியாகும். மூளையில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. செரிபரம்,செரிபலம்,மிடுள இவை மூன்றையும் இணைக்கிற பிரைன் ஸ்டெம் இவை ஒவ்வொரு பகுதியும் உடம்பின் சில உறுப்புகளை உள்ளடக்கிய செயல்பாடுகளை தீர்மானிகின்றன மூளை எதன் மூலம் செயல்களை செய்கிறது என்றால் ஒவ்வொரு பகுதியில் சுரக்கிற திரவங்கள் மூலமாக மூளையின் ஒட்டுமொத்த செயல்களும் செயல் வடிவம் பெறுகின்றன. நான் ஏற்கனவே புதன்,செவ்வாய்,சுக்கிரன் சந்திரன்,கட்டுரைகளில் எழுதியுள்ள அனைத்து விசயங்களின் மேலும் இனி எழுத இருக்கிற ராகு,கேது,இவர்களின் செயல் கட்டுபாட்டு அறையாக செயல்படும் குருவின் தன்மை நம்முள், மேற்கூறிய கிரகங்களின் கட்டுப்பாடும் செயல் திறனும் செயல் படுகிற விதத்தில் பிரதி பலிக்கும் .அதாவது PITUITARY,NON NERVINESS JUNCTION,INDUCING OF MUSCLES,CONTROL OF BLOOD CELLS,ACTIVITIES OF BLOOD இவைகளின் கட்டுபாடு அறையாக விளங்குகிற மூளையின் செயல்களை குரு தன்மை இயக்குகிறது.இந்த இயக்கங்களின் மூலமே குரு தன்மைதான். அதாவது சுக்கிலம் உருவாக்கத்திற்கு காரணம் சுக்கிரன் என்றால் விந்தணுக்களின் பலம் குருவை சார்ந்தது.பெண்களுக்கு செவ்வாய் கருப்பை மற்றும் சுரோணிதத்தின் உருவாக்கம் என்றால் கரு முட்டையின் பலம் குருவினுடையது (புத்திரகாரகன்)புரிந்து கொள்ளல்,வெளிபடுத்துதல்,இவற்றின் மூலமாக கணக்கிடுதல்(புதன்,வித்தை காரகன்,கல்விகாரகன் ) இதன் பலன்கள் ஆனா பொருள் ஈட்டல் (தனகாரகன்) இம்மூன்று பொறுப்புகளும் குருவிற்கு இதை வைத்துதான் கொடுத்து இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
ஜோதிடத்தில் யோகம் என்று கூறுகிற நம்மின் நற் தன்மைகளின் வீரியங்கள் குருவின் தன்மையால் இன்னும் மேம்படுத்தலும் அல்லது குருவை முன்னிருத்தியே வகுத்துள்ளனர்.குரு சந்திர யோகம் கஜ கேசரி யோகம் போன்றவை உதாரணங்கள்.
இத்தனை விசயங்களின் உருவாக்கத்திற்கும் செயல்பாட்டிற்கும் மூளை என்ற செயல்பாட்டு மையம் காரணமாக இருப்பதால் இதை கடந்து செல்கிற ஆன்மீக விஷயங்களுக்கும் ஞான விஷயங்களுக்கும் (புரிதல் மற்றும் தேடல்)கூட குருவே பொறுப்பு எடுக்கிறார்.
மேலும் இந்த ஒரு கிரகத்துக்குதான் இரண்டு இணைகின்ற பஞ்ச பூத தத்துவங்களை கொடுத்து இருகிறார்கள் அதாவது நெருப்பு மற்றும் ஜல தத்துவம் இந்த தத்துவங்களின் குணங்களின் அடக்கமும் குரு தன்மைக்குள் அடங்குகிறது. தனுசு ராசிக்கும் மீன ராசிக்கும் பொறுப்பு எடுப்பதால் இந்த ராசி காரர்கள் இந்த சமுகம் வகுத்து இருக்கிற நற் தன்மைகளிலிருந்து சிறிதும் வழுவாமால் நேர்மை யோடு வாழ்க்கையை நடத்துபவர்களாக இருப்பார்கள்
மேலும் மற்ற கிரகங்களோடு குரு இணைந்தால் அக்கிரகங்களின் கெட்ட தன்மை அடிபட்டு போகும் என்ற ஜோதிடவிதியின் அடிபடையும் இதுதான்,மூளை(குரு) இயக்கம் நன்றாக இருப்பின் உடம்பு மற்றும் மனம் சார்ந்த விஷயங்களின் செயல்பாடுகளும் மேன்மை அடைந்ததாகத்தானே இருக்க முடியும்.
