Tuesday, 28 July 2015



கிரக காரகங்கள் -- பாகம் -2
சுக்கிரன் - களத்திரக்காரகன் ஏன்?
நண்பர்களுக்கு வணக்கம்,
கிரக காரகங்களின் முகவுரையை என் நேற்றைய கட்டுரையில் படித்திரிப்பீர்கள்.அதன் தொடர்ச்சியான சுக்கிரன் களத்திரக்காரகன் ஏன்? அதை பற்றி பார்ப்போம். அதற்கு முன்னர் கிரகங்கள் எவ்வாறு நம்முள் செயல்படுகிறது என்பதின் ஒரு சுருக்கத்தை பார்த்து விட்டு உள்செல்வோம்.
ஒரு ஜனனத்திற்கு, ஒரு ஆணும், பெண்ணும் எந்த கிரக சூழ்நிலையில் இணைகிறார்களோ, அந்த சுழலில் பிரபஞ்சத்தில் எந்த கிரக அமைப்பு இருக்கிறதோ,அதன் வேதியல் மாற்றங்களோடு தான் ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணிதமும் கலந்து கரு ஆகிறது. இந்த கரு தாயின் சக்தியின் உதவியோடு வளர்ந்து எந்த கிரக சுழல்களோடு, அதன் தன்மைகளோடு கருவானதோ அந்த தன்மையின் இயக்கு விசையாக கருப்பையிலிருந்து வெளியேறி இந்த பிரபஞ்ச(உலகத்தோடு) தொடர்புக்கு எடுக்கிற முதல் சுவாசம் அமைகிறது. அதாவது எந்த சூழ்நிலையில் தயாரிக்கபட்டதோ அதே சூத்திரத்தில் முதல் மூச்சு எடுக்கிற தருணத்தில் அந்த சூத்திரம் இயங்க ஆரம்பிக்கும். அந்த முதல் மூச்சுதான் லக்னம். அப்படியென்றால் எந்த பிரபஞ்ச கிரக சுழலில் அக்கரு உருவாகியதோ அந்த உருவாக்க சூழல் அக்குழந்தை பெரியவனாகி மரணிக்கும் வரை அதே உடம்புடன் தானே பயணிக்கும். அந்த கருவை உருவாக்கிய கிரகங்களின் அமைப்பு அம்மனிதனுள் முதல் மூச்சு எடுக்கிற லக்ன புள்ளியில் தொடங்கி,மரணம் வரை வந்து கொண்டுதானே இருக்கும்.
சரி இந்த கிரகங்கள் தன தன்மைகளை பைப் லைன் மூலமாகவா பூமிக்கு அனுப்புகிறது? இல்லையே அத்தனை கிரக தன்மைகளும் தன வீரியத்தை ஏதோ ஒரு சக்தியாக இப்பிரபஞ்சத்தில் கலக்க விட்டு கொண்டுதானே இருக்கிறது. அப்படி கலக்க விடுகிற அச்சக்திகள் பூமியில் உருவாகிற உயிர்களை எவ்வாறு தொடர்பு கொள்ளும்? ஒரே வழி காற்றுதானே அக்காற்றை நாம் சுவாசிப்பதால் அவ்வியக்கம் நம்(கரு)உருவாக்க தன்மையோடு இணைந்து உயிர்களை இயக்கும். உருவாக்கமும் இயக்கமும் கிரகத்தால், பிரபஞ்சத்தின் துணையோடு,காற்றின் ஒத்துழைப்போடு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
இவ்வாறு நடைபெறுகிற விஷயங்களை நம் முன்னோர்கள் நம்முள் சென்று தேடி பார்த்து எந்த கிரக சக்திகள் நம்மை எந்தெந்த தன்மையில் இயக்குகின்றன,அதற்கு கிரக சக்திகள் மனித உடம்பில் எந்த பாகத்தை இயக்கி மனிதனின் செயல்களை தீர்மானிக்கின்றன என்பதைத்தான்.அக்கிரங்கங்களின் காரகத்தன்மைகளாக நமக்கு கொடுத்துள்ளனர். நம் பாட்டன்,முப்பாட்டன்கள்.
