Friday, 23 May 2014

நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை இயற்க்கை சுபர் என்று சொல்லுகிற குருவை பற்றியது. நம்மிடம் சனியை பற்றி எந்த அளவு பயமும் இருக்கிறதோ அந்த அளவுக்கு குருவை பற்றிய சந்தோஷம் இருக்கும். வாழ்கையில் நாம் சந்திக்கிற அல்லது எதிர்பார்க்கிற அனைத்து நல்ல விசயங்களுக்கும் குருவின் துணை வேண்டும் என்பது அனைவரின் கருத்து. எதன்னால் அப்படி குரு என்ன அவளவு உயர்வு ? பார்ப்போம்.
 குரு சூரிய குடும்பத்தின் 5 வது கிரகமாகும்.சூர்யா குத்மப்த்தின் பெரிய கிரகங்களுள் குருவும் ஒன்று 1,42,984 கம் சுற்றளவு கொண்ட பெரிய கிரகம்.இதில் 88-90% ஹைட்ரோஜென் 8-12% ஹீலியம் உள்ளது மீதேன்,நீராவி மற்றும் அம்மோனியா தன்னுடைய வளிமண்டலத்தில் கொண்டுள்ளது.பூமி சூரியனை சுற்றிவர 365 நாட்கள்( 1 வருடம்) என்றால் குருசூரியனை சுற்றி வர 11.86 ஆண்டுகள் ஆகும்.
நம் உடல் மனது இவற்றின் செயல்பாடுகள் அனைத்தையும் வழிநடுத்துகிற, இயக்குகிற ஒரு மாஸ்டர் .... வாக இருப்பது நம் மூளை பகுதியாகும். மூலையில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. செரிபரம்,செரிபலம்,மிடுள எவை மூன்றையும் இணைக்கிற பிரைன் ஸ்டெம் இவை ஒவ்வொரு பகுதியும் உடம்பின் சில உறுப்புகளை உள்ளடக்கிய செஇயல்பட்டுகலை தீர்மானிகின்றன மூளை எதன் மூலம் செயல்களை செய்கிறது என்றால் ஒவ்வரு பகுதியில் சுரக்கிற திரவங்கள் மூலமாக மூளையின் ஒட்டு மொத செயல்களும் செய்யல வடிவம் பெறுகின்றன. நான் ஏற்கனவே புதன்,ராகு,கேது,செவ்வாய் சந்திரன்,கட்டுரைகளில் எழுதியுள்ள அனைத்து விசயங்களின் கட்டுபாட்டு அறையாக செயல்படும் குருவின் தன்மை நம்முள் பலமாக இருப்பின் மேற்கூறிய கிரகங்களின் கட்டுப்பாடும் செய்யல திறனும் நேர்கோணமாக இயங்கும்.அதாவது ..................................... இவைகளின் கட்டுபாடு அறையாக விளங்குகிற மூளையின் செயல்களை குரு தன்மை இயக்குகிறது.இந்த இயக்கங்களின் மூலமே குரு தன்மைதான். அதாவது சுக்லாம் சுக்கிரன் என்றால் விந்தணுக்களின் பலம் குருவை சார்ந்தது.(புத்திரகாரகன்)புரிந்து கொள்ளல்,வெளிபடுத்துதல்,இவற்றின் மூலமாக கணக்கிடுதல்(வித்தை காரகன்) இதன் பலன்கள் ஆனா பொருள் ஈட்டல் (தனகாரகன்) இம்மூன்று பொறுப்புகளும் குருவிற்கு எதை வைத்துதான் கொடுத்து இருப்பர்களோ நம் முன்னோர்கள்.
 ஜோதிடத்தில் யோகம் என்று கூறுகிற நாமின் நற் தன்மைகளின் வீரியங்கள் குருவின் தன்மையால் இன்னும் மேம்படுத்தலும் அல்லது குருவை முன்னிருத்தியே வகுத்துள்ளனர்.குரு சந்திர யோகம் கஜ கேசரி யோகம் போன்றை உதாரணங்கள்.
இத்தனை விசயங்களின் கட்டுப்படும் இருப்பதால் எதை கடந்து செல்கிற ஆன்மீக விசயங்களும் ஞான விசயங்களும் குருவே பொறுப்பு எடுக்கிறார்.
அதிக பொறுப்புகளை பிரபஞ்சத்திலும், நம் உடம்பிலும் எடுப்பதால் குருவை பற்றி எழுத ஒரு புத்தகம் எழுதுகிற அளவுக்கு இடம் தேவை என்றல்லும் எனக்கு தெரிந்தவரை நான் அறிந்த புரிந்து கொண்ட குரு விஷயங்களை கொடுத்து இருக்கிறேன் என்ற நம்பிக்கையோடு என் குருவை நமஸ்கரித்து முடிக்கிறேன். இன்னும் வரும்....... அஸ்ட்ரோ பாபு