மூளையின் நான்கு பகுதிகளின் செயல்பாடுகளை இன்னும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொரு பகுதியும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை எழுதினால் ஒரு புத்தகம் எழுத வேண்டிவரும். கிரக காரகங்களுக்கு தேவையான விஷயங்களை முடிந்தவரை சுருக்கி எளிதில் புரியும்படி கொடுத்து இருக்கிறேன் என்ற நம்பிக்கையோடு அடுத்த பாகம் கேது ஞானக்காரகன் -- ஏன்? இல் தொடருகிறேன் தொடரும் . இன்னும் வரும்....... அஸ்ட்ரோ பாபு

செய்தி வழங்கல்

கிரக காரகங்கள் - பாகம் -- 5
புதன்-வித்யாக்காரகன் ஏன்?
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை கிற காரகங்களில் புதன் வித்யாக்காரகன் ஏன்? என்பதை பற்றியது. கிரக காரகங்களின் தொடர் கட்டுரைக்கு நண்பர்கள் கொடுக்கும் ஊக்கமும், பாராட்டுகளும் என்னை இன்னும் ஆழமாக எழுத தூண்டுகிறது.நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.
புதன் - வித்யாக்காரகன் ,ஜோதிடத்தில் புதனுக்கு நுண்ணறிவு,சூழ்நிலைக்கு தக்கவாறு செயல் படுதல்,மற்றும்,.சாதகமாக பேசுதல், திறமையான பேச்சு,போன்ற பலவற்றை வைத்து கொண்டு ஜோதிட பலன் சொல்லி வருகிறோம்.இதற்கு அடிப்படை ஏன் இவைகள் புதனுக்கு சொல்லப்பட்டன.என்பதே
நம் மூலையின் முன்பக்கத்தில் ஒரு சிறு பட்டாணி போன்று ஆடி கொண்டிருக்கும் பிடுடரி என்ற சுரப்பியின் வேலைகள் தான் மேற் கூறிய அனைத்து செயல்களும்.இதை இயக்குவது புதனின் வேலை. பிரபஞ்சத்தில் கலந்து இருக்கும் புதன் சக்தி மனித உருவாக்கத்திலேயே உள்சென்று இந்த அமைப்பை உருவாக்குகிறது.அப்படி உருவாக்கிய அமைப்பை சுவாச காற்றின் மூலம் இயக்கி மேற்கண்ட குணங்களை நம்முள் செயல்பட வைக்கிறது.
இந்த சுரப்பி ஒரு விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளல்,உள்வாங்குதல்,வெளிபடுத்துதல் போன்றவற்றை நம்முள் செய்யும். இவை மூன்றும்தானே ஒரு காரியம் திறம்பட நடப்பதற்கு மூலம். நுண்ணறிவு. பகுத்து அறிதல்,சூழ்நிலைக்கு சாதகமாக செயல்படல் ,அல்லது பேசுதல்.வளைந்து கொடுத்து காரியம் சாதித்தல்,பொறுமையாய் காத்து இருத்தல், ஒரு வார்த்தைக்கு பல அர்த்தம் புரிதல், மொழித்திறன், ஞாபக திறன், அதை தேவை படுகிற இடத்தில சரியாக பயன் படுத்தல், கூர்மையான தெளிவான, புரிந்து கொள்ளல் இவைகளைத்தான் PITUITARY செய்கிறது. மேலும் நம்மை இயக்குகிற ஹார்மோன்களின் உருவாக்கத்தின் முக்கிய பங்கு இந்த சுரப்பிக்கு மிக அதிகம் நம் உடலில் இருக்கிற புதனின் சக்தியை பொறுத்தே மேற்கூறிய திறன்களின் மாற்றம் இருக்கும்.