ஜோதிடத்தில் சுக்கிரனுக்கு சொல்லப்பட்ட விஷயங்களான, சந்தோஷ தன்மை,பந்தா,வழிகாட்டல் பெருமை தேடுவது,வாசனை,ஆடை அலங்காரம்,கவருகிற தன்மை,இணக்க தன்மை, கவருகிற பேச்சு,பொலிவான தோற்றம்,சுக்கிலம்,சுக்கிலம் வெளிப்பட உதவுகிற கலவி இன்னும்.. இன்னும்..
இத்தனை விசயங்களும் நம் உடலின் செயல்பாடுதானே அன்றி வானத்தில் இருக்கிற சுக்கிரன் ஆள் வைத்தா இவற்றை இயக்குகிறார்? இல்லையே? அவ்வாறு மேற் கூறியவைகள் இவ்வுடலின் செயல்பாடானால் இச்செயல்களை இவ்வுடல் மூலமாக செய்கிற சக்தியும் இவ்வுடலில் தானே இருக்க முடியும்.அப்படிதானே?
அந்த சக்தி செயல்படுகிற இடம் நம் தலையில் நெற்றியின் மேற்புறத்தில் இருக்கிற pineal gland என்ற ஒரு சுரப்பியின் வேலைதான்.இந்த சுரப்பி நம் உடலில் என்ன வேலைகள் செய்கின்றதோ அதைதான் சுக்கிரனின் தன்மைகளாக சொல்லி இருக்கிறார்கள் இச்சுரப்பி நன்றாக தீவிரமாக செயல்படின் மிக தெளிவான பளிச்சென்ற தோற்றமும், கவருகிற பேச்சு,வாசனைகளில் விருப்பம், ஆடை அலங்காரம் நல்ல உடை உடுத்துகிற தன்மை,அணிகலன் மோகம்,தன்னை வழிகாட்டல்,சுக்கிலம் உருவாக்குதல்,கலவி போன்றவை அம்மனிதனுள் தீவிரமாக இருக்கும்.இத்தன்மைகள் தானே களத்திரத்திர்க்கு முக்கிய தேவைகளாவன.
பிரபஞ்சத்தில் பரவி கிடக்கும் சுக்கிர சக்தி நம் உடலில் இச்சுரப்பியின் உருவாக்கத்துக்கும் செயல் பாட்டுக்கும் பொறுப்பு எடுப்பதால்தான், சுக்கிர சக்தியை களத்திரக்காரகன் என்றனர்.
கவருகிற தன்மை என்பது, நமக்கு எதிரே உள்ளவற்றை தானே கவர முடியும்.அன்றி வேறா? இந்த எதிரே என்ற வார்த்தைக்கு 7ம் பாவத்தை தானே குறிப்பிடுகிறோம்.ஜோதிடத்தில் நாம். மேலும் மிக முக்கியமான காதல்,சந்தோசம் கலவி,சுக்கிலம் போன்றவைதானே க்ளத்திரத்திற்கு முக்கிய ஆதாரம்.அதனால்தான் சுக்கிரன் களத்திரகாரகனானான்.
Pineal gland என்ற சுரப்பி சுரக்கிற திரவத்தின் பணிதான் மேற்கூறிய அனைத்துமே.
இச்சுரப்பி மூலமாகத்தான் சுக்கிரதன்மை நம்மை ஆட்கொள்கிறது.