ஜோதிடத்தில் புதனின் ஆட்சில் இருக்கிற மிதுனம், கன்னி ராசிகாரர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருப்பது புதனின் தன்மையால்தான்அதிலும் கன்னி ராசியில் புதன் உச்சம், நரம்புகளின் ELECTRICAL CO-ORDINATION தூண்டகூடிய பொட்டாசியம் , சோடியம் இவர்களுக்கு உடலில் அதிக சதவீதத்தில் இருக்கும். மிக திறமையான பேச்ச்சும் சூட்சுமமான செயலிலும் கன்னி ராசி காரர்கள் வல்லவர்கள்,அதேபோல் நீசம் ஆகிற மீன ராசிகாரர்கள் கறாராக இருப்பதற்கும் கண்டிப்பாக இருப்பதற்கும் புதனின் எதிர் மறைதன்மைதான் காரணம்.
ஒரு உதாரணத்துக்கு மது அருந்திய உடன் இரத்தத்தில் கலந்து நரம்புகளின் வழியே மூளைக்கு சென்று செரிபலத்தை தூண்டி அது தன செய்யல பாட்டை அதிக படுத்தி PITUITARY நிலை தன்மையை மாற்றுவதால்தான் போதையில் உள்ளவர்கள் இயற்க்கை தன்மையை இழந்து தாருமாறாக நடந்து கொள்கிறார்கள்.
மேற்கூறிய திறன்கள் எல்லாம் இக்காலத்தில் பொருளீட்டு கொள்கையில் பொருத்தி பார்ப்பின் தரகு,AGENCY,PRO மற்றும் தொடர்பாலார்க்கு பொருந்தியதாக இருக்கும் . அல்லது இத்தொழில் இருப்பவர்களுக்கு எல்லாம் புதன் ஆட்சி பெற்றோ உச்சம் பெற்று நல்ல ஆதிபத்தியம் பெற்றோ இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
புதன் கெட்டரிந்தால் மூடனாக அறிவீ ளியாக அல்லது அறிவு ஊன முற்றவனாக, எல்லாம் அறிந்தவராக பேசுதல், தர்க்க வாதம் செய்பவர்களாக, தன்னை பறை சாற்றி கொள்பவர்ககளாக இருக்க வாய்ப்புகள் அதிகம்..
எந்த ஒரு விஷயத்தையும் மிக நுணுக்கமாக செய்வதற்கு மேற் கூறிய விஷயங்கள் தானே தேவை.விஷயங்கள் என்பதை அக்கால பேச்சு வழக்கில் வித்தை என்பர் அதில் நுணுக்கம் அல்லது திறன் வாய்ந்தவரை வித்யாக்காரகன் என்பர் அல்லவா? இந்த சுரப்பியின் செயல் பாடு புதனின் ஆக்கத்தால் உருவானதால் தான் புதன் வித்யாக்காரகன் ஆனான். அடுத்து குரு- தனக்காரகன்,புத்திரக்காரகன் ஏன்? தொடரும் இன்னும் வரும்..........அஸ்ட்ரோ பாபு





கிரக காரகங்கள் --- பாகம் 4.
சந்திரன் மனோக்காரகன்,மாத்ரு காரகன் ஏன்?
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை சந்திரன்-மனோக்காரகன்,மாத்ருக்காரகன் ஏன்? கிரகங்கள் நம்முள் எவ்வாறு தொடர்பு ஏற்படுத்தி நம்மை இயக்குகிறது என்பதை என் முந்தைய கட்டுரைகளில் எழுதியுள்ளேன்.அதே சூத்திரத்தின் அடிப்படையில் சந்திரன் நம் உடலில் இரத்த ஓட்டத்திற்கும் மன செயல்பாடுகளுக்கும் பொறுப்பு எடுக்கிறது. எப்படி?
எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகும் வெள்ளை அணுக்கள்,சிகப்பு அணுக்களின் கலவையான இரத்த உற்பத்தியை செவ்வாய் கவனித்து கொண்டாலும், அந்த இரத்த ஓட்டத்தின் சீரான தன்மையையும் ஓட்ட நேர்த்தியையும் சந்திரனே கவனித்து கொள்கிறது.
இரத்த ஓட்டம் சீராக இருப்பின் நரம்புகளின் செயல்பாடு ஆரோக்கியமாகவும்,செயல்பாடு திறம்படவும் இருக்கும் என்பது நாம் அறிந்ததே.அதே நேரம் இரத்த ஓட்டம் சீராக இருப்பின் மூலையின் செயல்பாடும் திறம்பட இருக்கத்தானே செய்யும்.
நம் மூளையில் உள்ள செரிபலத்தில் ventricle 1,ventricle 2, இன் இயக்கமும்,நம்முடைய blood plasma.,வின் இயக்கத்தையும் வைத்துகொண்டு ventricle 3., வழியாக midula vai. இயக்குகிறது. இந்த 4 இன் ஒரு முக்கிய பகுதியான மனத்தை இயக்குகிறது blood plasma,வை இயக்குவதால் இரத்தத்தின் ஓட்டத்தையும் அதன் விரைவு செயல் பாட்டையும் இயக்குவதால் மூளைக்கு சீரான இரத்த ஓட்டத்தை அளித்து மூளையை திறம்பட செயல்பட வைப்பதால் மூளையின் இயக்கமும் pituitary இயக்கமும் சீராக இருந்து நம்முடைய மனம் தெளிவான செயல்ப்பாட்டை செய்து எண்ணங்கள் தெளிவாகி அதன் செயல் திறம்பட உடலின் வழியாக செய்யப்படுகிறது.
சந்திரன் நம் உடலில் வலுவாக இருப்பின் இந்த செயல்பாடுகளின் சூட்சும விஷயமான மனமும் மனத்தின் இயக்கமான எண்ணங்களும் மேம்பட்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.மனம் புத்தி,அறிவு இம்மூன்றும் நம்முள் இயங்கும் ஒரு சூட்சும நிலைகள் தான் இவை மூன்றும் நன்றாக இயங்கின் , இவற்றின் செயல்பாடுகளான மனித செயல்கள் த்ளிவாகவும் திறம்படவும் இருக்கும் மனம் தெளிவாக்க இருப்பின் சிந்தனைகள் நலமுடனும் ஆரோக்கியமான எண்ணங்களும் செயல்பாடுகளாய் மாறும்.சிறந்த சிந்தனையாளர்களாகவும்,நல்ல கற்பனை வளம் உள்ளவர்களும் சந்திரன் பலம் வாய்ந்தவர்களே.சந்திரன் பலமிழந்து இருப்பின் இதன் மாற்று தன்மையை நம் செயல்களில் பிரதிபலிக்கும்.மராத்தி,மந்த தன்மை,தவறான சிந்தனைகள் சோம்பி கிடத்தல், முன்கோபி,போன்ற தன்மைகள் ஆட்கொள்ளும்.
உடலின் செல்களின் இயக்கத்திற்கு மூலமாக இருப்பதால் சந்திரனை வைத்து அம்மனிதனின் மூலமான DNA வான அவனின் தாயின் உடைய பங்கை கூட கணிக்க முடியும்.இரத்த ஓட்டம் தான் நம் அணுக்களின் ஆரோக்கியத்திற்கும் செயல்பாட்டிற்கும் கூட பொறுப்பு எடுக்கிறது.நம் மூல அணுக்களின் கடத்தலும்,கூட, இரத்த ஓட்டத்தின் சீரால் தான் இயங்குகின்றன.DNA என்று சொல்லபடுகிற நம் மூலக் கூறுகளின் இயக்கங்கள் இச்சீரான இரத்த ஓட்டத்தின் முலமே உயிர்ப்போடு செயல்படுகிறது.மேலும் இரத்தமும், இரத்த தன்மைகளும் நம்முள் தாயிடமிருந்தே இயற்கை சிருஷ்டி நமக்கு வழங்கி இருக்கிறது ஆதலால்தான் நம் மூலமான தாயின் நிலையை கூட இரத்தம்.இரத்த ஓட்டத்தை கொண்டு அறிய முடிகிறது.மேற் கூரியவைகலால்தான் சந்திரன் ம்னோக்காரகனாகவும்,மாத்ருக்காரகனாகவும் ஆனான்.