சுக்கிரனின் வீடுகளான ரிஷபம்,துலாம் ராசிகாரர்களுக்கு இச்சுரப்பி மிக அற்புதமாக வேலை செய்யும்.அதிலும் ரோகினி,விசாகம்,சுவாதி, நட்சத்திர காரர்களுக்கு மிக அற்புதமாக இருக்கும்.சுக்கிரன் வலுவிழந்த இடங்களில் இருக்கிற மனிதர்கள் மேற் கூறிய தன்மைகளில் மாறுபட்டு, சுறுசுறுப்பில்லாமல் ஆடை அணிகலன் அணிவதில் பற்று இல்லாமல், காதல்,கலவி,பேச்சு, போன்றவற்றில் மாறுபாடான தன்மை போன்றவை இருக்கும். உங்கள் அனுபத்தில் நான் கூறியவைகளை சோதித்து பாருங்கள், புரியும், ஒன்றுக்கு இரண்டு முறை பொறுமையாக படித்து பாருங்கள்,உங்கள் ஜோதிட அனுபவங்களோடு ஒப்பிட்டு பாருங்கள்.
நான் எழுதியுள்ள அனைத்தும் என் சொந்த உணர்தலே.உங்களுக்கு உபயோகம் இருப்பின் வைத்து கொள்ளுங்கள்,இல்லையெனில் விட்டு விடுங்கள். ஒரு மிக பெரிய விஷயத்தை முடிந்தவரை சுருக்கி கொடுத்துள்ளேன்.
அடுத்து பதிவு செவ்வாய் - சகோதரக்காரகன்,இரத்தக்காரகன் - ஏன்? இன்னும் வரும்........ அஸ்ட்ரோ பாபு.
கிரகங்கங்களின் காரகத்துவங்கள் ---- முகவுரை
நண்பர்களுக்கு வணக்கம்,
நெடுநாட்களுக்கு பிறகு மீண்டும் எழுத தொடங்குகிறேன்.இது ஒரு தொடர் கட்டுரையாக எழுதுகிறேன்,கிரகங்களின் காரகங்கள் என்ற தலைப்பில், என் பாணியில்..
கிரக காரகங்கள் ஜோதிடத்தில் எவ்வாறு சொல்ல பட்டிருக்கிறது?

1.சுக்கிரன் - களத்திரகாரகன்,
2.குரு - தனக்காரகன் ,புத்திரகாரகன்
3. சூரியன் - தந்தைகாரகன்
4.சந்திரன் - மாத்ருக்காரகன்,தாய்காரகன்
5.சனி - கர்மாக்காரகன்
6.புதன் - வித்யாக்காரகன்
7.செவ்வாய் - சகோதரக்காரகன்
8.ராகு - தந்தை வழி பாட்டனார், மோட்ச காரகன்
9.கேது - தாய் வழி உறவுகள், ஞான காரகன்
இப்படித்தானே காரகத்துவம் கொடுக்க பட்டிருக்கிறது. இது எதன் அடிப்படையில் கொடுக்கபட்டிருக்கிறது? என்பதை தொடர்ந்து கருத்தரங்கங்களிலும்,நான் உரை யாற்றுகிற மேடைகளிலும் கேட்டு வருகிறேன்.பதில் அளிப்பவர்கள் காரகத்துவ சிலாக்கிங்களை பற்றித்தான் வியாக்கியானம் செய்கிறார்களே தவிர ஏன்?எதற்கு? கூறமுடியவில்லை.
ஏன் சுக்கிரனை ஞானக்காரகனாகவோ, கர்மக்காரகனாகவோ, சனியை சகோதரக்காரகனகவோ, மாத்ருக்காரகனகவோ சொல்லவில்லை? நம் முன்னோர்கள் எதோ காரணத்தோடுதான் இவ்வாறு பிரித்திருக்கிறார்கள் என்பதிலும் எனக்கு மாற்று கருத்தில்லை.நண்பர்கள் நீங்களும் உங்களுக்குள் கேட்டு பாருங்கள் தெரிந்ததை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
காரகத்துவங்கள் பற்றிய விவரங்களை என் பாணியில் நான் என்னுள் உணர்ந்த விசயங்களை உங்களுடன் தொடர் கட்டுரையாக பகிர்ந்து கொள்கிறேன். முதல் பாகம் - சுக்கிரன்-கல்த்திரகார்கன் ஏன்?.... தொடரும். ... இன்னும் வரும்.. அஸ்ட்ரோ பாபு .