புதன்-வித்யா காரகன் ஏன்? அடுத்து தொடரும்...இன்னும் வரும் அஸ்ட்ரோ பாபு





கிரக காரகங்கள் பாகம் -- 3
செவ்வாய் இரத்தக்காரகன் -- ஏன்?
நண்பர்களுக்கு வணக்கம்,
கிரக காரகங்களின் என் தொடர் கட்டுரையில், இக்கட்டுரை செவ்வாய் இரத்தக்காரகன் ஏன்? என்பதை பற்றியது. கிரகங்கள் நம்மை எவ்வாறு இயக்குகின்றன.என்பதை பாகம் 2 கட்டுரையில் தெளிவாக எழுதி இருந்தேன்.அதே சூத்திரத்தின் அடிப்படையில் தான் செவ்வாய் நம் உருவாக்கத்திலும் பங்கு கொள்கிறது.
நம் உடலின் பெரும் பகுதி நீராலானது.அதிலும் நம் உடலின் இயக்கத்தின் ஆதாரமான நீர்,இரத்தம் என்பது நாம் அறிந்ததே. இந்த இரத்தம் எலும்புகளின் உட்பகுதியில் இருக்கின்ற மஜ்ஜையிலிருந்து உருவாகிறது. இந்த உருவாக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கிற அமைப்பு நம மூளை பகுதியில் தன்னிச்சை தன்னியக்கமாக (automatic mechanisam ) இயங்கி கொண்டிருக்கிறது.இரத்தத்தின் உட் வலு பொருள்களான பிளாஸ்மா,ஹீமோக்ளோபின்,ப்லேட்ஸ் ஆகியவை நம் உடம்பின் நரம்பு தசை,வலிமையையும்,செயல்பட்டுகளியும் நிர்மாணிக்கிறது . இவற்றின் பயன் பாடுகலான மனித செயல்களையும் தீர்மானிக்கிறது.மூளையின் இரத்த உற்பத்தி தன்னியக்கத்தை இயக்குவது செவ்வாய் கிரகத்தின் வேலை எப்படி?
நான் போன கட்டுரைகளில் கூறியபடி கிரக சக்திகள் நம்மை தொடபு கொள்கிற ஒரே வழி காற்று மட்டுமே. அப்படி பிரபஞ்சத்தில்பரவி கிடக்கும் அனைத்து கிரகங்களின் சக்தியும் நம் சுவாசத்தின் வழியே நம்முள் சென்று நம்மை இயக்குகிறது. நம் உருவாக்கத்தில் நம் மூலமான தாய் தந்தையரின் கூடுதலில் எவ்வித கிரக சஞ்சாரம் இருததோ அதன் அடிபடியில் தான் நம் உருவாக்கம் இருக்கும். அந்த உருவாக்கம் பிரபஞ்ச்சத்தில் இருக்கும் கிரக சக்திகளின் கலவைகளின் சூத்திரத்தின் அடிப்படையில் தான் உருவாகும்.
நம் உருவாக்கம் நிகழும் போது செவ்வாய் கிரகசாரம் எவ்வாறு இருந்ததோ அதன் அடிபடியில் அவ்வியக்கம் நம்முள் இருக்கும். நம் உருவாக்கத்தில் செவ்வாய் வலுவான இடங்களில் இருந்தால் நம் இரத்த வலிமை அதிகமாக இருக்கும். நம் இரத்த வலிமை வலிமையாக இருப்பின் அதன் செயல்பாடுகளான மனித செயல்கள் வீரியம் மிக்கதாக இருக்கும்.தன ஜாதகத்தில் செவ்வாய் வலிமையாக இருப்பவர்கள் அதிக உடல் வீரியத்துடன் இருப்பார்.உதாரணமாக ராணுவ வீரர்கள்,காவல்துறை,விளையாட்டுத்துறை வீரர்களை சொல்லலாம்.ஏனெனில் செவ்வாய் கிரகத்தில் iron oxide ,sulpher ,pottasiyam ,magnesiyaum போன்ற வேதி பொருள்கள் மிக அதிகம் அவை பிரபஞ்ச காற்றில் கலந்து நம்முள் சுவாசத்தின் மூலமாக நம்முள் உள்சென்று ஒரு இயக்கத்தையும் இயக்கத்தின் மூலத்தையும் உருவாக்குகிறது. இவ்வாறு இரத்த உற்பத்திக்கும் வலுவிற்கும் பொறுப்பு எடுப்பதால்தான் செவ்வாய் இரத்த காரகன் ஆனான்.
இரத்தத்தின் தன்மையை செவ்வாயை வைத்து தீர்மானிப்பதால் இரத்தத்தின் தன்மை,வலு,வீரியம் ஆகியவைத்தான் மனிதனின் குண நலன்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும், ஒரு சிருஷ்டிக்கு இரத்தத்தின் பங்குதானே மிக முக்கியம்.மனித செயல்பாடுகளின் தீவிரத்தையும் அதுதானே தீர்மானிக்கிறது. இதனால்தான் திருமணத்திற்கு செவ்வாயை முக்கியமாக கணக்கில் கொள்கிறோம். பெண்களின் பெண்மைக்கு அடையாளமாக இருக்கிற கருப்பையின் செயல்பாடுகளும் உருவாக்கமும் கூட இரத்தத்தின் அடிப்படையில் தானே தீர்மானிக்கபடுகிறது.
நம் உடம்பின் உருவாக்கத்தில் இருக்கிற மற்றொரு சூட்சுமமான விஷயம் அணுக்கள் இவை நம் பாராம்பரியமாய் பாட்டன்,முப்பாட்டன் தோன்றல்களிருந்து இந்த இரத்தத்தின் முலமே நம்முள்ளும் அணுக்களின் முலமே வருகிறது. அப்படி வருகிற அந்த அணுக்களின் பங்களிப்பு நம்முள் அமர்வதுபோல் இன்னும் எத்தனை பங்களிப்புகளை தரும், அதாவது இன்னும் எத்தனை உருவாக்கத்தை தரும் என்பதும் அணுக்களின் செயல்பாடே. அந்த பங்களிப்பு தான் நாம் உடன் பிறப்புகள் என்கிறோம்.
நம்முள்ளும் அணுக்களின் பங்களிப்பான அல்லது விரிவாக்கமான உடன் பிறப்புகளின் தன்மையையும் இரத்தமே தீர்மானிக்கின்ற படியால் தாள் செவ்வாய் சகோதரக்காரகனகவும் சொல்ல பட்டான்.
செவ்வாய் பற்றிய விரிவான விஷயங்களை என் டைம் லைனில் ஏற்கனவே எழுதியுள்ளேன், இன்னும் விவரம் தேவை படின் அக்கட்டுரையை படித்து பார்க்கவும் அதையும் இங்கே எழுத கட்டுரை இன்னும் நீண்டு போகும்.செவ்வாய் பற்றிய செய்திகளும் பயன்பாடுகளும் அவ்வளவு உள்ளன.விஷயங்களை முடிந்தவரை சுருக்கி கொடுத்துள்ளேன்.
அடுத்து.சந்திரன் - மனோக்காரகன்,மாத்ருக்காரகன் -- ஏன்? தொடரும் ........ இன்னும் வரும் ... அஸ்ட்ரோ பாபு.